டிஜிட்டல் மார்க்கெட்டிங் ( best digital marketing courses in india ) படிப்புகளை எங்கு படிப்பது? எப்படி படிப்பது? உள்ளிட்டவற்றைப் பற்றி இந்த வீடியோ விவரிக்கிறது.
நம் நாட்டில் இண்டெர்நெட் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2018- ஆம் படி 500 மில்லியன் அதாவது 50 கோடினு புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இந்த நிலை இன்னும் உயர்ந்து கொண்டே இருக்கு. டிஜிட்டல் மீடியாவோட வளர்ச்சியை இதில் இருந்தே நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் அவங்க பிராண்ட்டை சந்தைப்படுத்துவதற்கு டிஜிட்டல் மீடியாவை தேடி செல்கிறார்கள். இதன் காரணமாக டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையும் ( digital marketing courses in india ) நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறை வளர்ந்து வருவதால், கல்லூரி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை இந்த துறை சார்ந்த படிப்புகளை படிக்க ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்புகளை எங்கு படிக்கிறது? எப்படி படிக்கிறது ? என்ற குழப்பத்தில் இருக்கிறீர்களா? கவலைய விடுங்க. இந்த வீடியோ உங்களுக்கானது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங்கிற்கான தேவை அதிகரித்துள்ளதால் பல கல்வி நிறுவனங்கள் இந்த துறை சார்ந்த படிப்புகளை வழங்குகின்றன. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு நிலைகளில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்க் படிப்புகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.
ஆன்லைன் படிப்புகள் :
ஆன்லைன் படிப்புகளை பொறுத்தவரை வேலைக்கு செல்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வேலை நேரம் முடிந்தபின் வீட்டிற்கு வந்து தங்கள் ஓய்வு நேரத்தில் சவுகரியமாக படிக்க முடியும். நகரங்களில் உள்ள சிறந்த கல்விநிறுவனங்களை தேடி அலையும் நேரத்தை நாம் இதன் மூலம் மிச்சப்படுத்தலாம். Webinar சாஃப்ட்வேர் வாயிலாக மாணவர்கள் படிப்புகளை படிப்பதோடு வகுப்பு அறையைப் போல வழக்கமாக ஆசியர்களிடம் எளிதாக கலந்துரையாடலாம். ஒரு வேளை webinar வகுப்பை நீங்கள் தவறவிட்டால் அதனை ரெக்கார்ட் செய்து வைத்து, பின்னர் உங்களின் வசதியான நேரத்தில் படிக்கலாம்.
ஆன்லைனில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் :
சர்வதேச தரத்தில் ஆன்லைனில் படிக்க விரும்புபவர்கள்
HootSuite Social Media Certification, Hubspot academy வழங்கும் இரண்டு படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கலாம். இதைத் தவிற udemy, udacity, cousera உள்ளிட்ட ஆன்லைன் கற்றல் தளங்களிலும் படிக்கலாம்.
ஆஃப்லைன் படிப்புகள்:
வகுப்பறையில் படிக்க ஆர்வமுள்ளவர்கள் தாராளமாக ஆஃப்லைனை படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம். இதில் நேரடியாக ஆசிரியர்களிடம், உடன் படிப்பவர்கள் அல்லது நண்பர்களிடம் நமது சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்துக் கொள்ளலாம்.
வகுப்பறை மற்றும் ஆன்லைனில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள்
இந்தியாவில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்புகளை வழங்கும் இந்திய மேலாண்மை கழகங்கள்:
சான்றிதழ்
சான்றிதழ் வாங்குவது முக்கியமல்ல. எந்த கல்வி நிறுவனத்தில் சான்றிதழ் வாங்குகிறீர்கள் என்பது தான் முக்கியம். ஏனென்றால் சான்றிதழ் வழங்கும் நிறுவனங்களை வைத்துத் தான் அதன் தரத்தையும் மதிப்பிடுவார்கள். கல்லூரி படித்து முடித்துவிட்டு ஃப்ரஷரா வேலை தேடுபவர்கள் அல்லது மற்றொரு வேலைக்கு மாறும்போதும் சான்றிதழின் மதிப்பு ரொம்ப முக்கியம். அதேபோல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து சான்றிதழ் வழங்குகிறார்களா என்பதை ஒருமுறைக்கு பலமுறை விசாரிப்பது நல்லது.
பாடத்திட்டம் மற்றும் பயிற்றுனர் அனுபவம்
பயிற்றுனர்/ ஆசிரியரை பொருத்தவரை எந்த அளவுக்கு அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். பாடத்திட்டம் புதுப்பிக்கப்பட்டதா என்பதையும் விசாரிக்க வேண்டும். நவீன தொழில்துறைக்கு ஏற்ப பாடத்திட்டம் உள்ளதா என்பதை ஆராய வேண்டும்.
விமர்சனங்கள் மற்றும் பரிந்துரைகள்:
தொழில்துறை வல்லுநர்களிடமும் , முன்னாள் மாணவர்களிடமும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ( digital marketing training in india ) தொடர்பான ஆலோசனைகளை கேட்பதன் மூலம், நாம் ஒரு நல்ல முடிவு எடுக்க முடியும். முன்னாள் மாணவர்கள் கொடுக்கும் கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை நாம் கண்டிப்பாக நம்பலாம்.
பணியமர்த்தல் மற்றும் சம்பள விகிதம்
இந்த கல்வி நிறுவனத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்பை படித்தால் வேலைக் கிடைக்குமா? , ஊதிய விகிதம் என்ன? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். இதையும் முன்னாள் மாணவர்களிடம் ஆலோசித்தால் ஒரு தெளிவு கிடைக்கும். முக்கியமாக அந்த நிறுவனத்தில் பணியமர்த்தும் பிரிவு, கார்ப்பரேட் நிறுவனங்களோடு தொடர்பில் உள்ளதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுதல் நல்லது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்புகள் ( digital marketing courses scope in India ) குறித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். மேலே கொடுக்கப்பட்ட டிப்ளமோ அல்லது பட்டப் படிப்பை தேர்வு செய்து டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் சாதிக்க அரியர் இருந்தாலும் கெரியர் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். கெரியர் குறித்து பல பயனுள்ள தகவல்களை Arrear Irundalum Career சேனலை Subscribe செய்து பயன்பெறுங்கள்.
Looking for the best digital marketing courses in India? You’ve come to the right place!
India’s internet users had crossed 50 crores in 2018. Digital Marketing is growing by leaps and bounds and many students are keen about finding the best digital marketing courses in India. Here’s a quick rundown.
Online Courses
Online courses are useful for employees as you can head over to multiple online portals in your free time to complete various digital marketing courses in India. Manipal ProLearn, upGrad and TalentEdge, Digital Vidya, Simplilearn are good places to start. Read more about the best digital marketing courses in India here – https://www.socialbeat.in/blog/digital-marketing-courses-in-india/
Offline courses
If you prefer going to a classroom, you still have multiple digital marketing courses in India to choose from. Look for Social Samosa, Simply Digital and EduPristine.
Top Business Schools in India
There are multiple business schools offering digital marketing courses in India:
Now that you know where to complete your digital marketing courses in India, here are a few tips to keep in mind
Curriculum and Instructor Experience
We need to know how much experience the instructor/teacher has. You should also investigate whether the curriculum has been updated and tailored to today’s industry standards.
Reviews and recommendations
We can make a good decision by asking industry experts and former students for advice on digital marketing courses in India.
Certifications
Every course will end with an exam and must give its students a certification or proof of completion. Ensure you check with your institution about certificates before enrolling.
We hope this video on digital marketing courses in India was informative. Subscribe to our channel for more career guidance tips in Tamil – https://www.youtube.com/channel/UCcc7tmGh5cCPylLQHIHtyEQ?sub_confirmation=1
Like, subscribe and follow us on social media!
Facebook: https://www.facebook.com/Arrear-Irund…
Instagram: https://www.instagram.com/arrearirund…
ShareChat : https://b.sharechat.com/1Tyh3JRERT
Helo : http://m.helo-app.com/s/mSvQUTF
Tik Tok : http://vm.tiktok.com/eeSpEB
Website – https://www.arrearirundalumcareer.in/
Leave a Reply