சென்னை, கிண்டியில் உள்ள Aspick இன்டஸ்டிரீஸ்-ள் உள்ள தொழிலாளர்களுடன் உழைப்பாளர் தினத்தை அரியர் இருந்தாலும் கெரியர் குழு கொண்டாடி மகிழ்ந்தது.
உழைப்பின் அவசியம்
நாடாக இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி உழைப்பில்லாமல் ( labour day celebration in india ) உயர்வில்லை. டிப்டாப்பாக உடை அணிந்து ஐடி வேலைக்கு செல்வோர் முதல் சோறு போடும் விவசாயி வரை உழைப்புதான் மூலதனம். ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வில் லட்சம் பேருடைய உழைப்பை அனுபவிக்கிறான் என்று கிரேக்க தத்துவம் கூறுகிறது. குறிப்பாக சொல்லப்போனால் உழைப்பில்லாமல் உலகம் இயங்காது எனலாம்.
உழைப்பாளர் தின சிறப்பு
தொழிலாளர்களின் ஒற்றுமையையும், உறுதியையும் குறிக்கும் தினத்தை மே தினமாக ( may day celebration in india ) கொண்டாடுகிறோம். உலகில் பெரும்பாலான நாடுகளில் மே 1 உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகின்றது. காலவரையற்ற உழைப்பு, கடுமையான பணிசூழல், கொத்தடிமைத்தனம் போன்ற இன்னல்களில் இருந்து தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்னும் முறை கொண்டுவரப்பட்டதை இந்த நாள் நினைவுபடுத்துகிறது.
உழைப்பாளர் தினம் உருவானக் கதை?
1886 ஆம் ஆண்டு மே 1-ம் தேதி வட அமெரிக்காவின் சிகாகோ நகரில், ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை என வலியுறுத்தி அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தொழிலாளர்கள் , போலீசார் உள்பட 12 பேர் இறந்தனர். இதன் காரணமாக தொழிலாளர்களின் தினசரி வேலைக் கால அளவு நிர்ணயம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த நாளை ஐரோப்பிய அமெரிக்க இடதுசாரி இயக்கங்கள் உலகத் தொழிலாளர் தினமாக அனுசரிக்க தொடங்கின. இந்த நாளை பிற நாடுகளும் அனுசரிக்க ஆரம்பித்தனர். இதுவே மே 1 சர்வதேச தொழிலாளர் தினமான கதை.
எட்டு எட்டா மனிதன் வாழ்வை பிரிக்கலாம்
ஆரோக்கியமான மனிதனுக்கு நாள் ஒன்றிற்கு 8 மணி நேர வேலை, 8 மணி நேர மன மகிழ்வு, 8 மணி நேர உறக்கம் தேவை என கூறப்படுகின்றது.
உழைப்பாளர் தினம் – இந்தியா
இந்தியாவில் , சென்னை மாநகரில் முதன்முறையாக மே தினம் (first may day celebration in india) கொண்டாடப்பட்டது. தலைசிறந்த சீர்திருத்தவாதியும், பொதுவுடைமைவாதியுமான சிங்காரவேலர் 1923ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்.
நாட்டின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தங்கள் உதிரத்தை வியர்வையாக சிந்தி உழைத்திடும் தொழிலாளர்களின் வாழ்வில் ஒளிமயமான வாழ்க்கை உதயமாக வேண்டும். அத்தகைய உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர் அனைவருக்கும் அரியர் இருந்தாலும் கெரியர் சார்பில் மே தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். கெரியர் குறித்து பல பயனுள்ள தகவல்களுக்கு Arrear Irundalum Career சேனலை Subscribe செய்து பயன்பெறுங்கள்.
May Day Celebrations in India
Labour day is a day meant to celebrate those who work for the growth and development of organisations, groups and others. May Day is celebrated as a day dedicated to the unity and willpower of the workers. In most countries, this day is celebrated on May 1st.
How was Labour Day formed?
On May 1st, 1886, a group of workers got together and went on a rally on behalf of the American Federation of Labour, to protest against long working hours. They urged the US to fix the number of working hours to 8 hours a day in Chicago, North America. This resulted in several deaths. Ensuing this, a daily working period was fixed. This day soon began to be observed as World Labour Day.
The 8-hour rule:
In order to stay healthy, a healthy person ought to have 8 hours of rest. This will ensure a good sense of clarity and one will be fit to work for the following day.
Uzhaipalar Thinam in India:
In India, the first May Day was celebrated on May 1st, 1923. Singaravelar, a reformer and Socialist, marked this day on Marina Beach, located near the Madras High Court.
Every employee contributes in their own way, and their efforts ought to be appreciated and valued. We at Arrear Irundalum Career wish everyone a happy Labour Day!
For any information you need regarding career guidance tips, please subscribe to our channel – https://www.youtube.com/channel/UCcc7…
Leave a Reply