ஆர்கிடெக்ட் படிப்பில் சேர நாட்டா ( NATA 2020 Preparation Tips in Tamil ) என்றழைக்கப்படும் நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் ஆர்கிடெக்சர் ( National Aptitude Test in Architecture ) என்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் பங்கேற்பது அவசியம். ‘கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர்’ நாட்டா தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வில், தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்தியாவில் உள்ள எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் பி.ஆர்க்., படிப்பில் சேர முடியும். ஆண்டிற்கு இரண்டு முறை இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
கல்வித் தகுதி:
10 ,12-ம் வகுப்பில் கண்டிப்பாக இயற்பியல், கணிதம், வேதியியல் பாடங்களை படித்திருக்கவேண்டும். இந்த மூன்று படிப்புகளிலும் குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்று குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். நாட்டா தேர்வுக்கு ( NATA Preparation Tips in Tamil
) வயது வரம்பு கிடையாது. ஆன்லைன் வழியாக மட்டுமே இத்தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:
நாட்டா தேர்விற்கான அதிகாரப்பூர்வ இணையதளம்
www.nata.in வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதில் முதலில் யூசர் ஐடியை உருவாக்கி , படிவத்தை பூர்த்தி செய்யவேண்டும். 8 எண்கள் கொண்ட விண்ணப்ப எண் மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி தேர்வு குறித்த தகவல்கள் மற்றும் ஹால்டிக்கெட் போன்றவற்றை டவுன்லோட் செய்துகொள்ளலாம். பொதுப் பிரிவுக்கு ரூ. 1800 -ம், எஸ்.சி, எஸ்.டி- க்கு ரூ. 1500 -ம் தேர்வுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
தேர்வு முறை:
மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு ஆன்லைன் வழியாக நாட்டா தேர்வு
( How to Prepare for NATA Exam in Tamil ) நடத்தப்படுகிறது. 3 மணி நேர கால அவகாசம் வழங்கப்படுகிறது. பகுதி 1, பகுதி 2 என இரண்டு பிரிவுகளாக தேர்வு நடத்தப்படுகிறது. பகுதி 1-ல் 120 மதிப்பெண்களுக்கு கணிதம் மற்றும் பொது அறிவு பிரிவில் அப்ஜெக்டிவ் டைப் கேள்விகள் கேட்கப்படும். பகுதி 2-ல் 80 மதிப்பெண்ணிற்கு வரைதல் திறன் பரிசோதிப்படும். தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண் கிடையாது. இத்தேர்வில் ( Tips to crack NATA Exam in Tamil ) பெறும் மதிப்பெண்கள் ஒரு ஆண்டிற்கு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
தேர்வு மையங்கள் :
தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய 6 இடங்களில் நாட்டா தேர்வு ( how to prepare for NATA 2020 in Tamil ) நடத்தப்படுகிறது.
மேலும் கெரியர் குறித்து பல பயனுள்ள தகவல்களுக்கு Arrear Irundalum Career சேனலை subscribe செய்து பயன்பெறுங்கள்.
Leave a Reply