2019 ம் ஆண்டில் அதிகம் தேவைப்படும் திறன்கள் குறித்து இந்த வீடியோ பார்த்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக நிறுவனங்கள், வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்களிடம் இருந்து அவர்கள் கல்லூரியில் பெற்ற பட்டம், சான்றுகளை தாண்டி, நிறுவனம் சார்ந்த வேலைத்திறன் மற்றும் மென்திறன்களை எதிர்பார்க்கின்றன. எனவே, in demand skills skills குறித்து நாம் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். திறன்களை நாம் சாப்ட் ஸ்கில்ஸ் மற்றும் ஹார்டு ஸ்கில்ஸ் என இரண்டு வகையாக பிரிக்கலாம்.
சாஃப்ட் ஸ்கில்ஸ் தினசரி வாழ்க்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படுவது சாப்ட் ஸ்கில்ஸ்.
படைப்பாற்றல் பல விஷயங்களை ரசிக்கும் தன்மை, புத்தகங்கள் படிப்பது, திரைப்படங்கள் பார்ப்பது உள்ளிட்டவற்றின் மூலம் நமது படைப்பு திறன்களை வளர்த்துக்கொள்ளலாம்.
குழுப்பணி திறன் ஒரு நிறுவனத்தில் இருக்கும் பல குழுக்களுடன் இணைந்து தவிர்க்க முடியாத ஒரு பணியாளராக இயங்க வேண்டும்.
ஊக்குவித்தல் வேலை உண்டு , தான் உண்டு என்று இல்லாமல், புதிதாக பணியில் இணையும் ஊழியர்களுக்கு சொல்லி கொடுத்து நல்ல வழியில் அவர்களை இட்டுச் செல்லலாம். இதனால் ஆளுமை திறனை நீங்கள் வெளிப்படுத்தலாம்
காலம் தவறாமை சரியான நேரத்திற்கு வந்து குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் செய்து முடிப்பது
காலத்துக்கேற்ப மாறும் தன்மை ஒவ்வொரு நிறுவனமும், பணி சூழலுக்கும் ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஹார்டு ஸ்கில்ஸ் ஒன்றை நாம் படித்து தெரிந்து கொள்வதை ஹார்டு ஸ்கில்ஸ் என்கிறோம்.
க்லவுட் கம்ப்யூட்டிங் ஒரு கோப்பினை, மைய கம்ப்யூட்டரில் சேமிக்காமல், சர்வர்களில் சேமித்து உலகின் எந்த இடத்திலும் இருந்து அதனை உபயோகிக்கலாம். எ.கா.- ஜி.மெயில். பேஸ்புக்.
செயற்கை நுண்ணறிவு இன்றைய சூழலில் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் பங்கு இன்றியமையாதது. ஹெல்த் கேர், ஸ்மார்ட் ஹோம்ஸ், கூகுள் அசிஸ்ட்டண்ட் உள்ளிட்டவை மக்களுக்கு உதவியாக உள்ளன.
அனலட்டிகல் ரீசனிங் வேலைக்கு தேவைப்படும் தகவல்களை தீவிர தேடுதலின் மூலம் கண்டறிவது
பணியாளர் மேலாண்மை குழுவினருடன் நல்ல உறவு, திறமையாக பணியாற்றுதல், பிரச்சனைகளை சமாளித்தல் உள்ளிட்டவற்றின் மூலம் ஆளுமை திறனை வளர்த்துக்கொள்ளலாம்.
நீங்கள் இதுவரை பார்த்த most in demand skills பற்றி தெரிந்துகொண்டாலே உங்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகரித்துவிடும். skills demand என்றால் என்ன என்பதை இந்த வீடியோவை பார்த்து தெரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகிறோம். இது போல பல கெரியர் டிப்ஸ்களுக்கு Arrear Irundalum Career பக்கத்தை Subscribe செய்து தெரிந்து கொள்ளுங்கள்
Leave a Reply