வெற்றிகரமான பிளாகர்கள் ( How to Be a Professional Blogger in tamil ) தங்கள் அனுபவங்களை இந்த வீடியோவில் பகிர்ந்து கொள்கின்றனர்.
இன்றைய சந்தைப்படுத்துதல் துறையினை ஒட்டுமொத்தமாகவே டிஜிட்டல் மீடியா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுள்ளது. தகவல் பரிமாற்றத்திற்கு டிஜிட்டல் தளத்தையே நாம் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இங்கு நமது எண்ணங்களை பகிர பல்வேறு வழிகள் உள்ளன. அரியர் இருந்தாலும் கெரியரின் இந்த பகுதியில் டிஜிட்டல் தளத்தில் தகவல் பரிமாற்றம் குறித்து வெற்றிகரமான பிளாகர்களான ( how to become a blogger in tamil ) மூவர் தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்கின்றனர்.
இதில் முதலாவதாக தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்பவர் #CoffeeTableTalks என்ற பெயரில் பிளாக் செய்து வரும் உமா தேவி. ஃபேஷன், சரும பராமரிப்பு, மகப்பேறு போன்றவை குறித்து எழுதி வருகின்ற உமா, பிளாகிங் செய்வதில் உள்ள ஈடுபாடே தன்னை இதில் ஈடுபடுத்தியதாக கூறுகிறார். இத்துறையில் பெண்களுக்கான தேவையும், இதில் கிடைக்கும் வருமானம் குறித்தும் டிப்ஸ் வழங்குகிறார். புதிதாக இதில் ஈடுபட தொடங்குபவர்களுக்கு சிறிது காலம் கடந்த பின்னரே பலன் கிடைக்கும் என தெரிவிக்கிறார் உமா
அடுத்ததாக தனது igneous_foodie பக்கத்தில் உணவு குறித்த தகவல்களை பகிர்ந்து வரும் கேசவ். சாலையோர கடைகள் முதல் ஐந்து நட்சத்திர உணவகங்கள் வரையில் பலவிதமான உணவு வகைகள் குறித்து தனது யதேச்சையான மதிப்பீடுகளை பொதுமக்களுடன் பகிர்ந்து வரும் இவர், உணவுத்துறையில் டிஜிட்டல் மீடியாவின் பங்களிப்பு பற்றி விவரிக்கிறார். சிறந்த உணவு வகைகள் குறித்த விவரங்களை தொடர்ச்சியாக மக்களுக்கு தருவது வளர்ச்சிக்கு உதவும் என எடுத்துரைத்தார்.
அடுத்ததாக தன் எண்ணங்களை #MisterMadras என்ற பக்கத்தில் பகிர்ந்து வரும் கோபி. எந்த வித கட்டுப்பாடுமின்றி எந்த தலைப்பிலும் தனது கருத்துக்களை சுதந்திரமாக முன்வைத்து வரும் கோபி, பிளாகர் ஆவதற்கு ஒரு லேப்டாப்பும், இண்டர்நெட் இணைப்பும் போதுமானது என்று தெரிவிக்கிறார். புதிதாக இத்துறைக்குள் வருபவர்கள் முதலில் ஃபேஷன் பற்றி எழுதத்தொடங்கினால் குறுகிய காலத்தில் அதிகமான பின்தொடர்பவர்களை பெற முடியும் என்று கூறுகிறார்.
புதிதாக பிளாகிங் துறைக்குள் நுழைபவர்கள் இந்த வீடியோவின் மூலமாக பிளாக்கிங் ( how to start as a blogger in tamil ) பற்றி விரிவான மற்றும் அனுபவசாலிகளின் கருத்துக்களை கேட்டு தெரிந்து கொள்ளமுடியும்.
Leave a Reply