ஜர்னலிசம் ( journalism career in tamil ) பற்றிய பல்வேறு தகவல்களை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்-ல் பத்திரிகையாளராக பணிபுரியும் சுக்ஷ்மா.
ஜர்னலிசம்:
தமிழில் ஊடகவியல் அல்லது இதழியலை ஜர்னலிசம் ( career in journalism and mass communication in india ) என்கிறோம். பல்வேறு தகவல்கள், நிகழ்வுகளை நாளிதழ் , தொலைக்காட்சி உள்ளிட்டவற்றின் மூலமாக பொதுமக்களிடம் கொண்டு செல்லும் துறையை ஜர்னலிசம் என்கிறோம். இந்த துறையில் வேலை செய்பவர்கள் ஜர்னலிஸ்ட் என்று அழைக்கப்படுகின்றனர். ஜர்னலிசம் என்பது செய்திகளை சேகரித்தல், கட்டுரைகள் எழுதுதல், தொகுத்தல், வெளியிடுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பணி ஆகும்.
ஜர்னலிஸ்ட்
எழுத்தாளர் அல்லது ஊடகவியலாளர் மக்களோடு தொடர்புள்ள நிகழ்வுகளையும், எண்ணங்களையும், பிரச்சினைகளையும் விளக்குவதற்கு உண்மையான தகவல்களை வெளியிட வேண்டும் என்பதே ஊடக நெறியாக இருக்க வேண்டும், என எதிர்பார்க்கப்படுகிறது. ஊடகவியலாளர் தகவல்களைத் திரட்டி வெளியிடுவதால் உள்ளூர், மாநில, தேசிய என அனைத்து தரப்பு செய்திகளையும் உடனுக்குடன் மக்கள் அறிந்து கொள்ள முடிகிறது.
ஜர்னலிஸ்ட் ( journalism career tips in tamil ) என்பவரை பத்திரிகையாளர், எழுத்தாளர் அல்லது ஊடகவியலாளர் என்று அழைக்கின்றனர். மக்களோடு தொடர்புடைய பிரச்சனைகள், எண்ணங்கள் நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை விளக்குவதற்கு உண்மையான தகவல்களை ஊடக நெறியோடு வெளியிட வேண்டும் என்று இதில் எதிர்பார்க்கப்படுகிறது. ஜர்னலிஸ்ட் தகவல்களை திரட்டி உடனடியாக வெளியிடுவதன் மூலம் தான் மக்களால் உள்ளூர், மாநில, தேசிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள முடிகிறது
ஊடக வகைகள்:
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஊடகத் துறை உருமாறிவருகிறது.
தற்போது மக்களிடையே செல்வாக்கு பெற்றுவரும் ஊடகங்களை பார்ப்போம்.
அச்சு ஊடகங்கள் ( Print Media )
இணைய உலகில் தற்போது இருந்தாலும், இந்தியாவை பொறுத்தவரை அச்சு ஊடகங்கள் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்றுவருகிறது. நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் அச்சு ஊடகங்கள் ஆகும்.
மின்னணு ஊடகங்கள் ( Electronic Media )
தற்போதைய டிஜிட்டல் உலகிலும் மின்னணு ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், விளம்பரம் ஆகியவை மின்னணு ஊடகங்கள் ஆகும்.
இணைய ஊடகங்கள் ( Internet Media )
அதிகமான் ஸ்மார்ட் போன் பயன்பாடு மற்றும் குறைந்த விலையில் இண்டர்நெட் டேட்டா கிடைப்பதால் இணைய ஊடகங்கள் தற்போதைய சூழலில் அபரிமிதமான வளர்ச்சி கண்டுவருகிறது.
கல்வித் தகுதிகள்
ஊடகத் துறையில் நுழைவதற்கு மாஸ் கம்யூனிகேஷன் & ஜர்னலிசம், எலக்ட்ரானிக் மீடியா போன்ற படிப்புகள் உதவுகிறது. பிளஸ் 2 வில் எந்த பிரிவை தேர்ந்தெடுத்து படித்திருந்தாலும் நீங்கள் மாஸ் கம்யூனிகேஷன் படிப்பை மேற்கொள்ளலாம். பி.ஏ. பி.எஸ்சி போன்ற படிப்புகள் இதில் உள்ளன. மற்ற துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருந்தாலும் மாஸ் கம்யூனிகேஷனில், முதுநிலை படிப்பில் சேரலாம். பல்வேறு அரசு மற்றும் தனியார் பல்கலைகழகங்கள், கல்லூரிகள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஜர்னலிசத்தில் பட்டம், பட்டயம், பட்டப் படிப்புகள் வழங்குகின்றன.
ஊடகப் பிரிவுகள்:
ஊடகத் துறை வெறும் செய்திகளை மட்டும் தருவதல்ல. அதில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம், பேஷன் ஜர்னலிசம், ஸ்போர்ட்ஸ் ஜர்னலிசம், டிரேட் ஜர்னலிசம், இன்னோவேஷன் ஜர்னலிசம் உள்ளிட்ட பிரிவுகள் இதில் அடங்கும். ஜர்னலிசம் தொடர்பாக படிக்காமல், ஜர்னலிசத்தில் இது போன்ற குறிப்பிட்ட பிரிவுகளைத் தேர்வு செய்து படித்தால் அதே துறையில் பத்திரிகையாளராக பணிபுரியும் வாய்ப்புப் பெறலாம்.
வெறும் படிப்பு மட்டும் ஜர்னலிஸ்டாக ( how to pursue journalism as a career in tamil ) இருப்பதற்கான தகுதியாக பார்க்க முடியாது. சிறு வயதில் இருந்தே எதையும் ஆராய்ந்து பார்க்கும் திறன் இருத்தல் வேண்டும். பல விதமான விஷயங்களை படித்து தெரிந்து கொள்ளவேண்டும்.
நீங்களும் இதில் ஏதோ ஒரு படிப்பை தேர்ந்தெடுத்து படித்து ஊடக நெறி தவறாமல், சிறந்த ஜர்னலிஸ்டாக மக்கள் பிரச்சனைகள் வெளிக்கொண்டு வரவேண்டும் என்று அரியர் இருந்தாலும் கெரியர் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். இதேபோல் கெரியர் குறித்து பல பயனுள்ள தகவல்களுக்கு Arrear Irundalum Career சேனலை subscribe செய்து பயன்பெறுங்கள்.
Leave a Reply