உலகத்தை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து விட்டது இணையதளம். இதன் காரணமாக உலகின் எந்த மூலையில் வேலைவாய்ப்பு ( how to improve your linkedin profile 2020 in tamil ) இருந்தாலும், அதனை அறிந்து கொள்ளும் வசதி உலகின் வேறொரு மூலையில் இருக்கும் நபருக்கு கிடைக்கிறது. இதே வாய்ப்பைத்தான் வேலை வழங்கும் நிறுவனத்திற்கும் இணையதளம் கொடுக்கிறது. வேலை வழங்கும் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு Resume அனுப்பி வேலை கேட்பதெல்லாம் பழைய கதையாகி விட்டது. இன்றைக்கு LinkedIn தளத்தில் profile வைத்திருந்தால், வேலை உங்களைத் தேடி வரும் என்ற நிலை உருவாகி விட்டது. தொழில் ரீதியாக தங்களின் திறமைகளை பட்டியலிட்டு LinkedIn profile உருவாக்கி விட்டால் போதும், தங்களின் தேவைக்கு ஏற்ப, திறமையான பணியாளர்களை நிறுவனங்கள் தேர்வு செய்து கொள்கின்றன.
அந்த வகையில் LinkedIn profile என்பது வேலை தேடும் நபருக்கு மட்டுமின்றி, வேலையில் இருக்கும் நபருக்கும் முக்கியமான அம்சமாக மாறி விட்டது. எனவே, உங்களின் LinkedIn profile தான் உங்களுக்கான விசிட்டிங் கார்டு என்று கூட சொல்லலாம். ஆனால், உலகெங்கும் இருக்கும் பல கோடி LinkedIn profile-களில் இருந்து உங்களின் profile மட்டும் எப்படி தனித்து தெரியும் என்பதில் தான், உங்களுக்கான மவுசு இருக்கிறது. எனவே, ஏனோதானோ என்று ஒரு profile-ஐ உருவாக்காமல், உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடிய நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தரமான, உண்மையான, நேர்மையான ஒரு profile-ஐ உருவாக்குங்கள்.
தலைப்பு எப்படி?
உங்கள் பெயர், திறமை, பணியாற்றிய நிறுவனங்கள் ஆகியவற்றின் பட்டியலை உங்கள் LinkedIn profile-லில் சிறப்பாக வைத்திருந்தாலும் ( how to improve linkedin profile for jobs in tamil ), தலைப்பு சிறப்பாக இல்லாவிட்டால் எடுபடாது. அதிலும், Google, Firefox போன்ற தேடுபொறிகளில், நிறுவனங்கள் என்னென்ன வார்த்தைகளை பயன்படுத்தி LinkedIn profile-களை தேடுவார்கள் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல தலைப்பை அமைக்க வேண்டும்.
திறமைகள் என்னென்ன?
உங்களுக்கு இருக்கும் திறமைகளை நீங்கள் மட்டும் அறிந்திருந்தால் போதாது, அதனை வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு புரியும் வகையில் எளிமையாக அதே நேரம் கவர்ச்சிகரமாக பட்டியலிட வேண்டும். உங்களுக்கு என்னென்ன விஷயங்கள் தெரியும், எதை நீங்கள் சிறப்பாக செய்வீர்கள், முந்தைய நிறுவனங்களின் உங்களின் பணி என்ன? நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன? ஆகியவற்றை வழங்கலாம்.
அனுபவம் எவ்வளவு?
சம்பந்தப்பட்ட துறை/பணியில் உங்களுக்கு இருக்கும் அனுபவம் எவ்வளவு என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். பொதுவாக Resume என்பது வெறும் 2 அல்லது 3 பக்கத்தில் முடிந்து விடும். ஆனால், இந்த LinkedIn profile-லில் நீங்கள் கூற விரும்பும் விவரங்களை மிகச் சிறப்பாக கூறலாம் என்பதால், 2 அல்லது 3 பக்கங்களில் முடிக்கத் தேவையில்லை. அதே நேரம் கூடுதல் தகவல்களை அளித்து வேலைக்கு தேர்வு செய்யும் நிறுவனங்களின் நேரத்தையும் வீணடிக்கக் கூடாது.
(( ஃப்ரீலான்சிங் பணிகள் பெற உதவும் இணையதளங்கள் )))
உங்களின் நெட்வொர்க் எப்படி இருக்க வேண்டும்?
LinkedIn profile-ஐ பொறுத்த வரை உங்களின் நெட்வொர்க்கில் இருப்பவர்களை வைத்தே, உங்களின் திறமையை வேலை வழங்கும் நிறுவனங்களால் ஓரளவு ஊகித்து விட முடியும். எனவே, பரஸ்பரம் அறிமுகம் இல்லாதவர்கள், உங்கள் துறைக்கு சம்பந்தம் இல்லாதவர்களை எல்லாம் உங்களின் நெட்வொர்க்கில் இணைத்துக் கொள்ள வேண்டியது அவசியமில்லை. அதே நேரம் குறைந்தபட்சம் 100 பேர் அல்லது அதற்கு மேல் உங்களின் நெட்வொர்க்கில் இருந்தால், Active ஆன profile என்று பல நிறுவனங்கள் கருதுகின்றன. எனவே, ஆரோக்கியமான அளவில், திறமையான நபர்களை உங்களின் நெட்வொர்க்கில் இணைத்துக் கொள்வதும் முக்கியம்.
கருத்துக்களை பதிவு செய்யுங்கள்
LinkedIn என்பதும் சமூக வலைதளங்களை போல் பல்வேறு கருத்துக்களை, வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை வழங்கும் தளம் ( how to create a linkedin profile 2020 in tamil ) என்பதால், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துகள், உங்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும். எனவே, எந்த ஒரு கருத்தையும் பதிவு செய்யும் முன்பாக, அதன் சாதக, பாதகங்களை அறிந்து கொள்ளவும்.
நிறுவனங்களை Follow செய்கிறீர்களா?
நீங்கள் பணிபுரியும் துறையில் உள்ள முன்னணி நிறுவனங்களை Follow செய்யுங்கள். இதன் மூலமாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் இருந்து வேலை வாய்ப்புகளை பெற ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
இவை மட்டுமின்றி, சில அடிப்படையான விஷயங்களை உங்கள் LinkedIn profile-லில் மாற்றி அமைத்தால், மற்றவர்களிடம் இருந்து அது தனித்து தெரியும். உதாரணமாக, புதிய வேலையை விரும்புவோர் Looking for opportunities என்ற வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, உங்களை எதற்காக தேர்வு செய்ய வேண்டும் என்று சுருக்கமாக எழுதலாம். இதன் மூலம் லட்சக்கணக்கான Looking for opportunities வார்த்தைகளைக் கொண்டிருக்கும் Profile-லில் இருந்து நீங்கள் வித்தியாசப்படுவீர்கள்.
அதேபோல், உங்களை தொடர்பு கொள்ள என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறதோ அவை அனைத்தையும் சரியாக LinkedIn profile-லில் ( how to upgrade your linkedin profile in tamil ) பதிவிடுங்கள். ட்விட்டர், ஃபேஸ்புக், உங்களின் பிரத்யேக இணையதளம், மொபைல் நம்பர் என அனைத்து விவரங்களையும் அதில் பதிவிடப்பட்டிருக்க வேண்டும். எந்த வழியிலும் உங்களை ஒரு நிறுவனம் தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலையை நீங்கள் ஏற்படுத்தினால், புதிய வாய்ப்புகள் எதையும் நீங்கள் தவற விட மாட்டீர்கள்.
LinkedIn profile-லில் உள்ள உங்களின் புகைப்படமும், வேலை அளிக்கும் நிறுவனங்களால், கவனமாக பார்க்கப்படும். எனவே, ஃபேஸ்புக் போன்ற தளங்களில் வைப்பது போன்று ஏனோ தானோ என்று இருக்காமல், professional ஆக ஒரு புகைப்படத்தை LinkedIn profile-லில் வைக்கவும். அதேபோல் Background போட்டோவில் நீங்கள் பணியாற்றும் துறைக்கு சம்பந்தமான இடத்தில் நீங்கள் இருப்பது போல் காட்டும் போட்டோவும் உங்களின் Profile-க்கு கூடுதல் பலத்தையும், அழகையும் கொடுக்கும்.
(( Freelance career தொடங்குவதற்கான டிப்ஸ் ? ))
LinkedIn URL எப்படி இருக்க வேண்டும்?
எல்லாவற்றிற்கும் மேலாக உங்களின் LinkedIn Profile-க்கான URL கவரும் வகையில் ( linkedin profile tips in tamil ) இருக்க வேண்டும். உங்கள் Profile பகுதியில் இருக்கும் option-கள் மூலம் உங்களது LinkedIn URL-ஐ மாற்றியமைக்க முடியும். உதாரணமாக chandran0121912 என்று எதுவும் புரியாத வகையில் நம்பர்களுடன் கூடிய URL-க்கு பதிலாக Chandrakumar என்று உங்களின் முழு பெயரில் URL இருந்தால், பார்ப்பதற்கும், பிறருக்கு பரிமாற்றம் செய்வதற்கும் எளிமையாகவும் எளிதில் புரியும் வகையிலும் இருக்கும். இதேபோல், நீங்கள் இருக்கும் துறைக்கு தகுந்தவாறும் உங்களது LinkedIn URL-ஐ மாற்றிக் கொள்ளலாம். உதாரணமாக நீங்கள் Content writer துறையில் இருக்கலாம் அல்லது Translator துறையில் இருக்கலாம். அப்போது, chandran-content அல்லது chandran-translator என்பது போன்ற வார்த்தைகளை உங்களின் LinkedIn URL-லில் சேர்த்துக் கொள்ளலாம். இது பார்க்கும் போதே உங்களின் திறமைகளையும் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்.
Leave a Reply