இன்டர்ன்ஷிப்பின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்களை (internships for college students in tamil ) இந்த வீடியோ விவரிக்கிறது.
பெரும்பாலும் இன்டர்ன்ஷிப் என்றால் மக்களிடையே தவறான புரிதல் உள்ளது. இந்த வேலைவாய்ப்பு பயற்சியில் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது , நேரத்தை வெட்டியாக கடத்தலாம் என்று மக்கள் கருதுகின்றனர். ஆனால் அதில் உண்மையில்லை. இன்டர்ன்ஷிப்பில்
( importance of internships for college students) நிறைய பயன்கள் உள்ளன. நம் கெரியர் வளர்ச்சியில் இன்டர்ன்ஷிப்பின் பயன்கள் இன்றியமையாதது. இன்டர்ன்ஷிப்பின் பயன்கள் மற்றும் அவசியம் குறித்து இங்கேபார்க்கலாம்.
கல்லூரியில் உங்கள் கெரியருக்கு தேவையான படிப்பை படிக்க முடியும். அதேபோல் உங்கள் விருப்பத் துறையில் முதுநிலைப் பட்டப்படிப்பை படிப்பதன் மூலம் உங்கள் கெரியர்க்கு அது பயனுள்ளதாக இருக்கும். ஆனால் உங்கள் கெரியர் இலக்கை அடைய வேண்டும் என்றால் அனுபவ பயிற்சி நிச்சயம் தேவை. இந்த அனுபவ பயிற்சியை இன்டர்ன்ஷிப் மூலமாக தான் நீங்கள் பெற முடியும்.
தொழிற் பழகுநர் (அப்பரன்டிஸ்ஷிப்) என்று அழைக்கப்பட்டு வந்ததை தற்போது இன்டர்ன்ஷிப் ( internship benefits in tamil ) என்கிறார்கள். சம்பளம் மற்றும் சம்பளமில்லாதது என இன்டர்ன்ஷிப் இரண்டு வகைப்படும். கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல் நிறுவனங்களும் இன்டர்ன்ஷிப் மூலம் பயன்பெறுகின்றன. அதில் மாணவர்கள் அடையும் பயன்களை இப்போது பார்க்கலாம்.
பணி அனுபவம் பெறுதல்
கல்லூரிக்கு போகும்போதே நல்ல பணி அனுபவத்தை இன்டர்ன்ஷிப் வாயிலாக நீங்கள் பெறமுடியும். தியரிட்டிகல் நாலேஜா கற்றுக்கொண்டதை நீங்கள் பிராக்டிக்கல் நாலேஜா கற்றுக்கொள்ள இன்டர்ன்ஷிப் உதவும். மேலும் உங்கள் பணியின் வகை, தேவையான திறன்கள், குழுப்பணி, காலக் கெடு,, தகவல்தொடர்பு, கணினித் திறன்களை இதன்மூலம் நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம்.
கெரியர் பாதையை ஆராய்வது
உங்கள் கெரியர் பாதையை தீர்மானிக்க இன்டர்ன்ஷிப் ஒரு சிறந்த வாய்ப்பு. உங்களுக்கு ஏற்ற துறையை தேர்ந்தெடுத்து, அது சரிபட்டு வருமா என்பதை இன்டர்ன்ஷிப் மூலம் நீங்கள் சோதனை செய்து பார்க்கலாம். இதை அடிப்படையாக வைத்துக் கூட வரும் காலத்தில் கெரியரை தேர்ந்தெடுக்கலாம்.
தொடர்பை ஏற்படுத்தல்
ஒரு நிறுவனத்திற்கு இன்டர்ன்ஷிப் செல்லும் போது, அங்கு பல நிலைகளில் பணிபுரியும் நபர்களுடன் உங்களுக்கு பழக்கம் ஏற்படும். இவர்கள் தொடர்பு நமக்கு இருக்குமானால், உங்களுடைய கெரியர்க்கு இவர்களிடம் நாம் உதவிகளை பெறலாம். ஒரு வேளை, வேறு பணிக்கு விண்ணப்பித்தால் இவர்களின் பெயரை பரிந்துரைக்கு பயன்படுத்தலாம்.
தன்னம்பிக்கை பெருகும் வாய்ப்பு
நீங்கள் இன்டர்ன்ஷிப் செய்யும் போது கொடுக்கப்படும் பணிகளை உங்களுடைய அனைத்து திறன்களை வைத்தும் செய்து முடித்திருப்பீர்கள். இதனால் நம்மாலும் வேலை செய்ய முடியும் என்கிற அளவிற்கு உங்களுக்கு தன்னம்பிக்கை பெருகும். இதுவும் இன்டர்ன்ஷிப்போட முக்கியமான பயன்கள்.
வேலைவாய்ப்பு கிடைக்கும்
பொதுவாக இன்டர்ன்ஷிப் முடிந்தவுடன் உங்களுக்கு நிறுவனம் சார்பில் அனுபவம் மற்றும் செயல்திறன் குறித்து கடிதம் வழங்கப்படும். ஒரு வேளை அதில் நீங்கள் நன்றாக செயல்பட்டு இருந்தால் அதே நிறுவனத்தில் நிரந்தரமாகக் கூட வேலை கிடைக்கவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
இதைத் தவிர சம்பளம் உள்ள இன்டர்ன்ஷிப்பில் நீங்கள் சேர்ந்தால், அந்த பணத்தை உங்கள் பாக்கெட் மணியாகவும், அல்லது உயர்கல்விக்கும் நீங்கள் பயன்படுத்தலாம். இன்டர்ன்ஷிப் பற்றிய குறிப்புகள் உங்கள் ரெசியூமில் இருந்தால் , நிறுவனங்களும் வேலை கொடுக்க முக்கியத்துவம் கொடுக்கும்.
இன்டர்ன்ஷிப் மூலம் நிறுவனங்களுக்கும் பல பயன்கள் உள்ளன. ஏனென்றால் புதிய சிந்தனைகள், டிரண்ட்ஸ் உள்ளிட்டவற்றை இன்டர்ன்ஷிப் செய்யும் மாணவர்கள் மூலம் பெறுகின்றன.
சரியான இன்டர்ன்ஷிப்பை கண்டறிவது எப்படி?
உங்களுக்கு ஆர்வம் உள்ள நிறுவனங்களின் பட்டியலை தயார் செய்ய வேண்டும். பிறகு உங்களுக்கு ஏற்ற நிறுவனங்களை தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்க வேண்டும். பெரிய நிறுவனங்கள் மட்டுமல்லாமல் சிறிய நிறுவனங்களிலும் நீங்கள் இன்டர்ன்ஷிப் ( how to apply for internship in tamil ) மேற்கொள்ளலாம். சிறிய நிறுவனங்களில் நீங்கள் அதிகமாக கற்றுக்கொள்ள முடியும். இன்டர்ன்ஷிப் குறித்து ”ஆட்கள் தேவை, சமூக வலைதளங்கள், நிறுவனங்களின் இணையதளம்” போன்றவற்றில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
இந்த வீடியோவின் மூலம், இன்டர்ன்ஷிப் பற்றிய சரியான புரிதல் கிடைத்திருக்கும் என்று எண்ணுகிறோம்.கெரியர் குறித்து பல பயனுள்ள தகவல்களுக்கு அரியர் இருந்தாலும் கெரியர் சேனலை சப்ஸ்கிரைப் செய்து பயன்பெறுங்கள்.
Leave a Reply