தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் வழிகள், மேம்படுத்துவது ( self confidence in tamil ) குறித்து இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளலாம்.
முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார், முயற்சி திருவினை ஆக்கும் என்பவைகள் தன்னம்பிக்கையின் மூல மந்திரங்கள் ஆகும். பொதுவாக நாம் அனைவரும் எடுத்துக் கொண்ட விஷயங்களில் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவோம். ஆனால் அதில் பலர் வெற்றி பெறுவதில்லை. ஏன் வெற்றி பெறவில்லை என்று யோசிக்காமல், நம்பிக்கையின்றி ( how to build self confidence in tamil )தன் வாழ்க்கை அவ்வளவுதான், எல்லாம் என்னோட விதி என்று விட்டுவிடுகிறோம். அதேபோல் நாம் எடுத்துக்கொண்ட காரியங்களில் ஆசையுடன், விடாமுயற்சியும், நம்பிக்கையும் வைத்திருந்து, தன்னால் இதை செய்ய முடியும் ( how to develop self confidence in tamil ) என்று மன உறுதியுடன் இருந்தால் நிச்சயமாக அதில் வெற்றி பெற முடியும்.
நாம் பெரும்பாலும், கண்ணாடி முன்பு தனியாக இருக்கும்போது , நம்பிக்கையோடு பாடுவோம், நடனம் ஆடுவோம், நடிப்போம் , நடப்போம். ஆனால் இதையே ஒரு 5 பேர் முன்னாடி செய்ய சொல்லும்போது நடுங்குவோம். அதற்கு காரணம் தன்னம்பிக்கை இல்லாததுதான். தன்னம்பிக்கை என்ற வார்த்தையை நீங்கள் சமூக வலைதளங்களான பேஸ்புக் , வாட்ஸ் அப்பில் பார்த்து இருப்பீர்கள் அல்லது கேள்வி பட்டிருப்பீர்கள். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் வழிகள் பற்றி இப்போது பார்க்கலாம்.
பலன்கள்:
நாம் மேற்கொள்ளும் செயல்கள், எடுக்கின்ற முடிவுகள் போன்றவற்றில் நம்பிக்கை வைத்தாலே எதையும் நம்மால் சாதிக்க முடியும். தன்னம்பிக்கை ( self confidence tips in tamil ) ஏன் அவசியம்? அது நமக்கு எவ்வளவு உறுதுணையாக உள்ளது என்பதை இங்கே பார்க்கலாம். சரியான முடிவு எடுக்க தன்னம்பிக்கை உதவியாக உள்ளது. உங்கள் செயல்திறன் அதிகரிக்கும். உங்கள் கனவுகளை மெய்யாக்க ஊக்குவிக்கும். உங்கள் உணர்வை பிரதிபலிக்கும் .வெற்றியோட முதற்படிதான் இந்த தன்னம்பிக்கை.
தன்னம்பிக்கையை மேம்படுத்தும் வழிகள் :
தன்னம்பிக்கையை எப்படி வளர்க்கலாம் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.
எல்லா பிரச்சனைகளுக்கும் ஏதாவது ஒரு தீர்வு இருக்கும். ஒரு பிரச்சனை ஏற்படும் போது, இப்படி நடந்துவிட்டதே என்று யோசிக்காமல் அதை நீங்கள் எப்படி அணுகுவீர்கள்? எப்படி அதிலிருந்து வெளிவருவீர்கள் என்று யோசித்தாலே, உங்கள் திறன்கள் மேல் உங்களுக்கே நம்பிக்கை வரும். பாசிட்டிவ் எண்ணங்கள் மட்டும் இருந்தால் போதாது. உங்களோட செயல்களும் பாசிட்டிவாக இருப்பது ரொம்ப முக்கியம்.
உங்களை நீங்களே அழகுப்படுத்திக் கொள்ளுங்கள். நல்ல துணிகள் அணிவது, முடி திருத்துதல் மற்றும் உடல் தோற்றத்தை பராமரிப்பது போன்றவற்றை செய்வதன் மூலம் உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை பெருகும். இதனால தானாகவே தன்னம்பிக்கை வளரும். உங்கள் தோற்றம் நன்றாக இருந்தால் உங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் உங்கள் மீது நல்ல எண்ணத்தை வரவைக்கும்.
தினமும் சிறிய பணிகளை இலக்காக நிர்ணயித்து அதை செய்து முடிக்க முயற்சி செய்யுங்கள். சிறிய பணிகளை நீங்கள் தொடர்ந்து செய்வதன் மூலம் , நாளடைவில் பெரிய பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்கும் ஊக்கத்தை இது கொடுக்கும். வீட்டின் அறையை சுத்தம் செய்வது முதல் கெரியருக்கு தேவையான திறன்களை கற்றுக் கொள்வது என எதுவாக இருந்தாலும் இலக்காக வைத்து செய்வதன் காரணமாக நமது தன்னம்பிக்கை மேம்படும்.
உங்களின் ஆர்வமான விஷயங்கள் மற்றும் ஹாபியை அடையாளம் காணுங்கள். நமக்கு பிடித்தமான விஷயங்களில் நிச்சயமாக சிறப்பாக செயல்பட்டு அதில் நாம் பாராட்டுக்களை பெறுவோம். இந்த பாராட்டுக்கள் தன்னம்பிக்கையை மேம்படுத்த வழிவகுக்கும். இதனால் நீங்கள் மற்ற காரியங்களையும் சிறப்பாக செய்து முடிக்கலாம்.
ஒரு மனிதனுக்கு மைண்டு வாய்ஸ் பாசிட்டிவாவும் இருக்கும் , நெகட்டிவாவும் இருக்கும். ஒரு செயலை நாம் செய்யும் முன், பதட்டமாக இருப்போம்,அப்போது நமது மைண்டு வாய்ஸ் நெகட்டிவாக இருக்க வாய்ப்பு உள்ளது. பாசிட்டிவிட்டியால் தான் நமது மைண்டு ரிலாக்ஸ் ஆகும். மைண்டு ரிலாக்ஸ் ஆனால் தான் அனைத்து பணிகளையும் நாம் சரியாக செய்ய முடியும்.
நம் வாழ்க்கை நம் கையில் தான் உள்ளது. மற்றவர்களை உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று யோசித்தால் நம்மால் எதுவும் சாதிக்க முடியாது. நீங்கள் உங்கள் வேலை மற்றும் திறன்கள் மீது நம்பிக்கை வைத்து, உங்களுக்கு எது சரியோ அதை செய்யுங்கள். உங்களோட வேலை மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையென்றால் , பிறருக்கு எப்படி நம்பிக்கை வரும். சுற்றி இருப்பவர்கள் உங்களைப் பற்றியும், உங்கள் வேலையைப் பற்றியும் குறைக் கூறிக்கிட்டே தான் இருப்பார்கள். நீங்களும் உங்கள் இலக்கை அடைய முயற்சி செய்து கொண்டே இருங்கள்.
தன்னம்பிக்கை ஒரு நாளில் வந்துவிடுவதில்லை. நம்பிக்கை, விடாமுயற்சியினால் தன்னம்பிக்கையை நீங்கள் கட்டமைக்க வேண்டும். தோல்விகள், பிரச்சனைகள் மூலம் உங்கள் தன்னம்பிக்கையை சிதைக்காத வகையில் பார்த்துக் கொண்டால் வெற்றி உங்களை தேடி வரும்.
தன்னம்பிக்கையை மேம்படுத்த இந்த 7 வழிகளும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணுகிறோம். இதேபோல் கெரியர் குறித்து பல பயனுள்ள தகவல்களுக்கு Arrear Irundalum Career சேனலை subscribe செய்து பயன்பெறுங்கள்.
Leave a Reply