ஐஏஎஸ் பயிற்சியின் போது தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்

career guidance in tamil

UPSC தேர்வுக்கு எப்படி தயாராக வேண்டும் என்றுதான் நாம் கலந்துரையாடி இருக்கிறோம் ஆனால் இந்த கட்டுரையில், UPSC தேர்வுக்கு எப்படி தயாராகக் கூடாது   ( upsc common mistakes in tamil ) என்று பார்க்கப் போகிறோம் 

1) திட்டமிடாமல் இருப்பது

படிப்பதற்கு எந்த வித திட்டமிடலும் இல்லாமல் இருப்பதே மிகப்பெரிய தவறு. திட்டமிட தவறுவதால், நீங்கள் தோல்வியடைய திட்டமிடுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தினசரி படிக்க ஒரு அட்டவணை மற்றும் திட்டத்தை தயாரித்துக் கொள்ள வேண்டியது கட்டாயம். படித்தல், நினைவில் வைத்தல், திரும்ப பிரதிபலித்தல் ஆடிய செயல்பாடுகளை வாடிக்கையாக மாற்றிக் கொள்ள வேண்டும். 

2) புத்தகங்களை குவிப்பது

அடுத்தது எந்த புத்தகத்தை பார்த்தாலும் உடனடியாக அதனை வாங்கி ஒரு நூலகத்தை போன்ற கட்டமைப்பை உருவாக்குவது. ஒரு சிலர், யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு என்னென்ன புத்தகங்களை படிக்கலாம் என்று ஆலோசனை கேட்டுக் கேட்டு பல நூற்றுக்கணக்கான புத்தகங்களை சேர்த்து வைத்து விடுவார்கள். இந்த புத்தகங்கள் அனைத்தையும் படிக்கத் தொடங்குவதும் ( UPSC Preparation Mistakes in tamil ) தவறான செயல்பாடு தான். யு.பி.எஸ்.சி. தேர்வைப் பொறுத்தவரை என்னென்ன படிக்க கூடாது என்பதை விட என்னென்ன படிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். இதில் சிறு குழப்பம் நேர்ந்தாலும் உங்கள் லட்சியத்தை அடைய முடியாது.

3) பாடத் திட்டங்களை சரியாக படிக்காதது

இது பொதுவான தவறுகளில் ஒன்றாக இருக்கிறது. பெரும்பாலான தேர்வர்கள், பாடத் திட்டங்களின் பட்டியலை படித்துப் பார்ப்பதுடன் நிறுத்தி விடுகிறார்கள். இது தவறானது. பாடத் திட்டங்கள் என்னென்ன என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக அறிந்து வைத்திருக்க வேண்டும். எப்போதும் இதில் சந்தேகம்/மறதி வந்து விடக் கூடாது. பாடத் திட்டத்தை மனப்பாடம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லாவிட்டால் கூட, அதனை திரும்பத் திரும்ப படித்துப் பார்க்க வேண்டும். இதன் மூலம், நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களில் எதைப் படிக்க வேண்டும் என்ற தெளிவான புரிதல் கிடைக்கும். குறிப்புகள் எடுத்தல், பதில் எழுதிப் பார்த்தல் ஆகியவற்றிற்கும் இது பொருந்தும்.

4) அதீத இணையதள பயன்பாடு

இன்றைய தொழில்நுட்ப உலகில், இணையதள டேட்டா மலிவான விலையில் கிடைப்பதால், அதிக நேரத்தை பலரும் இணையதளத்தை பார்த்தே  ( things to avoid while preparing for upsc )கழிக்கின்றனர். யூ-டியூப் தளங்களில் யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராவது எப்படி, படிப்பது எப்படி என்பது போன்ற தலைப்புகளில் இருக்கும் நூற்றுக்கணக்கான வீடியோக்களை பார்ப்பதால் மட்டுமே எந்த ஒரு முன்னேற்றலும்/பலனும் ஏற்பட்டு விடாது. மாறாக நாள் முழுவதும் அடுத்தடுத்து வீடியோக்களை பார்ப்பதன் மூலம் மூளை சோர்வடைவதுடன், எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக படிக்காத சூழலே உருவாகும். பல மணி நேரம், பல நாட்கள் செலவளித்து யு.பி.எஸ்.சி. தொடர்பான வீடியோக்களை தேடிய பிறகு தான் தெரியும், நாம் காலத்தை எவ்வளவு விரயம் செய்திருக்கிறோம் என்றும். அதன் பின்னர் இழந்த காலத்தை மீண்டும் ஈடுசெய்ய முடியாது என்பதால், ஆரம்பத்திலேயே இணையதள பயன்பட்டிற்கு கடிவாளம் போடுவது அவசியம்.

(( GATE தேர்வு பற்றிய குறிப்புகளை பார்க்க: )) 

5) தயாரிப்பு பணிக்கு இடையே இடைவெளி

பொதுவாக யு.பி.எஸ்.சி.ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் தொடர்ந்து தயாராக வேண்டும். இந்த காலகட்டத்தில் படிப்பது என்பதை உங்களின் அன்றாட செயல்பாடுகளில் ஒன்றாக மாற்றிக் கொள்வதும் அவசியம். ஏற்கனவே திட்டமிட்டபடி, அட்டவணையில் இருக்கும் பாடங்களை ஒவ்வொரு நாளும் படித்து முடித்து விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து இடைவிடாமல் படித்து, பயிற்சி எடுப்பதற்கு பதிலாக, ஒருநாள் விட்டு ஒருநாள் பயில்வது எந்தப் பலனையும் அளிக்காது. படிக்கும் விஷயத்தில் கட்டுக்கோப்பு இல்லாதவர்கள் ஒருபோதும் யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற முடியாது.

6) படித்ததை நினைவுபடுத்துவது

படிப்பதை விட, என்ன படித்திருக்கிறோம் என்பதை நினைவுபடுத்த, புரட்டிப் பார்த்தல் மிக முக்கியமான விஷயம். இதனை சரியாக செய்யாமல் விட்டு விட்டால், படித்தது அனைத்துமே ( mistakes to avoid in upsc preparation ) வீணாகி விடும். தினசரி படிக்கும் கால அளவில், 25% புரட்டிப் பார்ப்பதற்காக ஒதுக்கி விட வேண்டும். குறிப்பாக, யு.பி.எஸ்.சி. தேர்வுக்காக நீங்கள் தயார் செய்யும் குறிப்புகளை, திட்டமிட்ட கால கட்டத்தில் புரட்டிப் பார்த்தால் மட்டுமே அவை நினைவில் நிற்கும். அப்போது தான் தேர்வில் அவற்றை எளிதாக எழுத முடியும்.

7) மாதிரி தேர்வுகளை புறக்கணிப்பது

யு.பி.எஸ்.சி மாதிரி தேர்வுகளை தவிர்ப்பது மற்றும் முதன்மைத் தேர்வுக்கான கட்டுரை வகை பதில்களை திரும்பத் திரும்ப எழுதிப் பார்ப்பது ஆகியவை மிகப்பெரிய தவறுகளாக அமையும். பெரும்பாலான தேர்வர்கள் இந்தத் தவறைத் தான் அதிகம் செய்கின்றனர். தொடர்ந்து படித்துக் கொண்டே இருப்பதால், மாதிரி தேர்வுகள் எழுதுவதை புறக்கணித்து விடுகின்றனர். அதிலும் கட்டுரை வடிவில் பதில்கள் எழுத வேண்டிய தருணங்களில் போதிய பயிற்சி இல்லாவிட்டால், குறித்த நேரத்தில், குறித்த அளவில் பதில்களை எழுத முடியாமல் போகிறது. மேலும், அடிக்கடி எழுதிப் பார்த்தால் மட்டுமே கட்டுரை வடிவிலான பதில்களில், சொற்றொடர்கள், வார்த்தைகளின் எண்ணிக்கையை உரிய முறையில் சரியாக எழுதிட முடியும். அப்போது தான் தேர்வின் போது ஒரு கட்டுரையை 7 முதல்  8 நிமிடங்களுக்குள் போதிய தகவல்களுடன் உங்களால் பிரதிபலிக்க முடியும்.

8) அதிகம் விவாதித்தல்

விவாதங்கள் மூலமாக உங்களின் அறிவை வளர்ப்பதுடன், ஒரு சில விஷயங்களில் ஆழமான புரிதலை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே போல் அதீத விவாதமும் ( Common Mistakes in the IAS Preparation

 ) தோல்விக்கு வழி வகுத்து விடும். குறிப்பாக ஆன்லைனில், இணைய வழியாக மேற்கொள்ளப்படும் விவாதம், நேரத்தை விரயம் செய்வதுடன், உங்களின் புத்திக் கூர்மையையும் மழுங்கடிக்கச் செய்து விடும். சம்பந்தப்பட்ட பிரிவில் சிறந்த ஞானம் உடையவருடன் விவாதித்தால் மட்டுமே உங்களால் புதுப்புது தகவல்களை அறிந்து கொள்ள முடியும். எல்லோரிடமும் விவாதித்துக் கொண்டிருப்பது நேரத்தை மட்டுமே வீணடிக்கும்.

(( IIT தேர்வில் சாதிக்க : ))

9) முந்தைய ஆண்டு கேள்வித்தாள்

யு.பி.எஸ்.சி தேர்வுகளைப் பொறுத்த வரை முந்தைய ஒரு சில ஆண்டு கேள்வி தாள்களில் என்னென்ன விதமான கேள்விகள் இடம்பெற்றிருக்கிறது என்பது பற்றி அறியாமல், தேர்வுக்கு தயாராவது புத்திசாலித்தனமான நடவடிக்கை அல்ல. கடந்த சில ஆண்டு கேள்வித் தாளை தீவிரமாக ஆராய்வதன் மூலம் பாடத்திட்டத்தின் எந்தெந்த பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்வதுடன், சம்பந்தப்பட்ட பாடத்தை இன்னும் கவனமாக, ஆழமான புரிதலுடன் படிக்க முடியும். மேலும், எதை அதிகம் படிக்க வேண்டும் என்பதையும் வரையறுக்க முடியும்.

10) தன்னம்பிக்கை முக்கியம்

மேலே குறிப்பிட்ட எல்லா தவறுகளையும் தவிர்த்து விட்டால், ஒருவர் யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்று விட முடியுமா? என்ற கேள்வி எழலாம். இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று IAS/IPS ஆக வேண்டும் என்ற தன்னம்பிக்கை மனதில் நிச்சயம் இருக்க வேண்டும். அது இல்லாத பட்சத்தில் எவ்வளவு போராடினாலும் வெற்றிக்கான இலக்கை நெருங்குவது கடினம் தான். சிவில் சர்வீஸ் தேர்வுக்கு ( IAS Preparation tips in tamil )தயாராகும் போது குடும்பத்தினர், நண்பர்களுடன் சரிவர பேச முடியாமல் போகலாம், அவர்களை கவனிக்க முடியவில்லையே என்ற வருத்தம் வரலாம். ஆனால், என்னால் நிச்சயமாக சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற தன்னம்பிக்கையை மட்டும் ஒருபோதும் விட்டு விடக் கூடாது.

இந்திய ஆட்சிப் பணிக்கு தயாராகும் போது செய்ய வேண்டிய விஷயங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறோம் அதைவிட கூடுதல் முக்கியத்துவத்தை செய்ய கூடாத விஷயங்களுக்காகவும் அளித்திட வேண்டும். எனவே கிடைக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் ஒவ்வொரு மணி நேரத்தையும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி ஐஏஎஸ் தேர்வுக்கு முழுமையாக தயாராக வேண்டும். செய்யக்கூடாத விஷயங்களைப் பற்றி இந்த கட்டுரையில் நாம் பார்த்தோம். அதேபோல் செய்ய வேண்டிய விஷயங்களில் உத்வேகம் குறையாமல் தேர்வு எழுதி முடிக்கும் வரை மிகுந்த விழிப்புணர்வுடனும், புரிதலுடனும் படித்தால் உங்கள் கனவு நிச்சயம் நிறைவேறும்.மேலும் கெரியர் குறித்து பல பயனுள்ள தகவல்களுக்கு Arrear Irundalum Career  சேனலை  subscribe செய்து பயன்பெறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *