வங்கி தேர்வுக்கு தயாராவதற்கான வழிமுறைகளை ( how to prepare bank exams in tamil ) இந்த வீடியோ மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
வங்கி பணிக்கு செல்ல வேண்டும் என்பது பலபேருடைய கனவு மட்டுமல்லாமல், கவுரமாகவும் கூட. இந்தியாவில் லட்சக்கணக்கான பேர் வங்கி தேர்வுக்கு ( bank exam preparation videos in tamil ) தயாராகி வருகின்றனர். வங்கி பணிக்காக கனவு காண்பவரா? நீங்கள், இந்த வீடியோ ( bank exam preparation in tamil )உங்களுக்கானது.
ஐபிபிஎஸ் ( IBPS) என அழைக்கப்படும் வங்கி பணியாளர் தேர்வு கழகம் வங்கி பணியாளர்களுக்கான தேர்வை நடத்துகிறது. இந்த அமைப்பு 20 வங்கிகளுக்கான பணியாளர்களை தேர்வு செய்கிறது. ஸ்டேட் பேங் ஆப் இந்தியாவை (State Bank of India ) பொறுத்தவரை தனித்தேர்வு மூலமே பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
வங்கி தேர்வு முதனிலை ( Prelims ), முதன்மை ( Mains ) , நேர்முகத் தேர்வு ( Interview) என மூன்று கட்டங்களாக நடத்தப்படுகின்றது.
முதனிலை ( Prelims )
முதனிலை தேர்வில் 100 கேள்விகள் கேட்கப்படும். பெரும்பாலும் அனைத்து வங்கிகளுக்குமான முதனிலை தேர்வில் ஒரே மாதிரியான வினாக்கள் கேட்க வாய்ப்புகள் அதிகம். இதில் அனைத்தும் ஆப்ஜக்டிவ் வகை வினாக்களாக இருக்கும். ரீசனிங் எபிலிட்டி, குவாண்டிடேட்டிவு அனாலிஸில் ஆகிய தளங்களில் தலா 35 , ஒரு மதிப்பெண் வினாக்கள் இடம்பெறும். அடுத்ததாக ஆங்கில மொழி தொடர்பான 30 ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படும். மொத்தமுள்ள 100, ஒரு மதிப்பெண் வினாக்களுக்கும் ஒரு மணி நேரத்தில் விடை அளிக்கும் வகையில் நேரத்தை திட்டமிடல் அவசியம்.
முதன்மை ( Mains )
முதன்மை தேர்வுக்கென பிரத்யேக பாடத்திட்டம் எதுவும் சொல்லப்படவில்லை. ரீசனிங் எபிலிட்டி, குவாண்டிடேட்டிவு ஆப்டிடியூட், கணினி, பொது விழிப்புணர்வு மற்றும் ஆங்கில மொழி அறிவு போன்றவற்றில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும். எந்த மாதிரியான கேள்வி கேட்கப்பட்டாலும் விடையளிக்க தயாராக இருக்க வேண்டும். எழுத்தறிவை பரிசோதிப்பதற்கு கட்டுரை எழுதுவதற்கான கேள்விகளும் கேட்கப்படும்.
சரியான திட்டமிடல்
படிப்பதற்கான நேரத்தை சரியான முறையில் திட்டமிடுவது மிகவும் அவசியம்.
சவாலான கேள்விகளை எதிர்கொள்ளுதல்
சவாலான கேள்விகளை எதிர்கொள்வது தன்னம்பிக்கை மற்றும் உத்வேகத்தை தரும்.
சுயபரிசோதனை அவசியம்
நிறை குறைகளை ஆராய்ந்து சுயபரிசோதனை செய்வது மிகவும் அவசியம்.
மாதிரி தேர்வுகள்
அடிக்கடி மாதிரி தேர்வுகளை எழுதி பார்க்க வேண்டும். தேர்வுக்கு ஏற்ற வகையிலான மாதிரி தேர்வுகளை எழுதுவது சாலச்சிறந்தது.
குறைத்து மதிப்பிடாதீர்கள்
உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டு கொள்ளாதீர்கள்.
குவாண்டிடேட்டிவ் அனாலிஸிஸ்
குவாண்டிடேட்டிவ் அனாலிஸில் தயாராகும் போது பள்ளி பருவத்தில் பயின்ற ஃபார்முலா, தியரம் உள்ளிட்டவற்றை மனதில் நிறுத்திக் கொளவது அவசியம்.
கணினி அறிவு
கீ போர்ட் ஷார்ட்கட்ஸ், சாஃப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் போன்றவை குறித்து அடிப்படையாக அறிந்துகொள்வது தேர்வுக்கு பயனுள்ளதாக இருக்கும்
ஆங்கில மொழி அறிவு
வங்கி பணிக்கு ஆங்கில மொழி இன்றியமையாததாக உள்ளது. vocabulary – யை வளர்த்துக் கொள்வதன் மூலம் ஆங்கில பேச்சு திறனை உயர்த்திக் கொள்ளலாம். தினம் ஒரு ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளலாம். ஆங்கில நாளிதழ்களில் வரும் செய்திகளை படித்து அறிந்து கொள்வதன் மூலமும் ஆங்கில புலமையை வளர்த்துக் கொள்ளலாம்
நேர்முகத் தேர்வு
நேர்முகத் தேர்வு ( Interview ) பார்ப்பதற்கு எளிமையானதாக இருந்தாலும் அதில் தேர்வாவது மிகவும் கடினம். திறமை ஒருபுறம் இருந்தாலும் முகபாவனை, அமர்ந்திருக்கும் முறை, டிரஸ் கோட் உள்ளிட்டவையும் கூர்மையாக கவனிக்கப்படும். இவைகளை பொறுத்தே இறுதித் தேர்வு அமையும்.
மேலே சொல்லப்பட்ட வழிமுறைகளை ( bank exam preparation videos in tamil ) பின்பற்றி வங்கி பணியில் தேர்வாக எங்கள் சேனலின் சார்பாக வாழ்த்துக்கள். இது போல பல பயனுள்ள வீடியோக்களுக்கு Arrear Irundalum Career சேனலை Subscribe செய்து பயன்பெறுங்கள்.
How to Prepare For Your Bank Exam
If your dream is to work for a bank, but if you are confused as to how to go about the process, then this video is for you! Here are a few tips on how to prepare for the Bank Exam:
A selection test for bank employees and staff recruitment is done by the Bank Employees Recruitment Corporation, also known as IPPBS. In the State Bank of India (SBI), the employees are selected on this basis of another examination.
The bank selection process is conducted in 3 phases: Preliminary, Main and an Interview.
Preliminary Examination:
In the prelims, 100 questions will be asked. Each question carries 1 mark, and the duration of the exam is 1 hour. Similar questions may be asked in this round, and the type of questions asked may be objective type questions. A total of 35 questions and a quantitative analysis will have to be done. Your proficiency in English will also be tested through a series of 30 questions.
Main examination:
Since there is no specific syllabus for the exam, the research institute will ask the questions. These questions can be based on Quantum Computing, public awareness and your English language knowledge. Your level of literacy will also be tested through an essay question.
Computer Knowledge:
You will need to possess basic knowledge of keyboard shortcuts, software and hardware.
English Language Knowledge:
Your knowledge of English is relevant to pass the examination with ease.
Interview:
Your body language, behaviour and mannerisms matter in any interview. Be prepared and remain confident.
We hope this video was helpful for all those hoping to crack the Bank examination! Don’t forget to like, comment and share. Don’t forget to subscribe to our channel –
https://www.youtube.com/channel/UCcc7tmGh5cCPylLQHIHtyEQ?sub_confirmation=1
Leave a Reply