நீட் தேர்வுக்கு தயாராகும் முறை, கடைபிடிக்க வேண்டிய வழிகள் ( preparation for neet in tamil ) குறித்து இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
மருத்துவ துறையில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு ஆகியவற்றுக்கு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது தான் நீட் நுழைவு தேர்வு (தேசிய தகுதிக்கான நுழைவுத் தேர்வு) . இந்த தேர்வு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்படுகின்றன. எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் ஆகிய மருத்துவ கல்லூரிகள் அல்லாமல், மற்ற அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு நடைபெறுகின்றன. மற்ற தேசிய தகுதி தேர்வு போல நீட் தேர்வும் சற்று கடினமான ஒன்றுதான். how to prepare neet exam in tamil -னு யோசிப்பவராக நீங்கள் இருந்தால், இந்த வீடியோ உங்களுக்கானது.
தகுதி பிளஸ் 2– ல், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் குறைந்தது 50 விழுக்காடு மதிப்பெண்கள் பெற வேண்டும்.
தேர்வு முறை தேர்வு கால அளவு, எந்த தலைப்புகளில் படிப்பது , எந்த பாடத்திற்கு எவ்வளவு மதிப்பெண்கள் உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
பாடத்திட்டத்தை சரிபார்த்தல் ஒவ்வொரு ஆண்டுக்கான பாடத்திட்டம் என்ன என்பதை தெரிந்து வைத்து படிப்பது நல்லது. இதனால் நேரத்தை சரியாக திட்டமிட்டு படிக்கலாம்.
பாடத்திட்டம் இயற்பியல் – மெக்கானிக்ஸ், ஆப்டிக்ஸ், தெர்மோ டைனமிக்ஸ் மற்றும் நியூக்கிலியர் ஃபிசிக்ஸ்,
வேதியியல் – மோல் கான்சப்ட், ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, பீரியாடிக் டேபிள், கெமிக்கல் பாண்டிங், கோஆர்டினேஷன் கெமிஸ்ட்ரி, மோல் கான்சப்ட்
உயிரியல் – ஈகாலஜி மற்றும் என்விரான்மென்ட், ஜெனிட்டிக்ஸ், செல் பயாலஜி, மார்பாலாஜி, ரீப்புரடக்ஷன், தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உடற்குவியல், பேசிக்ஸ் ஆஃப் பயோ டெக்னாலஜி
திட்டமிட்டு படிப்பது ஒவ்வொரு பாடத்திற்கும் சரியான நேரத்தை ஒதுக்கி படிக்கலாம். கடினமாக இருக்கும் பாடத்திற்கு கூடுதலாக நேரம் ஒதுக்கி திட்டமிட்டு படிப்பது நல்லது.
ஸ்டடி மெட்டிரியல்ஸ் கல்லூரி மற்றும் பள்ளிகளில் கொடுக்கும் பாடப்புத்தகம் மட்டும் போதாது. முன்பு புத்தகங்களை மட்டுமே நம்பி இருந்தோம், ஆனால் தற்போது பல முறைகள் உள்ளன.
சந்தேகங்களை தீர்த்து கொள்வது பாடம் தொடர்பாக சந்தேகம் இருந்தால் ஆசிரியர் அல்லது நண்பர்களிடம் கேட்டு தீர்த்து கொள்வது சிறந்தது.
மாதிரி தேர்வு எழுதுவது முந்தைய கேள்வித் தாளை நேரம் குறித்து வைத்து எழுதி பார்க்க வேண்டும். இதன்மூலம் எந்தெந்த பாடத்தில் சரியாக எழுதவில்லை என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் படிக்க வேண்டும்
உடல்நலத்தில் கவனம் சரியான நேரத்தில் தூங்கி, எழுந்து படிக்க வேண்டும். அதேபோல் உணவு பழக்கத்தையும் வளர்த்து கொள்ள வேண்டும். உடல்நலனில் கவனம் செலுத்தாவிட்டால் ஆரோக்கிய இழப்பு, கவனம் இழப்பு, ஆற்றல் இழப்பு ஏற்படலாம்.
நீட் தேர்வு மட்டுமல்லாமல், இதேபோல் பல தேர்வுகளுக்கு நாங்கள் டிப்ஸ் ( neet exam tips in tamil ) தருகிறோம். மேலும் கெரியர் குறித்த பல பயனுள்ள தகவல்களுக்கு Arrear Irundalum Career சேனலை Subscribe செய்யுங்கள்.
Leave a Reply