ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் ( career in artificial intelligence in tamil )என்றால் என்ன? மற்றும் அதன் பயன்களை இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட்டில், பல சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களை நாம் பார்த்திருப்போம். இந்த படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் மெஷின் அல்லது ரோபோ மனிதர்கள் போன்று நடித்திருப்பதை நாம் ரசித்திருப்போம். சினிமாவில் மட்டுமல்லாமல் , நிஜ வாழ்க்கையிலும் பல இடங்களில் மெஷின் அல்லது ரோபோவின் பயன்களை பார்க்கிறோம். இதைத் தான் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் என்கிறோம். இதன்மூலம் மனிதர்கள் செய்யும், பணிகளை, மெஷின்கள் மிக துல்லியமான முறையில் செய்ய முடியும். ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் மற்றும் அதன் பயன்களை இங்கே பார்க்கலாம்.
ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ்:
ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் ( how to have a career in ai ) என்பது செயற்கை நுண்ணறிவு திறனாகும். நுட்பமான இயந்திரங்களை நவீன வகையில் உருவாக்கி மனிதர்களைப் போல செயல்பட வைக்கும் தொழில்நுட்பமே ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் ஆகும். நாம் கொடுக்கும் இன்புட்டிற்கு தகுந்ததுபோல் அதுவாகவே செயல்படும் மெஷின்களை கொண்டது இது. விஞ்ஞானமும், பொறியியலும் இணைந்த ஒரு நவீன துறையை ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் என்கிறோம்.
விரிட்சுவல் ரியலிட்டி தொழில்நுட்பம்:
வாய்ஸ் ஆப் கூகுள், ஐபோன் சிரி, அமேசானின் அலெக்சா போன்ற சாப்ட்வேர்கள் அனைத்தும் விரிட்சுவல் ரியலிட்டி தொழில்நுட்பம் தான். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏராளமான விளையாட்டுகளை , கேமிங் நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதேபோல் விரிட்சுவல் ரியலிட்டி – வீடியோவும் பிரபலமாகி வருகிறது.
பல துறைகளில் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் :
ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ்-ன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பல நிறுவனங்கள் இதில் முதலீடு செய்கின்றன. இந்த முதலீடு டிஜிட்டல் மாற்றத்தை நிறுவனங்களில் கொண்டு வர உதவியாய் இருக்கும். நிறுவனங்களின் அனைத்து செயல் முறையையும் தானாக இயங்கும் வகையில் வடிவமைத்து , அதில் நல்ல லாபம் கொண்டு வர வழிவகை செய்கிறார்கள். பல துறைகளில் இந்த ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் ( career in ai in tamil ) தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகின்றன. வரும் 2021 -ம் ஆண்டிற்குள், 75% நிறுவனங்கள் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் அடிப்படையில் அமைக்கப்பட்ட தொழில்நுட்பத்தை உபயோகிப்பார்கள் என சில புள்ளி விவரங்கள் சொல்கின்றன. வங்கி மற்றும் நிதித் துறை, சில்லறை விற்பனை, கல்வி, லாஜிஸ்டிக்ஸ், இன்சூரன்ஸ், சுகாதாரத் துறை, சுற்றுலா துறை உள்ளிட்ட பல துறைகளில் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றன.
கல்வித் தகுதிகள் :
இளநிலை பட்டப்படிப்பில் சேர 12 ம் வகுப்பில் கட்டாயமாக இயற்பியல், கணித பாடங்களை படித்திருக்க வேண்டும். அதேபோல் முதுநிலை படிப்பிற்கு பி.எஸ்சி., /பி.இ.,/பி.டெக்.படிப்புகளில் கணினி மற்றும் கணிதம் முக்கிய பாடங்களாக படித்திருக்க வேண்டும். மேலும் கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம், தகவல் தொழில்நுட்பம், ஸ்டேடஸ்டிக்ஸ், நிதி மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பு.
கல்வி நிறுவனங்கள்:
மும்பை, சென்னை , பெங்களூரு, கொல்கத்தா, ஹதராபாத் ஆகிய ஐ.ஐ.டி- களில் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் (artificial intelligence career paths) சார்ந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும் ஸ்டான்போர்டு யுனிவர்சிட்டி, முனீச் யுனிவர்சிட்டி, ஹார்வர்டு யூனிவர்சிட்டி, நான்யாங் டெக்னாலஜிக்கல் யுனிவர்சிட்டி உள்ளிட்ட பல வெளிநாட்டு கல்வி நிறுவனங்களும் ஏஐ தொடர்பான படிப்புகளை வழங்குகிறது. அதேபோல், கூகுள், ஸ்டான்போர்டு யுனிவர்சிட்டி, எம்.ஐ.டி, கொலம்பியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏஐ சார்ந்த படிப்புகளை ஆன்லைனில் வழங்குகின்றன. இந்த படிப்புகளை udemy போன்ற இ- லேர்னிங் முறையிலும் படிக்கலாம்.
கற்பிக்கப்படும் முக்கிய பாடங்கள்:
இமேஜ் பிராசசிங் – மிஷின் விஷன், கம்புடேஷ்னல் இன்டெலிஜன்ஸ், நியூரல் நெட்வொர்க்ஸ், மிஷின் லேர்னிங், ஸ்டேடஸ்டிக்ஸ், கணிதம், மாடலிங் – சிமுலேஷன் ஆப் டிஜிட்டல் சிஸ்டம் , டிசைன் பேட்டர்ன் உள்ளிட்டவற்றை ஏஐ மூலம் படிக்கலாம்.
தொழில்நுட்பத் திறன்கள்
புரோகிராமிங் லேங்குவேஜ் மற்றும் அதனோடு Java, Python, C++ ஆகியவைகளில் நிபுணராக இருப்பது நல்லது. இதில் தியேரிட்டிக்கல் மற்றும் பிராக்டிக்கல் அறிவு ரொம்ப முக்கியம். லீனியர் அல்ஜீப்ரா, கேல்குலஸ் , அல்காரிதம்ஸ் போன்றவற்றையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ், கிரியேட்டிவ் மற்றும் கிரிட்டிக்கல் திங்கிங் , இன்டஸ்டிரி ஞாலேஜ் போன்ற திறன்கள் தேவை.
ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் தொழில்நுட்பம் ( starting career in ai in tamil ) வரும்காலங்களில் இன்றியமையாத ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதேபோல் கெரியர் குறித்து பல பயனுள்ள தகவல்களுக்கு Arrear Irundalum Career சேனலை subscribe செய்து பயன்பெறுங்கள்.
Leave a Reply