டெட் தேர்வு ( teacher training tips in tamil ) என்றால் என்ன மற்றும் அதன் விவரங்களை இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
எழுத்தறிவித்தவன் இறைவனாவான் என்ற பழமொழியை நாம் கேள்வி பட்டிருப்போம். ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை, ஒழுக்கம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு கற்பித்து, அவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்கும் ஓர் உன்னத பணி. இந்த உன்னத பணிக்கு எப்படி தேர்வாகுவது மற்றும் அதற்கான நுழைவுத் தேர்வு, தகுதி தேர்வு பற்றி பலருக்கும் தெரிவதில்லை. அதில் ஒரு வகை தகுதித் தேர்வு தான் டெட் ( TET ) எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் ( teacher training in tamil ) சேர வேண்டும் என்றால் டெட் தேர்வு கட்டாயமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டெட் தேர்வு என்றால் என்ன? என்பதை விரிவாக இங்கே பார்க்கலாம்.
டெட் தேர்வு என்றால் என்ன?
கட்டாய இலவச கல்வி உரிமைச்சட்டம் 2009, அடிப்படையாக வைத்து டெட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய அளவில் CTET என்றும், மாநில அளவில் TET தேர்வு என்றும், தமிழகத்தை பொறுத்தவரை TNTET என்று இந்த தேர்வு நடத்தப்படுகின்றது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக இந்த தேர்வை நடத்தி, தொடக்க நிலை மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
SET, NET தேர்வை போல TET தேர்வும் ஒரு தகுதி தேர்வு தான். இந்த தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெற்றுவிட்டால் நிச்சயம் வேலை கிடைக்கும் என்று கூற முடியாது. 10, 12-ம் வகுப்பு, D.T.Ed.,அல்லது B.Ed – ல் நீங்கள் பெற்ற மதிப்பெண் அதோடு TET தேர்வில் பெறுகிற மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து கிடைக்கும் கட் ஆஃப் மதிப்பெண்ணையும் சேர்த்து தேர்வு செய்வார்கள். டெட் தேர்வில் தகுதி பெற்றுவிட்டால், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள் மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகளிலும் அரசு பள்ளி ஆசிரியருக்கு இணையான ஊதியத்தை பெற முடியும்.
தேர்வு தாள்கள்:
டெட் தேர்வில் ( tntet exam tips in tamil ) மொத்தம் இரண்டு தாள்கள் உள்ளன. 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்ளுக்கு முதல் தாளும், 6 முதல் 8-ம் வகுப்பு ஆசிரியர் பணியிடங்ளுக்கு இரண்டாம் தாளும் நடத்தப்படுகின்றன. ஒரு விண்ணப்பதாரர் இரண்டு தாள்களையும் எழுத முடியும்.
தகுதிகள்:
எழுத்து தேர்வு தாள் 1 :
பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது 4 ஆண்டு பி.எட் பயிற்சி பெற்றவர்கள் அல்லது இறுதி ஆண்டு படிப்பவர்கள் முதல் தாளை எழுதலாம். மொத்தம் 150 மதிப்பெண்கள் கொண்டது.
தேர்வு தாள் 2 :
பட்டப்படிப்புடன், 2 ஆண்டு பி.எட் பயிற்சி படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது இறுதி ஆண்டு படிப்பவர்கள் இரண்டாம் தாளை எழுதலாம். மொத்தம் 150 மதிப்பெண்கள் கொண்டது.
வயது வரம்பு :
18 வயது முதல் 40 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
தேர்வுக் கட்டணம் :
பொது மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் ரூ. 500-ம், எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ. 200 -ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் தாள் -1, 2 க்கு தனித்தனியே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
டெட் தேர்வுக்கு தயாராகும் முறைகள்:
டெட் தேர்வு குறித்து ( Tet exam tips in tamil )நாங்கள் கொடுத்த குறிப்புகள் பயனுள்ளதாக இருந்திருக்கும். இதேபோல் கெரியர் குறித்து பல பயனுள்ள தகவல்களுக்கு Arrear Irundalum Career சேனலை subscribe செய்து பயன்பெறுங்கள்
Leave a Reply