குடும்பம், குழந்தை, வேலை என இவை அனைத்தையும் பேலன்ஸ் செய்யும் தாய்மார்களுடன் ஓர் சிறப்பு கலந்துரையாடல்.
தாயிற் சிறந்த கோயிலுமில்லை என்பார்கள். ஈரைந்து மாதங்கள் சுமந்து ஈன்றெடுத்த அன்னைக்கு பெருமை சேர்க்கும் நன்னாள் இன்று!
அம்மா என்ற வார்த்தை அன்பு நிறைந்தது.அம்மாவுக்கு இணை வேறு யாரும் இருக்க முடியாது. அம்மா என்பவள் கள்ளம் கபடம் இல்லாதவள். பாசம், நேசம் காட்டி சுமைகளை சுமந்து குடும்பத்தின் முகவரியாக வாழ்பவள். தனது பிள்ளைகளுக்காகவே தன் வாழ்நாளை வாழ்ந்து கொண்டிருக்கும் தாயின் மகத்துவத்தை போற்றும் விதமாக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
பெற்றோருக்கு செல்ல மகளாக, கணவனுக்கு அன்பு மனைவியாக, அம்மா என்ற உயரிய அந்தஸ்த்தை அடைந்து, குடும்பத்தை சுமந்து, கஷ்டங்கள் பல இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்து வாழ்ந்திடும் பாங்கு, இவை அத்தனையும் அம்மா என்ற உயிருக்குள் மட்டுமே நம்மால் காண முடியும்.
அன்னையர் தினம் உருவான கதை?
அமெரிக்காவைச் சேர்ந்த அன்னா மரியா ஜர்விஸ் (Anna Jarvis) மகள் அன்னா மேரி ஜர்விஸ். இவர் தனது தாயின் உந்துதலினால் மதர்ஸ் டே ஒர்க் கிளப் என்ற அமைப்பை உருவாக்கி, தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பு, ஆரோக்கியமான குழந்தையை வைத்துக் கொள்வது, கல்வி கற்கும் முறைகள் , பேணி காப்பது போன்ற பல பயிற்சிகளை வழங்கினார்.
இந்நிலையில், தாய் அன்னா மரியா ஜர்விஸ் 1905ஆம் ஆண்டு இறந்துபோனார். அப்போது தனது தாய் ஒரு முறை தான் நடத்திய ஞாயிற்றுகிழமை பள்ளியில், தாயின் மகத்துவத்தை போற்றும் விதமாக ஒரு நாள் அன்னையர் தினம் கொண்டாடப்படும் என்று கூறியிருந்தது அன்னா மேரி ஜர்விஸுன் நினைவிலும், காதுகளிலும் ஒலித்துக் கொண்டே இருந்தது.
இதனால் தனது அம்மாவின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தார் அன்னா மேரி ஜர்விஸ். 25 ஆண்டுகளாக தனது தாய் போதித்து வந்த ஆண்ட்ரூஸ் சர்ச்சில் 1908ஆம் ஆண்டு, மே 10 ம் தேதி ,அதற்கான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அன்றைய தினத்தில் அன்னையர்களை வரவைத்து அவர்களுக்கு பூச்செண்டுகளை பரிசாக கொடுத்ததோடு, அன்னையர் தினமாகவும் கொண்டாடினார்.
அதோடு மட்டுமல்லாமல் அன்னையர் தினத்தை அறிவிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து போராட்டம் நடத்தினார் அன்னா மேரி. இதன் காரணமாக அமெரிக்காவின் 28வது அதிபரான தாமஸ் வுட்ரூ வில்சன், 1914ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி அன்னையர் தினத்துக்கான பிரகடனத்தில் கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மே 2 வது ஞாயிற்றுகிழமை அன்னையர்களுக்கு, அன்பு செலுத்தும் வகையில், அன்னையர் தினமாக கொண்டாடப்பட்டது. மேலும் அன்றைய தினத்தில் தேசிய விடுமுறையை அறிவித்தது அமெரிக்க அரசு.
பரிசு கொடுங்கள்! தாய்மையை போற்றுங்கள்
அன்னையர் தினத்தில், அந்த ஒரு நாளாவது அம்மாவை அமரவைத்து அவளுக்கு ஓய்வுகொடுங்கள். அவளை மகிழ்வித்திடுங்கள். ஆச்சரியமூட்டுங்கள். பரிசுகள் கொடுத்து விரும்பியதை வாங்கி கொடுத்து அவளுடன் பொழுதை போக்குங்கள்.
அம்மாவை வாங்க முடியுமா?
ஆசைபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்,
அம்மாவ வாங்க முடியுமா..
ஆயிரம் உறவு உன்னை தேடி வந்தே நின்னாலும்,
தாய் போலே தாங்க முடியுமா…
உன்னையும் என்னையும் படைச்சதிங்கே யாருடா,
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுனா தாயடா…
தாயின் தியாகத்தை போற்ற இது போன்று பல பாடல்களை நாம் எடுத்துக்காட்டாக கூறலாம்.
அன்பு, அக்கறை, அரவணைப்பு , பாசம், நேசம், தியாகம் என எல்லா உணர்வுகளையும் ஒரே இடத்தில் பெற முடிந்தால் அதுதான் உண்மையான வாழும் கடவுள் “ அம்மா” . அனைவருக்கும் அரியர் இருந்தாலும் கெரியர் சார்பாக அன்னையர் தின வாழ்த்துகள்.
Balancing family, career and other societal expectations, this video is a celebration of mothers everywhere!
How did Mother’s Day begin?
Anna Jarvis is credited with founding the holiday of Mother’s Day in America. After her mother’s death in 1905, she started a Mother’s Day Work Club that trained women with raining children and babysitting.
Anna’s mother always wished for a day that celebrated mother’s. After her death, Anna led the movement for such a day to be passed.
Finally, in 1914, President Woodrow Wilson issued a presidential announcement for the first Mother’s Day celebration in the country. After this, the American government declared the second Sunday of May to be Mother’s Day.
Your mother has always been your biggest support and strength. For this year’s Mother’s Day Celebrations in India, tell your mother how much you love and appreciate her in your love.
From all of us here at Arrear Irundalum Career, we wish all the mothers in India a very happy Mother’s Day 2019!
Subscribe to our channel – https://www.youtube.com/channel/UCcc7tmGh5cCPylLQHIHtyEQ?sub_confirmation=1
Like, subscribe and follow us on social media!
Facebook: https://www.facebook.com/Arrear-Irund…
Instagram: https://www.instagram.com/arrearirund…
ShareChat : https://b.sharechat.com/1Tyh3JRERT
Helo : http://m.helo-app.com/s/mSvQUTF
Tik Tok : http://vm.tiktok.com/eeSpEB
Website – https://www.arrearirundalumcareer.in/
Leave a Reply