MAT நுழைவுத் தேர்வு ( MAT Exam Preparation tips in tamil ) பற்றிய விவரங்களை இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்
எம்.பி.ஏ, பி.ஜி.டி.எம் போன்ற மேலாண்மை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு தேசிய அளவில் மேட் எனப்படும் மேனேஜ்மெண்ட் ஆப்டிடியூட் தேர்வு ( MANAGEMENT APTITUDE TEST ) நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் 600-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் மேட் தேர்வின் மூலம் சேரமுடியும். இந்த தேர்வை ( what is management aptitude test ) ஆல் இந்தியா மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் நடத்துகிறது.
கல்வித் தகுதி:
இந்திய குடியுரிமை உடையவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் மேட் தேர்வுக்கு ( MAT Exam Tips in tamil ) விண்ணப்பிக்கலாம். மேட் தேர்வை எழுத வயது வரம்பு இல்லாததால் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
இணையதளம் வழியாகவோ அல்லது நேரடியாகவோ மேட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஏ.ஐ.எம்.ஏ., மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். ஆண்டுக்கு பிப்ரவரி, மே, செப்டம்பர், டிசம்பர் ஆகிய 4 மாதங்களில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தியா முழுவதும் 50-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் மேட் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய 4 இடங்களில் இந்த தேர்வை எழுதலாம். தேர்வுக்கட்டணமாக ரூ. 1550 வசூலிக்கப்படுகிறது
தேர்வு முறை :
கம்ப்யூட்டர் வழி தேர்வு மற்றும் பேப்பர் வழி தேர்வு என இருவகைகளில் இந்த தேர்வு நடத்தப்படும். மேட் தேர்வில் ( MAT exam paper and pattern in tamil ) அப்ஜெக்ட்டிவ் முறையிலான கேள்விகள் கேட்கப்படும். லாங்குவேஜ் காம்ரஹென்ஷன், மேத்தமெட்டிக்கல் ஸ்கில்ஸ், டேட்டா இன்டர்ப்பிரிட்டேஷன் அண்ட் சஃபீஸியன்சி, இன்டலிஜென்ஸ் அண்ட் கிர்ட்டிக்கல் ரீசனிங், இந்தியன் அண்ட் குளோபல் என்விரான்மெண்ட் ஆகிய பகுதிகளில் இருந்து 200 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இரண்டரை மணி நேரத்திற்கு இத்தேர்வு ( MAT Exam Preparation tips in tamil ) நடைபெறும். தவறாக விடைக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். விடையளிக்காத வினாக்களுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படமாட்டாது.
லாங்குவேஜ் காம்ரஹென்ஷன்
வாசிப்பு மற்றும் மொழித் திறனை சோதிப்பதற்கான கேள்விகள் கேட்கப்படும். இந்த பகுதிக்கு 40 மதிப்பெண்களும் அரை மணிநேரம் கால அவகாசம் வழங்கப்படும்
மேத்தமெட்டிக்கல் ஸ்கில்ஸ்
ஜியாமெட்ரி, அரித்மெட்டிக், லாகரிதம், அல்ஜீப்ரா, நம்பர் சிஸ்டம் ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் இருக்கும். 40 மதிப்பெண்கள், 40 நிமிடங்கள் வழங்கப்படும்.
டேட்டா இன்டர்ப்பிரிட்டேஷன் அண்ட் சஃபீஸியன்சி
பார் கிராஃப், லைன் சார்ட், பை சார்ட் மாதிரியான கேள்விகள் இருக்கும். 40 மதிப்பெண்கள், 35 நிமிடங்கள் வழங்கப்படும்.
இன்டலிஜென்ஸ் அண்ட் கிர்ட்டிக்கல் ரீசனிங்
கோடிங் அண்ட் டீகோடிங், மேட்ரிக்ஸ் அரேஞ்மெண்ட், விஷுவல் ரீசனிங் பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். 40 மதிப்பெண்கள், 30 நிமிடங்கள் வழங்கப்படும்
இந்தியன் அண்ட் குளோபல் என்விரான்மெண்ட்
நாட்டு நடப்பு, சுற்றுச் சூழல் மற்றும் சமூகம் சார்ந்த உங்கள் பார்வை பற்றிய கேள்விகள் இருக்கும். 40 மதிப்பெண்கள், 15 நிமிடங்கள் வழங்கப்படும்
மேட் தேர்வு ( tips and tricks to crack MAT exams ) பற்றிய பல சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.aima.in என்ற இணையதளத்தில் பார்க்கவும். மேலும் கெரியர் குறித்து பல பயனுள்ள தகவல்களுக்கு Arrear Irundalum Career சேனலை subscribe செய்து பயன்பெறுங்கள்.
Leave a Reply