12-ம் வகுப்புக்கு பின் உங்கள் கெரியர் எப்படி? துறை சார்ந்த படிப்புகளின் விவரம் (career guidance after 12th in tamil) குறித்து இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக 12-ம் வகுப்பை படித்து முடிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் அடுத்து என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்ற குழப்பத்தில் இருப்பார்கள். தங்களுக்கு தெரிந்தவர்கள் வெற்றி கண்ட துறையை தேர்ந்தெடுத்து படிப்பது, பெற்றோர்களின் வற்புறுத்தலினால் ஒரு துறையை தேர்ந்தெடுப்பது, நண்பர்களுடன் சேர்ந்து அனைவரும் ஒரே துறையை படிப்பது (how to choose a career after 12th in tamil) போன்ற முடிவுகளை மாணவர்கள் எடுக்காமல் இருப்பது நல்லது. உயர் கல்வியை தேர்வு செய்யும்முன், எந்த துறையை தேர்வு செய்து படித்தால் தனது லட்சியத்தை அடையலாம் என்பதை மாணவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். 12ம் வகுப்புக்கு பின் தேர்ந்தெடுக்க வேண்டிய பல துறைகள் (career options after 12th in tamil) பற்றிய தகவல்களை இந்த வீடியோவின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்.
(((( Check out for other Career Tips High Demand Skills : https://www.youtube.com/watch?v=PEKPs… Career tips in Sports: https://www.youtube.com/watch?v=YFnpT… Website : Website: https://www.arrearirundalumcareer.in/ ))))
அறிவியல், வணிகவியல் , ஹியூமானிட்டிஸ்: பள்ளிகளில் அறிவியல், வணிகவியல் , ஹியூமானிட்டிஸ் போன்ற துறைகளை மாணவர்கள் படித்திருப்பார்கள். பொறியியல் துறை: பொறியியல் துறையில் ஏராளமான படிப்புகள் உள்ளன. ஆட்டோமொபைல், நானோ டெக்னாலஜி, தகவல் தொழில்நுட்பம், எலக்டிரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், ஈசிஇ, பயோ மெடிக்கல், பயோ டெக்னாலஜி, வேளாண் பொறியியல் மற்றும் கணினி சார்ந்த பல படிப்புகள் கொட்டிக்கிடக்கின்றன
வர்த்தகம் மற்றும் பங்குச்சந்தை: சிஏ, சிஎஸ், கணக்காளர்கள் போன்ற படிப்புகளை தேர்வு செய்வதன் மூலம் நல்ல ஊதியத்துடன் கூடிய பணிகளில் அமரலாம்.
புள்ளியியல்: டேட்டா அனலிட்டிக்ஸ், டேட்டா மைனிங் போன்ற துறைகளுக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது
சட்டப்படிப்பு: குடும்பம், கம்பெனி, தொழிலாளர், பொது, அரசியலமைப்பு, குற்றவியல், அறிவுசார் சொத்துரிமை, தனிப்பட்ட சட்டம் ஆகிய துறைகளில் நிபுணர்கள் தேவைப்படுகின்றனர்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் : சமூக வலைதளங்களான பேஸ்புக், யூடியூப், லிங்கிடின், டிவிட்டர் போன்றவைகளில் விளம்பர யுத்திகளை புகுத்தும் படிப்புகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.
டிசைனிங்: கிராபிக்ஸ் டிசைனிங், ஃபேஷன் டிசைனிங், வெப் டிசைனிங் போன்ற வரைகலை படிப்புகளுக்கு எப்போதுமே டிமாண்டுகள் உண்டு.
படைப்பாற்றல் திறன்: போட்டோகிராஃபி, சினிமேட்டோகிராஃபி, சவுண்ட் இன்ஜினியரிங், ஆடியோ மிக்சிங், திரைப்பட இயக்குநர் போன்றவைகளை தேர்வு செய்து உங்கள் படைப்பாற்றல் திறன்களை வெளிப்படுத்தலாம்.
12-ம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று (best career option in tamil), உயர்கல்வியை குழப்பமின்றி தேர்வு செய்து உங்கள் லட்சியத்தை அடைய AIC சேனல் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள். மேலும் கெரியர் குறித்த பல பயனுள்ள தகவல்களுக்கு Arrear Irundalum Career சேனலை Subscribe செய்யுங்கள்
Leave a Reply