Resume தயாரிப்பது எப்படி( Resume Tips in Tamil) என்ற யோசனையில் இருக்கும் நபர்களுக்கு இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக Career பாதையை நாம் முடிவு செய்தப்பின், அதில் எடுத்து வைக்கும் முதல் அடி ரெசியூம் தயாரிப்பது ( how to write a resume guide ) எப்படி என்பதைப் பற்றி தான்.
வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் ஒவ்வொருவரும் இதை எழுத வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறோம். Resume தயாரிக்கும் முறை சரியா? தவறா? என்ற சந்தேகம் நமக்குத் தோன்றலாம். அப்போது இணையத்தின் உதவியை நாம் நாடுவோம். இணையத்தில் ‘How to write a resume’ என்று தேடுவோம்.
இந்த வீடியோவில் உங்களுக்கு எழும் கேள்விகளுக்கு ( resume writing tips in tamil ) எல்லாம் பதில் கிடைக்கும் என்று நம்புகிறோம். வீடியோவின் கடைசியில் Example of a resume கொடுக்கப்பட்டுள்ளது. அதை நீங்கள் உங்களது பயன்பாட்டிற்காக screenshot எடுத்துக்கொள்ளலாம். ரெசியூம் தயாரிக்க சில வடிவங்கள்( how to create cv in tamil ) உள்ளது. எனவே அதற்கு ஏற்றார்போல் அதனை தயார் செய்ய வேண்டும். முதலில் உங்களின் பெயர் , முகவரி, மொபைல் எண், இமெயில் ஐடி போன்ற முக்கிய தகவல்களை தெளிவாக எழுத வேண்டும்.
அதேபோல் நீங்கள் உங்களை பற்றி ( resume tips in tamil ), இரண்டு அல்லது மூன்று வரிகளில் ஒரு குறிப்பும் எழுதலாம். நீங்கள் முதலில் எழுத வேண்டிய பகுதி உங்களது வேலை அனுபவத்தை பற்றி தான். இதில் நீங்கள் எவ்வளவு நேரம் எந்த இடத்தில் வேலை செய்தீர்கள், என்னவாக பணியாற்றினீர்கள் என்றும் எழுத வேண்டும். இதனோடு சேர்த்து, உங்களது பணியை பற்றி சில வரிகள் குறிப்பிட்டால் போதுமானது.
இது உங்களது முதல் வேலையாக இருந்தால், “How to write a resume for first job’ என்ற கேள்வி உங்களின் மனதில் வரும். நீங்கள் உங்களது படிப்பை பற்றி எழுத வேண்டும். நீங்கள் படித்த கல்லூரி மற்றும் பள்ளியின் பெயர், துறை, பெற்ற மதிப்பெண்கள் போன்ற படிப்பு விவரங்களை குறிப்பிடலாம். உங்களது இண்டர்ஷிப் மற்றும் பகுதி நேர வேலை பற்றி எழுதுவது நல்லது. நீங்கள் ஏற்கனவே வேலை செய்த நிறுவனத்தின் பெயர் மற்றும் பணியை பற்றி சில வரிகளில் குறிப்பிடுவது உங்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். உங்களுக்கு தெரிந்த கருவிகளை பற்றி எழுத வேண்டும். உங்களது கல்லூரி அல்லது இண்டர்ஷிப் போன்ற இடங்களில் நீங்கள் கற்று கொண்ட software, programming language போன்றவற்றை குறிப்பிடலாம். உங்களுக்கு இயல், இசை, நாடகம், விளையாட்டு போன்ற தனித்திறமைகளில் ஈடுபாடு இருந்தால், அதை பற்றி குறிப்பிடுவது நல்லது. பல நிறுவனங்கள், இது போன்ற திறன்களை பேணி வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. நீங்கள் பெற்ற பரிசுகள், நற்பெயர்கள், சான்றிதழ்கள் போன்றவற்றை தனித்திறமைகளுடன் சேர்த்து எழுத வேண்டும். ஒரு வேளை நீங்கள் paper presentations, workshops இவற்றில் எல்லாம் பங்கேற்றிருந்தால், அதை பற்றியும் குறிப்பிடுங்கள். Resume எளிய நடையில், தெளிவாக, சுருக்கமாக எழுதப்பட வேண்டும். Bullet Points பயன்படுத்தி எழுதுவது, அழகூட்டுவதோடு, குறிப்பிட்டவற்றை தெளிவாக எடுத்துக் காட்டும் .
நீங்கள் Times New Roman, Calibri போன்ற font பயன்படுத்தி எழுதுவது நல்லது. அதே போல, 11 அல்லது 12 font அளவாக கொண்டு எழுதவேண்டும் . இதை தவிர இணையத்தில் www.Myresume.com, www.resume.com போன்ற free template போன்ற தளங்களை பயன்படுத்தலாம். இதில் நீங்கள் உங்களை பற்றிய விவரங்களை குறிப்பிட்டால் மட்டும் போதும்.
Resume எழுத தேவையான format preset அதில் கிடைக்கும். உங்களுக்கு இலக்கணப் பிழை, எழுத்துப்பிழை இருக்கும் என்ற அச்சம் இருந்தால் www.grammarly.com, www.gingersoftware.com போன்ற free tools-களை பயன்படுத்தலாம். ‘How to write a simple resume’ என்ற யோசனையில் இருந்தவர்களுக்கு இந்த வீடியோ ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். அதேபோல் how to write a resume in tamil போன்ற வார்த்தைகளை யூடியூப்பில் உபயோகப்படுத்தி, அதில் கிடைக்கும் தகவல்களை பார்த்து பயன்பெறுங்கள். how to write a resume tips போன்ற கெரியர் குறித்த பல தகவல்களுக்கு Arrear Irundalum Career சேனலை Subscribe செய்து தெரிந்து கொள்ளுங்கள்
Leave a Reply