கல்வி கடன் பெறுவதற்கான வழிமுறைகள், தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து இந்த வீடியோ விவரிக்கிறது.
நம்மில் பெரும்பாலானோர் சிறு வயதில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகள் படிக்க வேண்டும் என்று நினைத்திருப்போம். ஆனால் வயது ஆக ஆக கெரியரில் நம்முடைய இலக்கை அடைய படிப்பை தவிர அதற்கு செலவிடும் தொகை அதிகம் என உணர்ந்திருப்போம். நம் நாட்டில் யார் படிக்க விரும்பினாலும் அதற்கு நிதியுதவி தேவை. பெற்றோர்கள் நமது கல்விக்கு செலவழிக்கும் தொகையும் ஒரு விதமான நிதியுதவி தான்.
உயர்கல்வி படிக்க நினைக்கும் மாணவர்கள், சிறந்த கல்லூரிகளில் சீட் கிடைத்தும் , போதிய பணம் இல்லாததால் படிப்பை பாதியில் விட்டுவிலகும் நிலை ஏற்படுகின்றன. இதன் காரணமாக வங்கிகளின் மூலம் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. உயர்கல்வி பயிலும் மாணவர்கள் அனைவரும் கல்விக் கடனைப் பெற முயற்சிக்கலாம். கல்வி கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
தனிநபர் கடன் Vs கல்விக் கடன்
வங்கிகளில் தனிநபர் கடன் பெறுபவர்கள் திருமணம், வெளிநாட்டு பயணம், மற்ற தேவைகளுக்கு என எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். கல்விக் கடனை காட்டிலும் தனிநபர் கடனுக்கு வட்டி விகிதம் மிகவும் அதிகம். ஆனால் கல்விக் கடனை குறைந்த வட்டியில் வங்கிகள் வழங்குகின்றன. கல்வி கடன் மூலம் மாணவர்கள் கல்லூரி மற்றும் அது தொடர்பான கட்டணம், வாடகையை செலுத்தலாம். லேப்டாப் போன்ற பொருட்கள் வாங்குவதற்காகவும் பயன்படுத்தலாம்.
கல்விக் கடனுக்கான அம்சங்கள்
இந்தியா மற்றும் உலகில் எங்கு படித்தாலும் , கல்வி கடனை நீங்கள் பெறமுடியும். உங்கள் குடும்பத்தின் வருமானம் மற்றும் எந்த கோர்ஸ் படிக்கிறீர்கள் என்பதை பரிசீலிப்பார்கள். இந்தியாவில் நீங்கள் படிக்கிறீர்கள் என்றால் வங்கிகள் குறைந்தபட்சம் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை வழங்குவார்கள். வெளிநாடுகளில் படிக்கிறீர்கள் என்றால் அதிகபட்சம் ரூ. 20 லட்சம் வரை வழங்குவார்கள்.
கடன் ஜாமீன்
நீங்கள் வாங்கும் கல்விக் கடன் ரூ. 4 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் ஜாமீன் தேவையில்லை. ரூ. 4 லட்சத்திற்கு மேல் இருந்தால், சில நேரங்களில் 3 -ம் நபரின் ஜாமீன் கையெழுத்து தேவைப்படும்.
கல்விக் கடனுக்கு தேவைப்படும் ஆவணங்கள்
கல்விக் கடன் பெறுவதற்கான தகுதிகள்
விண்ணப்பதாரர் இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டியது அவசியம். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, டிப்ளமோ, தொழில்நுட்பப் படிப்புகள், மேலாண்மைப் படிப்புகள் மற்றும் இதர தொழிற்கல்வி பாடப் பிரிவுகள் உள்ளிட்ட படிப்புகளுக்கு கல்விக் கடன் வழங்கப்படும்.
கடனை திருப்பி அளித்தல்
கல்வி கடன் தொகையை படிக்கும் காலத்தில் மாணவர்கள் திருப்பி செலுத்த வேண்டியதில்லை. சில வங்கிகள் படிக்கும் காலத்தில் கடன் தொகைக்கு வட்டி மட்டும் வசூல் செய்கின்றன. படித்து முடித்து ஓராண்டு முடிந்ததும் அல்லது வேலை கிடைத்ததும் கடனை திருப்பி செலுத்த முயற்சி செய்ய வேண்டும். கடனைப் பெற்றதில் இருந்து 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் கடனை திருப்பி செலுத்திட வேண்டும்.
கல்விக் கடன் பற்றிய சந்தேகங்களுக்கு நாங்கள் கொடுத்த குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். இதேபோல் கெரியர் குறித்து பல பயனுள்ள தகவல்களுக்கு Arrear Irundalum Career சேனலை subscribe செய்து பயன்பெறுங்கள்
Leave a Reply