மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்புகள், கடமைகள், அதிகாரங்கள் மற்றும் வாக்களிப்பதன் அவசியம் ( politicians responsibilities in tamil ) குறித்து இந்த மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
வாக்களிப்பது நாடு நமக்கு அளித்த உரிமை. அதை சரியாக பயன்படுத்துவது நம் தலையாய கடமை. வரும் 5 ஆண்டுகளுக்கு நம்மை ஆளப்போவது யார்? என்பதை நாம் செலுத்துகிற வாக்கு தான் தீர்மானிக்கிறது. நம்முடைய கடமையை தெரிந்து கொண்டோம். நம்மை ஆளுகின்றவர்களின் கடமைகளை இப்போது பார்க்கலாம்.
நாடாளுமன்ற தேர்தல்- 2019:
நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 11 -ம் தேதி தொடங்கி மே மாதம் 19-ம் தேதி வரை, 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
மக்களவை உறுப்பினர்கள் மக்களவை தேர்தலின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த உறுப்பினர்கள் சேர்ந்து நாட்டின் பிரதமரை தேர்வு செய்வார்கள். பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு குடியரசு தலைவர் பதவி பிரமாணம் செய்து வைப்பார். நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக பிரதமர் அவசியம் இருத்தல் வேண்டும் அல்லது 6 மாதங்களுக்குள் இந்த இரு அவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
பிரதமரின் பொறுப்புகள் மற்றும் கடமைகள்
அமைச்சரவை உறுப்பினர்களை தேர்வு செய்வது, துறைகளை ஒதுக்குவது, ஒருங்கிணைப்பது , பிரச்சனைகளை தீர்ப்பது பிரதமரின் ( prime minister duty in tamil ) பணியாகும். அனைத்து அதிகாரங்களும் உள்ள குடியரசுத் தலைவருக்கும் தலைமை ஆலோசகராக பிரதமர் இருப்பார். சட்டம் இயற்றுதல் தொடர்பாக ,எதிர்கட்சியினர் கேட்கும் கேள்விகளுக்கு பிரதமர் ( prime minister roles in tamil ) பதிலளிப்பார். நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுதல், உறுப்பினர்களிடத்தில் ஆதரவை பெறுதல் போன்றவற்றுக்கு பிரதமரே தலைமை வகிப்பார். வெளிநாடுகளில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை உணர்த்தும் பிரதிநிதி பிரதமர். முப்படைகளான கடற்படை, ராணுவம், விமானப்படை ஆகியவையின் தலைமை தளபதிகள், அட்டர்னி ஜெனரல், உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள், பொது தணிக்கை அதிகாரி, தலைமை தேர்தல் ஆணையர், யூபிஎஸ்சி ஆணைய தலைவர் ஆகி்யோரை நியமிக்க குடியரசு தலைவரிடம் பிரதமர் பரிந்துரைப்பார். நாடாளுமன்றத்தை கலைக்க குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்யவும் பிரதமருக்கு அதிகாரம் உள்ளது.
நாடாளுமன்ற எம்.பி.களின் பொறுப்புகள்:
நாம் தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல பொறுப்புகள் உள்ளன. சட்டமியற்றும் அதிகாரங்கள், நிறைவேற்றும் அதிகாரங்களை மேற்பார்வை செய்தல், மக்களின் குறை , நிறைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசுதல், ஒவ்வொரு மாநிலமும் நிதியை சரியாக செலவு செய்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். இத்தனை அதிகாரங்கள் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கினாலோ, குற்றச் செயல்களில் ஈடுபட்டாலோ அல்லது இந்திய குடிமகனாக இல்லாமல் இருந்தாலோ தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள்.
முதலமைச்சர் மற்றும் எம்.எல்.ஏக்கள்:
மத்தியில் பிரதமரும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மேற்கொள்ளும் பணியை, மாநிலங்களில் முதலமைச்சர் மற்றும் எம்.எல்.ஏக்கள் ( mla duties and responsibilities in tamil ) செய்வார்கள். குடியரசு தலைவரை போல மாநிலங்களில் ஆளுநர் செயல்படுவார்.
மக்கள் பிரதிநிதிகளின் கடமைகளை தெரிந்துகொண்டீர்கள். அவர்களுக்கு பல பொறுப்புகள் இருப்பதுபோல நமக்கும் வாக்களிக்கும் பொறுப்பும், கடமையும் உள்ளது. மாநிலங்கள்- 530, யூனியன் பிரதேசங்கள்- 20, ஆங்கிலோ இந்தியன்- 2 ( குடியரசு தலைவர் நியமிப்பார்) என மக்களவையை பொறுத்தவரை மொத்தம் 552 சீட்டுகளுக்கு தேர்தல் நடைபெறும்.
நாம் செலுத்தும் வாக்கு, நாட்டின் தலையெழுத்தையே மாற்றும் வல்லமை கொண்டது. உலகளவில் இந்தியாவின் அடையாளத்தை மாற்றக்கூடிய பொறுப்பு நம்முடையது. எனவே ஒவ்வொருவரும் பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களித்து நமது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்.
வாக்காளர்கள் தேர்ந்தெடுப்பது பிரதிநிதிகளைத்தான் – எஜமானர்களை அல்ல!
Roles of Politicians in India
Voting season is filled with urging voices, opinions and thoughts. As citizens of a country, one needs to be responsible and vote for their leader wisely, keeping in mind the policies and decisions that will bring about a change in the country. In India, our vote determines who will rule for the next 5 years.
The election takes place in 7 phases for 543 parliamentary constituencies spread throughout the country.
After the Lok Sabha elections, the Prime Minister will be elected. The Prime Minister of a country should be a member of the Lok Sabha/ Rajya Sabha or should be elected by the members of the 2 houses within a duration of 6 months.
As a Prime Minister of a country, the elected individual should choose his cabinet members, and assign, coordinate and resolve issues. The Prime Minister will preside over the legislative assembly and will also gain support from the parliament members.
The elected members of the Parliament will have new responsibilities including legislative powers, supervision of grievances, addressing the people’s needs and many more. They will also have to overlook the allocation of money. However, if they are found to be involved in any criminal acts, they will be dismissed.
The Chief Ministers and State MLAs carry out the Prime Minister’s work by performing it based on each state’s needs.
We hope this video was informative and helped you make the decision to think and vote responsible! Don’t forget to like, comment and share. Don’t forget to subscribe to our channel –
https://www.youtube.com/channel/UCcc7tmGh5cCPylLQHIHtyEQ?sub_confirmation=1
Leave a Reply