கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பங்களில் பூர்த்தி செய்ய வேண்டிய முக்கிய அம்சங்களை (how to fill college admission form online in tamil) இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
12-ம் வகுப்பு தேர்வை முடித்த பின், அடுத்தது என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்ற தீவிர யோசனையில் மாணவர்கள் இருப்பார்கள். அடுத்து என்ன படித்தால் சிறந்தது என்று முடிவு செய்த பின்னர் அது தொடர்பான தகவல்களை சேகரிக்க வேண்டும். அதேபோல் விண்ணப்பங்களை (how to fill college application in tamil) வாங்கி குவிக்கும் முன் யோசித்து செயல்பட வேண்டும். வாங்கிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கு குழப்பமா? இதோ கல்லூரி விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான 7 எளிய வழிமுறைகளை (tips to fill college application in tamil) இப்போது பார்க்கலாம்.
கல்லூரிகளின் பட்டியலை தயார் செய்தல்
எங்கு? எந்த கல்லூரிகளில் விண்ணப்பிக்க போகிறீர்கள் என்பது தொடர்பான பட்டியலை தயார் செய்வது அவசியம். இதில் உங்கள் ஊர், நாடு மற்றும் சர்வதேச அளவிலான கல்லூரிகளின் பட்டியலை தயார் செய்து வைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வழங்கப்படுவதை தெரிந்து வைத்தல்
பொதுவாக மார்ச்சில் இருந்து மே மாதம் வரை கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. படிக்க முடிவு செய்த கல்லூரியின் விண்ணப்பத்தை மட்டும் வாங்கினால் போதும் என்ற மனநிலையில் இல்லாமல் பிற கல்லூரிகளின் விண்ணப்பங்களையும் வாங்கி வைத்தால் அது உபயோகமாக இருக்கும்.
காலக்கெடு பற்றிய விழிப்புணர்வு
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் காலக்கெடு குறித்து தெரிந்து வைத்து இருத்தல் வேண்டும். சில சமயம் குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பங்களை கொடுக்க தவறினால் கல்லூரியில் சேரமுடியாத நிலை ஏற்படலாம்.
அறிவுரைகளை கவனமாகப் படிக்கவும்
விண்ணப்பங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவுரைகளை கவனமாக படித்து புரிந்துகொண்ட பின் பூர்த்தி செய்ய வேண்டும். அடித்தல் திருத்தல் இல்லாமல் விண்ணப்பங்களில் எழுதுவது சிறந்தது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது டைப் செய்வதில் கூடுதல் கவனம் தேவை.
பெட்டிகளை காலியாக விட வேண்டாம்
விண்ணப்பத்தில் உள்ள தெரியாத பெட்டிகளை காலியாக விட வேண்டாம். இதன் காரணமாக கூட விண்ணப்பம் சில சமயம் நிராகரிக்கப் பட வாய்ப்புள்ளது. ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது, டிராஃப்டில் வைத்து பின்னர் சமர்ப்பித்தல் சிறந்தது.
தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தல்
உயர்நிலைப் பள்ளியின் ஒருங்கிணைந்த மார்க் ஷீட், உங்களைப் பற்றிய குறிப்புக் கட்டுரை , பரிந்துரை கடிதம், சேர்க்கை தேர்வு மதிப்பெண், போர்ட்ஃபோலியோ போன்ற தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இது கல்லூரிகளுக்கு இடையே மாறுபடும்.
பிழை திருத்தம்
விண்ணப்பங்களில் எழுத்துப் பிழை அல்லது தவறாக டைப் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். பெற்றோர் அல்லது நண்பர்களிடம் படித்து பார்க்க சொல்லி பிழைகளை திருத்தலாம். உங்களைப் பற்றிய தவறான தகவல் கொடுக்கப்பட்டிருந்தால் அதனை நீக்கி சரியான தகவலை கொடுக்க வேண்டும்.
பூர்த்தி செய்து அனுப்பிய விண்ணப்பங்களை நகல் எடுத்து வைப்பது நல்லது. இந்த 7 எளிய வழிமுறைகளை பின்பற்றி, விண்ணப்பத்தை (how to fill college application form in tamil) பூர்த்தி செய்து சிறந்த கல்லூரியில் சீட் கிடைக்க எங்கள் சேனல் சார்பாக வாழ்த்துக்கள். மேலும் கெரியர் குறித்து பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள Arrear Irundalum Career சேனலை subscribe செய்யுங்கள்
How To Fill A College Application Form
After a well-deserved break, several colleges have begun to roll out application forms for students interested in studying courses offered by them. For every student who is new to this process, are you aware of how to go about the application process? Watch this video to know exactly what to do!
List Out The Colleges:
Prepare a list of colleges you would be interested in applying to. Do not hesitate to apply to colleges that may not seem easy to get into. Prioritise them based on your interest, and categorise them based on locality as well.
Keep Track of Dates:
Always keep track of college websites and notifications being issued on them. The process becomes a lot easier by doing so.
Be Aware of Deadlines:
Ensure that you know when the last date for submission is to avoid any untoward situations.
Read Instructions Carefully:
Make note of any special instructions that may be listed. Each college may have a different list of instructions.
Avoid Empty Boxes:
Leaving boxes empty may lead to a rejection of your application form. Read all questions carefully before answering them.
Submission of Documents:
Some of the important documents to submit include your consolidated high school marksheet, GRE/GMAT scores, letter of recommendation, birth certificate, etc. Originals as well as scanned copies will be required.
Proofread:
Read through the application form once more before submitting. This will help you avoid any errors you may have previously overlooked. Verify it again to check for errors and inaccuracies.
We hope you enjoyed our video! Don’t forget to like, comment and share. Don’t forget to subscribe to our channel –
https://www.youtube.com/channel/UCcc7tmGh5cCPylLQHIHtyEQ?sub_confirmation=1
Leave a Reply