GATE தகுதித் தேர்வு ( gate exam tips in tamil ) பற்றிய முக்கிய குறிப்புகளை இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
பெரும்பாலும் நம் நாட்டில் பொறியியல் துறையை தேர்ந்தெடுத்து படிப்பதை மக்கள் பெருமையாக கருதுகின்றனர். அதில் சிலர் நல்ல கல்லூரியில் படிக்காமல் வேலை கிடைக்கவில்லை என்று புலம்புவார்கள். பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்பதெல்லாம் கட்டுக்கதை. பொறியியல் சார்ந்த படிப்பை எங்கு படிக்கிறோம், எப்படி படிக்கிறோம் என்பது தான் முக்கியம். கேட் தகுதித் தேர்வு ( gate exam preparation in tamil ) என்றால் என்ன என்பதே இங்கு பல மாணவர்கள், பெற்றோர்களுக்கு தெரியாது. பொறியியலில் இளநிலை படிப்பில் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்காமல், முதுநிலை படிப்பில் ஒரு நல்ல கல்வி நிறுவனத்தில் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு கேட் தேர்வு பயனுள்ளதாக இருக்கிறது. கேட் தகுதித் தேர்வு என்றால் என்ன? மற்றும் அதன் பயன்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
கேட் தேர்வு
அகில இந்திய அளவில் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் அரசு உதவி தொகையுடன் எம்.டெக், எம்.இ , எம். ஆர்க் போன்ற முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நடத்தப்படும் சிறப்பு தகுதித் தேர்வே ( Graduate Aptitude Test in Engineering – GATE) கேட் தேர்வாகும். மத்திய மனிதவள துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் ( IISc) , இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி – மெட்ராஸ், பாம்பே உள்ளிட்ட 7 ஐஐடிகளும் சேர்ந்து கேட் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்துகின்றன. மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், ஆர்க்கிடெக்ச்சர், சிவில் என 24 விதமான பாடப்பிரிவுகளில் கேட் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.
கேட் தேர்வின் முக்கியத்துவம்
கேட் தேர்வினால் ( how to prepare gate exam in tamil ) நிறைய பயன்கள் உள்ளன. கேட் தேர்வில் நீங்கள் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்து IISc, NITIE, all IITs, NITs, IIIT, அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள்/ பல்கலைக்கழகங்கள் மற்றும் சில வெளிநாட்டு பல்கலைக்கழகத்திலும் படிக்கும் வாய்ப்பினை நீங்கள் பெறலாம். முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான தகுதி தேர்வாக மட்டும் கேட் தேர்வை கருதக்கூடாது. ஏனென்றால், கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அரசு பொதுத் துறை நிறுவனங்களுக்கு இணையாக கூறப்படும், பி.எஸ்.யு எனப்படும் பப்ளிக் செக்டார் அன்டர்டேக்கிங் நிறுவங்களில் குரூப் – ஏ பிரிவில் பணிகளில் சேருவதற்கு நேரடி தகுதியை பெறமுடியும். ONGC, BHEL,IOCL, BSNL,NLC, உள்ளிட்ட பல அரசு பொதுத் துறை நிறுவனங்கள் , கேட் தேர்வை அடிப்படையாக வைத்து தான் பொறியாளர்களை பணிக்கு சேர்க்கின்றன. கேட் தேர்வை வைத்து நீங்கள் எந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்தாலும் அரசு உதவித் தொகையை நீங்கள் பெற முடியும். அரசு கொடுக்கும் உதவித் தொகை மட்டுமல்லாமல் வேறு சில உதவித் தொகையையும் நீங்கள் பெற முடியும். எல்&டி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுடன் சேர்ந்து ஐஐடி கல்வி நிறுவனம் பல படிப்புகளை வழங்குகின்றன. இந்த படிப்புகளில் கேட் தேர்வை வைத்து சேருபவர்களுக்கு, அரசு உதவித் தொகையுடன், கார்ப்பரேட் நிறுவனமும் உதவித் தொகை வழங்கும். படித்து முடித்தவுடன் அங்கேயே கூட நீங்கள் வேலைக்கு சேரலாம். மேலும் ஆராய்ச்சி மையங்களில் கூட நீங்கள் சேர்ந்து , அதற்கென்று தனி உதவித் தொகையை பெறலாம்.
கல்வித் தகுதிகள்
பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கட்டுமான துறைகளில் இளநிலை பட்டமும், அறிவியல், புள்ளியியல், கணினி மற்றும் கணித துறைகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் இந்த தேர்வினை எழுதலாம். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல் இந்த தேர்வுக்கு ( how to start gate exam preparation in tamil ) வயது வரம்பு இல்லை என்பதால் எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம். கேட் தகுதித் தேர்வில் நீங்கள் எடுக்கும் மதிப்பெண் மூன்று ஆண்டுகள் மட்டுமே செல்லும்.
விண்ணப்பிக்கும் முறை:
மற்ற தேர்வு போல, கேட் தேர்வுக்கும் ( tips and tricks for preparing for gate exam in tamil )
மாணவர்கள் அன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பொது மற்றும் ஒபிசி வகுப்பினருக்கு ரூ1500- ம், எஸ்சி.,எஸ்டியினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ 750-ம் தேர்வு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டு மாணவர்களும் கேட் தேர்வை, அவர்கள் நாட்டிலேயே எழுதலாம். வங்கதேசம், எத்தோபியா, நேபாளம், சிங்கப்பூர், இலங்கை , ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலும் நீங்கள் கேட் தேர்வை எழுதலாம்.
பாடத்திட்டம்
கேட் தேர்வில் , 100 மதிப்பெண்கள் என மூன்று பிரிவுகளில் 65 கேள்விகள் கேட்கப்படும். அதாவது இன்ஜினியரிங் மேத்மெட்டிக்ஸ்-ல் 13 முதல் 15 மதிப்பெண்களுக்கும், ஜென்ரல் ஆப்டிடியூட்டில் 15 மதிப்பெண்களுக்கும், துறை சார்ந்த பிரிவில் – 70 முதல் 72 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும். மல்ட்டிப்பிள் சாயிஸ் மற்றும் நியூமரிக்கல் டைப் கேள்விகள் கேட்கப்படும். மல்ட்டிப்பில் சாய்ஸ் கேள்விகளில் மட்டும் தவறான 1 மதிப்பெண் பதில்களுக்கு 0.33 -ம் , 2 மதிப்பெண் பதில்களுக்கும் 0.66 மதிப்பெண்ணும் குறைக்கப்படும்.
சரியான கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுத்தல்
கேட் மதிப்பெண் வந்தவுடன்,எந்த படிப்பை, எந்த கல்வி நிறுவனத்தில் படிக்க போகிறீர்கள் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருப்பது நல்லது. பல பேர் கேட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தாலும், துறை சார்ந்த சரியான புரிதல் இல்லாததால் சிறந்த கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பை இழக்கின்றனர். ஆகையால் அனைத்து படிப்புகள் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்ள வேண்டும்
கேட் 2020:
ஒவ்வொரு ஆண்டும் 7 ஐஐடிகளில் ஏதாவது ஒரு ஐஐடி கேட் தேர்வை நடத்துகிறது. கேட் 2019 – ஐ ஐஐடி மெட்ராஸ் நடத்தியது. அதேபோல் கேட் 2020 -ஐ ஐஐடி டெல்லி நடத்துகிறது.
Leave a Reply