மன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி? அதிலிருந்து விடுபடும் வழிகள் (stress management tips in tamil) குறித்து இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்ற பழமொழி மன அழுத்தத்திற்கு மிகச் சரியாக பொருந்தும். பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் ஓய்வு பெற்ற பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் கூறும் ஒரே வார்த்தை அதிகமாக மன அழுத்தம் (stress management skills in tamil) இருக்கு என்பது தான். நாம் பணிபுரியும் இடத்தில் மன அழுத்தத்தை சமாளிப்பது சிரமமான விஷயம் தான். ஆனால் சரியான உத்திகளை கையாண்டால் மன அழுத்தத்தை (stress reduce tips in tamil) எளிதாக குறைக்கலாம். மன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி என்று தேடுபவரா நீங்கள்? இதோஇந்த வீடியோஉங்களுக்கானது தான்!
கண்காணிக்க வேண்டும் எந்தெந்த செயல்களால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகின்றது என்பதை தொடர்ந்து கண்காணியுங்கள். மன அழுத்தம் இருக்கும் போது நீங்கள் கோபம் அடையலாம், சத்தம் போடலாம் மற்றும் எரிச்சல் அடையலாம்.
2. ஆரோக்கியமான எதிர்வினையை உருவாக்குதல் மன அழுத்தம் ஏற்படும்போது முதலில் நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். புத்தகம் படிப்பது, இசையை கேட்பது, யோகா செய்வது மற்றும் உங்களுக்கு பிடித்த செயல்களை செய்வது என ஆரோக்கியமான எதிர்வினையை உருவாக்கலாம்.
3. எல்லைகளை நிறுவுவது பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். அன்றைக்கான வேலை என்ன என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு அதனை செய்து முடியுங்கள். தேவையற்ற வேலையை செய்யாமல் முடிந்தவரை குடும்பத்துடன் நேரம் ஒதுக்குங்கள்.
4. பணியின் போது இடைவேளை எடுக்கவும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டால் மனநோயாளி ஆகும் நிலை ஏற்படலாம். அதனால் இடைவெளி எடுத்து பணிபுரிய வேண்டும். இந்த இடைவெளியில் உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு வேலைகள், பிடித்தமான செயல்கள், நண்பர்களோடு உரையாடலாம். மேலும் நேரத்தை நிர்வகிக்கும் திறன்களை வளர்த்துக் கொண்டால் மன அழுத்தம் ஏற்படுபதை குறைக்கலாம்.
இந்த வழிமுறைகளை பின்பற்றி, மன அழுத்தத்தில் (how to manage stress in tamil) இருந்து விடுபடுங்கள். மன அழுத்தம் இருந்தால் உங்கள் வேலையில் கவனம் குறையும், அதனால் கெரியர் பாதிப்புக்குள்ளாகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் கெரியர் குறித்து பல பயனுள்ள தகவல்களுக்கு Arrear Irundalum Career சேனலை Subscribe செய்யுங்கள்.
Leave a Reply