யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு ( How to clear UPSC in first attempt? ) தயாராகும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் லட்சிய கேள்வி இதுவாகத் தான் இருக்கிறது. சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்தவர்களிடம் முன்வைக்கப்படும் பிரதான கேள்வியும் இதுதான். அதனால், இந்தக் கேள்விக்கு நிச்சயம் விடை இருக்கிறது. முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்ற வார்த்தைகளுக்குள் சிவில் சர்வீஸ் தேர்வும் அடங்கும். முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் வெல்வது எப்படி என்பதை இனி பார்க்கலாம்….
என்னென்ன செய்ய வேண்டும்?
– தயாராவதற்கு உரிய கால அவகாசம்
– சரியான திட்டமிடுதல்
– உரிய அணுகுமுறை
– இலக்கை அடைவதற்கான உத்வேகம்
– படிப்பதற்கு தேவையான தகவல்கள்/புத்தகங்கள்
சிவில் சர்வீஸ் தேர்வு என்பது 3 கட்டங்களாக நடத்தப்படும் என்பது பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும்.
ஆனால், இந்த 3 கட்ட தேர்வுக்கும், தனித்தனியாக கவனம் செலுத்தி படிக்க வேண்டும் என்றாலும், இவை அனைத்திலும் நல்ல மதிப்பெண் பெற வேண்டியது அவசியம். முதன்மைத் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தலாம், முதல்நிலை தேர்வில் எளிதாக வென்று விடலாம் என்ற பாரபட்சமான அணுகுமுறை இருக்கக் கூடாது.
சரியான நேரத்தில் தொடங்குங்கள்:
சிவில் சர்வீஸ் தேர்வில் ( upsc exam preparation tips in tamil ) வெற்றி என்ற இலக்கை நீங்கள் லட்சியமாக கொண்டிருந்தால், ஓராண்டுக்கு முன்பிருந்தே தயாரிப்பு பணிகளை தொடங்கி விட வேண்டும். தினமும் 4 மணி நேரம் முழு கவனத்துடன் படித்தால், ஓராண்டுக்குள் முழுமையாக படித்து முடிக்கலாம்.
பாடத் திட்டங்களை அறிந்து கொள்ளுதல்
முதல்நிலை தேர்வு, கொள்குறி வகை கேள்விகளாக கேட்கப்படும். ஆனால் முதன்மைத் தேர்வில் பதில்களை விரிவாக எழுத வேண்டியிருக்கும். எனவே, முதன்மைத் தேர்வில் வெற்றி பெற, பாடத் திட்டங்களை பற்றிய அடிப்படை மற்றும் விரிவான புரிதல் அவசியம்.
பாடத்திட்டத்தில் உள்ள அத்தியாயங்கள் பற்றி அடிப்படை புரிதல்களை பெற NCERT பாடப் புத்தகங்களை ஆழமாக படிக்கலாம்.
கேள்வித்தாள்கள் அலசல்
பிற தேர்வுகளில் இருந்து சிவில் சர்வீஸ் ( upsc exam tips in tamil ) முற்றிலும் மாறுபடும். எனவே, தேர்வில் இப்படித் தான் கேள்விகள் இருக்கும் என்பதை அனுமானிப்பது கடினம். இருந்த போதிலும், கடைசி 3 தேர்வுகளில் என்ன மாதிரியான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்வது ஓரளவு பலனளிக்கும். உங்களின் படிக்கும் முறையை, கேள்வித் தாளுக்கு ஏற்ப வடிவமைத்துக் கொள்வதும், வெற்றிக்கு கை கொடுக்கும்.
(( IIT தேர்வில் சாதிக்க
புத்தகத் தேர்வில் கவனம்
சிவில் சர்வீஸ் ( IAS Ttips in tamil ) தயாரிப்புக்கு, NCERT பாடப் புத்தகங்கள் படிக்க உகந்தவை என்றாலும் கூட, எந்தெந்த பாடத்திற்கு என்ன மாதிரியான புத்தகங்கள் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். ஒரே பாடத்திற்கு பல புத்தகங்களை படிப்பது தேவையற்ற நேர விரையத்தை ஏற்படுத்தும்.
அன்றாட செய்திகளில் கவனம்
தினசரி நடக்கும் முக்கிய நிகழ்வுகளை பற்றி நாளேடுகளை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். இதிலும், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தேவைப்படும் எனக் கருதும் விஷயங்களை குறிப்பெடுத்து எழுதி வைத்துக் கொள்வது நல்லது. ஓய்வு நேரங்கள் கிடைக்கும் போது, இணையதளங்களிலும் செய்திகளை, அதுதொடர்பான கட்டுரைகளை படிப்பதன் மூலம் ஒரே செய்திக்கு பல்வேறு கோணங்களில் இருந்து கருத்துகளை, புரிதலை ஏற்படுத்திக் கொள்ள இயலும்.
திட்டமிட்டபடி செயல்படுங்கள்
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு ( ips tips in tamil ) தயாராகும் போது, முதல் நாளில் எந்த அளவுக்கு ஆர்வம் மற்றும் உற்சாகத்துடன் படிக்கிறீர்களோ, அதை ஓராண்டு முழுவதும் பின்பற்றி கடைபிடிக்க வேண்டும். என்ன நடந்தாலும், தினசரி குறைந்தது 4 மணி நேரம் ஆழ்ந்த புரிதலுடன் படிப்பதை மாற்றக் கூடாது. பல தேர்வர்கள், ஓரிரு மாதத்திலேயே உற்சாகம் இழந்து, படிப்பதில் கவனம் செலுத்தாமல், காலத்தை விரயம் செய்து விடுகின்றனர். எனவே, சிவில் சர்வீஸ் தேர்வுக்கு திட்டமிட்டபடி தொடர்ந்து படிப்பது மிகவும் அவசியமானது.
படித்தது நினைவில் நிற்க
ஒருமுறை படித்ததை அப்படியே தேர்வு எழுதும் நாள் வரை நினைவில் வைத்திருப்பது சாத்தியமில்லாதது. எனவே, ஒவ்வொரு நாளும் என்ன படித்தோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள, ஒவ்வொரு வாரமும் revise செய்ய வேண்டும். தினசரி 4 மணி நேரம் படிப்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட நீங்கள் படித்த விஷயங்களை 30 நிமிடங்கள் revise செய்வது அவசியம்.
(( வங்கியில் பணியாற்ற விருப்பமா?
மாதிரி தேர்வுகள்
முந்தைய ஆண்டுகளின் சிவில் சர்வீஸ் கேள்வித்தாளை கொண்டு மாதிரி தேர்வுகள் எழுதுவதன் மூலம் என்ன மாதிரியான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன என்பதும், அதற்கு நாம் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதும் தெரியவரும். இது நீங்கள் எப்படி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகியிருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கே தெரியப்படுத்தும்.
ஆன்லைனிலும் சிவில் சர்வீஸ் படிப்புக்கான மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதில், நீங்கள் எழுதிய பதில்கள் சரியானவையா? என்ன மாதிரி எழுதியிருக்க வேண்டும் என்று வழிகாட்டும் நிபுணர்கள் பின்னூட்டம் அளிப்பார்கள் என்பதால், மிகவும் உதவிகரமாக இருக்கும்.
முதன்மை தேர்வுக்கு எழுதிப் பாருங்கள்
முதல்நிலை தேர்வு கொள்குறி வகை வினாக்களாக இருப்பதால், அதில் விரிவாக எழுத வேண்டியிருக்காது. ஆனால், முதன்மைத் தேர்வுக்கு கட்டுரை வடிவில் பதிலளிக்க வேண்டும், அதுவும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள். எனவே, முதன்மைத் தேர்வுக்கு பல முறை எழுதிப் பார்த்து பயிற்சி பெற வேண்டியது அவசியம்.
கட்டுரை எழுதப் பயிற்சி பெறுங்கள்
சிவில் சர்வீஸ் தேர்வில் ( UPSC civil service exam in tamil ) முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றவர்களில் 99% பேர், கட்டுரை எழுதுவதில் மிகுந்த ஆர்வமும், திறமையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எனவே, கட்டுரை எழுதுவதில் தனித் திறமையை வளர்த்துக் கொண்டால் மட்டுமே, முதல் முயற்சியில் வெற்றி பெறுவது சாத்தியம். குறிப்பாக, சிவில் சரிவீஸ் தேர்வில் எழுதப்படும் எந்த ஒரு கட்டுரையும் 2,500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கண்டிப்பாக 2 கட்டுரைகள் கட்டாயம் எழுத வேண்டும், அவற்றிற்கு 250 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பதால், கட்டுரை எழுதும் திறனை கட்டாயம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளை உள்வாங்கி, அதனை அப்படியே கட்டுரை வடிவில் எழுதிப் பார்க்கலாம். ஆரம்ப நாட்களில் 750 வார்த்தைகள் என்ற அளவில் தொடங்கி பின்னர் படிப்படியாக 2500 வார்த்தைகளுக்கு முன்னேறலாம்.
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற எதை செய்ய வேண்டும் என்பதில் இருக்கும் ஆர்வத்தைப் போலவே, எதை செய்யக் கூடாது என்பதிலும் தெளிவு வேண்டும்.
(( GATE தேர்வு பற்றிய குறிப்புகளை பார்க்க:))
அதீத இணையதள பயன்பாடு
இன்றைய தொழில்நுட்ப யுகத்தில், யூ டியூப் போன்ற தளங்களில் சிவில் சரிவீஸ் தேர்வுக்கு படிப்பதற்காக ஏராளமான வீடியோக்கள் இருக்கின்றன. அவற்றை ஆன்லைனில் பார்த்துக் குறிப்பெடுத்துக் கொள்கிறேன் எனக் கூறிக் கொண்டு, நூற்றுக்கணக்கான வீடியோக்களை பார்ப்பதால், நேரம் தான் விரையமாகவே தவிர அதனால் எந்தப் பயனும் இருக்காது.
உத்வேகம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
சிவில் சர்வீஸ் தேர்வில் ( How to clear IAS in first attempt? ) வெற்றி பெறுவது என்பது மற்ற தேர்வுகளைப் போல் அல்ல. ஒரு ஆண்டு முழுவதும் திட்டமிட்டு படித்து, அவற்றை தேர்வில் உரிய முறையில் எழுதி, தேர்ச்சி பெற வேண்டும். எனவே, இந்த கால கட்டத்தில் முயற்சிகளை கைவிட்டு விடாமல், தடங்கல்களுக்கு அடிபணிந்து விடாமல், மனதில் இருக்கும் உத்வேகம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலே உள்ள குறிப்புகளை வைத்து சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற அரியர் இருந்தாலும் கெரியர் சேனல் சார்பாக வாழ்த்துக்கள். இதேபோல் கெரியர் குறித்து பல பயனுள்ள தகவல்களுக்கு Arrear Irundalum Career சேனலை subscribe செய்து பயன்பெறுங்கள்.
Leave a Reply