கொட்டிக் கிடக்கிறது Freelancer பணி வாய்ப்புகள்

career guidance in tamil

வீட்டில் இருந்தபடியே ஓய்வு நேரத்தில் பணியாற்றுவதன் மூலம் ( highest paying freelance jobs in tamil  ) கூடுதல் வருமானம் ஈட்ட நினைப்பவர்களுக்கு Freelancer பணிகள் மிகப்பெரிய நம்பிக்கையை தருகின்றன. அதிலும் சில குறிப்பிட்ட துறைகளில் Freelancer பணிகளுக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், அந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு அதிகளவில் Freelancer பணிகள் கிடைக்கின்றன என்பதை மறுப்பதற்கு இல்லை. அதே நேரம் மிகவும் அரிய சில பிரிவுகளில் கிடைக்கும் Freelancer பணிகளை செய்ய உரிய ஆட்கள் இல்லாததால், பிற பிரிவுகளைக் காட்டிலும் அதில் கூடுதல் வருமானமும் கிடைக்கும். உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் தங்களின் பணிகளை செய்து முடிக்க, Freelancer-களை நாடுகின்றனர். சம்பந்தப்பட்ட பணியை செய்து முடிக்கத் தேவையான திறமை உங்களுக்கு இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், தாராளமாக அந்தப் பணியை உங்களுக்கு கேட்டு நீங்கள் விண்ணப்பிக்கலாம். இணையதளம் இன்று மிகப்பெரிய இணைப்பு பாலமாக விளங்குவதால், 99% பணிகள் ஆன்-லைன் மூலமாகவே நடைபெறுகின்றன. 

நூற்றுக்கணக்கான Freelancer பணிகள் ஆன்லைன் தேடலில் கிடைத்தாலும், சுமார் 10 முதல் 15 பிரிவுகள், மிக அதிக வேலை வாய்ப்புகளை கொண்டவையாக கருதப்படுகின்றன.அதுபற்றிய தகவல்கள் இந்தக் கட்டுரையில் விரிவாக அளிக்கப்பபட்டுள்ளன.

வெப் டெவலப்மெண்ட் & டிசைனிங் (  Web Development & Designing )

இந்த துறையில் Freelancer பணிகள் ஏராளமாக இருப்பதால், எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கும். 2015ம் ஆண்டு நிலவரப்படி, Most wanted Freelancer பணிகளில் இந்த வெப் டெவலப்மென்ட் & டிசைனிங் ஏழாவது இடத்தில் இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் இதனை எளிதாக கற்றுக் கொள்ளலாம் என்பதால், இந்த துறையில் Freelancer-களின் எண்ணிக்கையும் மிக அதிகமாகவே இருக்கிறது. எனினும், தனித்துவமான கண்ணோட்டம் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அதற்கு ஏற்றவாறு டிசைன் செய்பவரே, இந்த துறையில் நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்க முடியும். Designing மற்றும் Coding மட்டுமின்றி .NET, Java, Dreamweaver உள்ளிட்டவை தெரிந்திருப்பதும், WordPress பற்றி அறிந்திருப்பதும் இந்த பிரிவில் Freelancer-களுக்கு ( ( best freelance jobs 2020 in tamil ) மிகவும் கை கொடுக்கும்.

கிராஃபிக் டிசைனர் ( Graphic Designing )

கிராஃபிக்ஸ் டிசைனிங் என்பது முற்றிலும் வேறு மாதிரியான பிரிவு. பத்திரிகைகள், வார இதழ்கள் மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு கிராஃபிக்ஸ் பணிகளை செய்து கொடுக்க வேண்டும். இதுமட்டுமல்லாது, ஆயத்த ஆடை தயாரிப்பு துறையிலும், கிராஃபிக்ஸ் Freelancer டிசைனர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, தொழில்ரீதியாக உரிய பயிற்சி மற்றும் சில Course-களை படித்த பிறகு இந்த துறையில் Freelancer-ஆக கால்பதித்தால், கூடுதல் வாய்ப்புகளை பெற முடியும்.

எஸ்.இ.ஓ ( Search Engine Optimization ) -SEO 

தற்போதைய டிஜிட்டல் சூழலில் Search Engine Optimization (SEO)என்பது மிகவும் பிரபலமாக பேசப்படும் விஷயமாகி இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட இணையதளத்திற்கு பார்வையாளர் வருகையை அதிகரிக்கச் செய்ய என்னென்ன அடிப்படை விஷயங்களை செய்ய வேண்டும் என்பதை செய்வது தான் SEO-வின் பணியாக இருக்கிறது. குறிப்பாக Search Engine எனப்படும் தேடு பொறிகளின் மூலமாக (யாஹூ, பிங், கூகிள்) மற்றும் சமூக ஊடக தளங்கள் மூலமாக ஒரு சம்பந்தப்பட்ட தளத்தின் பார்வையாளர் எண்ணிக்கையை SEO கற்றுக் கொண்ட நபரால் உயர்த்த முடியும். அதாவது, இணையதளம் உபயோகிப்பவர், தனது தேவைக்காக இணையதளத்தில் உள்ள Search Engine-ல் தேடும் போது, சம்பந்தப்பட்ட தளத்தை பிரதனமாக முன்னிறுத்துவதன் மூலம், அந்த நபரின் வருகையை இணையதளத்திற்கு உறுதிப்படுத்த முடியும். இந்தப் பணியை செய்யும் SEO-வில் உரிய அனுபவம் பெற்றவர்களுக்கு Freelancer வாய்ப்புகள் ( most in demand freelance jobs 2020 in tamil) அதிகளவில் காத்திருக்கின்றன.

பிளாக் ரைட்டர் – வலைப்பூ எழுத்தாளர் ( Article and Blog Writing )

பத்திரிகை துறையில் செய்திகளை வழங்குவது ஒரு விதம் என்றால், ஒரு நிறுவனம் சொல்லும் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை பற்றி, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எழுதித் தருவது வேறொரு விதம். அந்த வகையில் Blog Writing பணிகளுக்கு ஏராளமான Freelancer வாய்ப்புகள் கிடைக்கின்றன. தொலைக்காட்சி விளம்பரங்கள் என்பதை தாண்டி, இணையதளத்தில் தங்களின் பொருட்களை, தயாரிப்புகளை சந்தைப்படுத்த ஒவ்வொரு நிறுவனமும் தனக்கென பிரத்யேக வலைத்தளம்/Blog வைத்திருக்கின்றன. எனவே, அவர்கள் விரும்பும் விதத்தில், அவர்களின் படைப்புகள் குறித்த அடிப்படை விஷயங்களை அவர்கள், சம்பந்தப்பட்ட Blog-ல் பதிவு செய்கின்றனர். இதன் மூலம் அதிகளவு வாடிக்கையாளர்களிடம் அதனை விளம்பரப்படுத்த முடியும் என்பதால், Article மற்றும் Blog Writing பிரிவில் Freelancer வாய்ப்புகள்  பிரகாசமாகவே இருக்கிறது.

((  ஃப்ரீலான்சிங் பணிகள் பெற உதவும் இணையதளங்கள்

மொழிபெயர்ப்பாளர் (  Translation )

மொழிபெயர்ப்பு பிரிவில் பல லட்சம் Freelancer வாய்ப்புகள் உலகம் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன. நாளேடு விளம்பரத்தில் தொடங்கி MNC நிறுவனத்தின் தயாரிப்புகளை பிராந்திய மொழிகளில் பிரபலப்படுத்துவது வரை அனைத்து தேவைக்கும் Translation மிக அவசியமான விஷயமாகி விட்டது. இதுமட்டுமின்றி, இன்று கோலோச்சிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சித் தொடர்கள், வெப் சீரிஸ், netflix, amazon prime போன்ற நிறுவனங்கள், திரைப்படங்கள், நாடகங்களை பிராந்திய மொழிகளில் மொழிபெயர்த்து வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றன. இந்த பணிகளுக்கு Freelance Translator-கள் அதிகளவில் தேவைப்படுவதால், வேலைவாய்ப்புகளும் அதிகளவில் இருக்கின்றன. இந்திய மொழிகள் மட்டுமல்லாது, அயல்நாடு மொழிகளான Japanese, French, Chinese, German உள்ளிட்டவற்றை அறிந்துள்ளவர்களுக்கு நல்ல வருவாய் ஈட்டும் வேலையும் இந்தப் பிரிவில் கிடைக்கும். இவை தவிர Language Interpreter என்ற அடிப்படையில், ஆன்-லைனிலும் Freelance வாய்ப்புகளை பெற முடியும். 

சோஷியல் மீடியா மேஜேனர்ஸ் ( Social Media Managers )

சமூக வலைதளங்களின் அபரிமித வளர்ச்சி அதனை நிர்வகிப்பதற்கான வேலைவாய்ப்புகளையும் அதிகரித்திருக்கிறது. அந்த வலையில் ஒரு நிறுவனத்தின் பிசினஸ் யுக்தி மற்றும் அந்த நிறுவனம் சார்ந்த வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொள்ள Social Media பேருதவியாக இருக்கிறது. சிறிய காபி ஷாப் முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரை சமூக வலைதளங்களை பயன்படுத்தி, தங்களது பிராண்டுகளை முன்னிலைப்படுத்தும் முயற்சியை முன்னெடுக்கின்றன. எனவே, நிறுவனங்களின் சமூக வலைதளங்களை மேலாண்மை செய்யும் Freelancer பணி வாய்ப்புகள் ( freelance projects in tamil )   ஏராளமாக உருவாகி வருகின்றன. 

வீடியோ எடிட்டர்ஸ் ( Video Editors )

யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களின் வளர்ச்சியால், Freelance Video Editor பணி வாய்ப்புகள் சமீப ஆண்டுகளில் அதிகரித்துள்ளன. Avid, FCP உள்ளிட்ட சாஃப்ட்வேர் அனுபவம் உள்ளவர்கள், தங்களுடைய வீட்டில் இருந்தப்டியே Freelance பணிகளை மேற்கொள்ள முடியும். இந்தப் பணியிலும் Creativity என்பது மட்டுமே ஒவ்வொரு Freelance-ஐயும் தனித்துவமாக காட்டும் என்பதால், அனுபவம் அவசியம். தற்போதைய சூழலில், ஒவ்வொரு வீடியோவிலும் ஏதாவது ஒரு தனித்துவமான விஷயம் இருந்தால் மட்டுமே, அது வாடிக்கையாளர்களை அல்லது இணையவாசிகளை கவரும் என்பதால், அந்த அம்சத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு காரணியாக Freelance Video Editor திகழ்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.

இணையதள ஆய்வு/ஆராய்ச்சி ( Web Research )

இணையதளத்தை ஆய்வு செய்து வேண்டிய தகவல்களை எடுத்துக் கொடுக்கும் பணியை Web Research என்று குறிப்பிடுகின்றனர். உதாரணமாக, ஒரு நிறுவனம் தனது தயாரிப்பை சந்தைப்படுத்தும் முன்பாக, யாரெல்லாம் அந்த தயாரிப்பை வாங்க தகுதியானவர்கள், என்ன விலையில் அதனை மக்கள் வாங்க தயாராக இருப்பார்கள், என்னென்ன அம்சங்கள் இருந்தால் மக்கள் மத்தியில் அது பிரபலமாகும் என்பது போன்ற அம்சங்களை சேகரித்து வழங்குவது Web Research பணியின் ஒரு அங்கமாகும். எனவே, இந்த துறையில் Freelancer ஆக பணிபுரிய விரும்பும் நபர் ( freelance writing jobs online in tamil ),  இணையதளத்தில் இருந்து நம்பகமாக தகவல்களை பெறுவது எப்படி? அதனை தேவைக்கு ஏற்ப ஆய்வு நோக்கில் தொகுப்பது எப்படி? என்பதை பற்றி தெளிவான புரிதல் இருப்பவராக இருத்தல் அவசியம். 

இதேபோல், தேர்தல் நேரங்களில், இணையதளம் மூலமாகவே மாதிரி வாக்குப்பதிவு நடத்தி, அதன் மூலம் நிலவரத்தை அறிய விரும்பும் நிறுவனங்களும், Freelance Web Researcher-களை அணுகுகின்றன. எனவே, பல்வேறு வேலைவாய்ப்புகள் இந்த பிரிவில் இருப்பதால், உரிய தகுதிகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் வருவாய் ஈட்டலாம்.

(( Freelance career தொடங்குவதற்கான டிப்ஸ் ?

கல்வி கற்பித்தல் ( Teaching and Tutoring )

கற்பித்தல் துறை என்பது குருகுல கல்வி ஆரம்பித்த காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்தாலும், இணையதளம் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, உலகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளன.உதாரணமாக, இந்தியாவில் ஆசிரியர் பயிற்சி பெற்ற ஒருவர், அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி குழந்தைக்கு, ஆன்-லைன் மூலமாகவே அனைத்து பாடப் பிரிவுகளை கற்பிக்க முடியும். இதற்கான வாய்ப்புகளை பெற்றால், ஒரு சில மணி நேரம் பயிற்றுவிக்க, அமெரிக்க டாலர்களில் வருமானம் பெறலாம். மேலும், இரண்டுக்கும் மேற்பட்ட மொழிகளை தெரிந்தவர்கள், ஆன்-லைன் மூலமாகவே மொழிப் பயிற்சியும் அளிக்க முடியும் என்பதால், Freelance பணிகளும் ( freelance jobs from home in tamil ) இதில் ஏராளமாகவே கிடைக்கின்றன.

சேல்ஸ் & மார்க்கெட்டிங் ( Sales and Marketing )

மார்க்கெட்டிங் துறையை பொறுத்தவரை நேரடியாக ஒரு பொருளை வீடு வீடாக எடுத்துச் சென்று அதன் சிறப்புகளை எடுத்துக் கூறி, அதனை விற்பது ஒருவகை என்றால், ஆன்-லைன் மூலம் ஒரு பொருளை விளம்பரம் செய்து அதனை வாடிக்கையாளர்களை வாங்கச் செய்வது மற்றொரு முறை. இணையதளத்தின் வளர்ச்சியால், ஆன்லைன் விற்பனை அபரிமிதமான வளர்ச்சியை எட்டியிருக்கிறது. செல்போன், டிவி போன்ற மின்னணு பொருட்கள் மட்டுமின்றி, காய்கறி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை வரை அனைத்தும் இன்று ஆன்லைனில் கிடைக்கிறது. எனவே, ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட பொருளை எந்தெந்த பிரிவுகளில் விளம்பரப்படுத்தினால், அதிகளவு வாடிக்கையாளர்களை கவர்ந்து அதனை விற்பனை செய்ய முடியும் என்பதை அறிந்திருந்தால், உங்களுக்கு இந்தப் பிரிவில் ஏராளமான Freelancer பணிகள் காத்திருக்கிறது

இவை தவிர கீழ்கண்ட பிரிவுகளிலும் குறிப்பிடத்தக்க அளவு Freelance பணிகள் கிடைக்கின்றன.

Data Entry Jobs

Legal Services

Photography

Human Resource Management

Architecture Services

Logo Design and Illustration

Game Development

3D Modelling and CAD

Branding and Public Relations

Admin Support or Assistance
மேற்கூறிய பிரிவுகளில் கிடைக்கும் Freelancer பணிகளை ( freelance jobs for students in tamil ), பயன்படுத்திக் கொண்டு, அதன் மூலம் வருமானம் ஈட்டும் அதே நேரம், உரிய தகுதிகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் அந்த வருமானத்தை பல மடங்காக பெருக்கிக் கொள்ள முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *