நேரத்தை சிறப்பாக நிர்வகித்து (time management tips in tamil) வாழ்வில் எளிதாக வெற்றி பெறும் வழிகள் குறித்து இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக நாம் பள்ளி பருவத்தில், பள்ளிக்கு சென்று வந்தவுடன், வீட்டு பாடம், விளையாட்டு, கல்வி சாராச் செயல்பாடுகள் என தினசரி எல்லாவற்றிற்கும் நேரத்தை செலவிடுவோம். ஆனால் அதுவே நாம் வேலைக்கு செல்லும்போது, எதற்கெடுத்தாலும் நேரம் இல்லை, குடும்பத்துடன் மகிழ்ச்சியாய் இருப்பதற்கு நேரம் போதவில்லை, 24 x7 நேரம் போதவில்லை என்று புலம்புவோம். இப்படி சொல்லி சொல்லியே நம்மை நாம் பிசியாக காட்டிக்கொள்வது மிகவும் தவறான ஒரு செயலாகும்.
இந்த செயல் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தை தடை செய்ய வழிவகுக்கும். ஏன் என்று நீங்கள் கேட்கலாம்?. புதுமையான விஷயங்கள் கற்றுக்கொள்ள தவறுவது, மன அழுத்தம் ஏற்படுவது, வேலையில் கவனம் குறைவது உள்ளிட்ட பல விஷயங்களை கூறிக்கொண்டே போகலாம்.
வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெற வேண்டுமானால் நேரத்தை நிர்வகித்தாலே போதும். அப்படி நேரத்தை சிறப்பாக நிர்வகிக்கும் வழிகளை (time management skills in tamil) நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம். இலக்கை சரியாக அமைக்கவேண்டும் குறிப்பிட்ட இலக்கு: குறிப்பிட்ட இலக்கை அடைவதில் கவனம் இருக்க வேண்டும்.
அர்த்தமுள்ளவை: : அர்த்தமுள்ள இலக்காக இருக்க வேண்டும் அடையக்கூடியவை : ஒரே நாளில் இலக்கை அடைய வேண்டும் என்று எண்ணக்கூடாது.
தொடர்புடையது : படிப்படியாக முன்னேற முயல வேண்டும் நேரம் சார்ந்தவை : நேரம் சார்ந்த இலக்கை அடைய முயல்வது
2. முன்னுரிமை கொடுத்து செயல்படுவது முக்கியமானதும் அவசரமானதும் – உடனே செய்து முடிக்க வேண்டிய பணி இது முக்கியம் ஆனால் அவசரம் இல்லை – முக்கியமானதாக இருந்தாலும் சற்று தள்ளி வைத்து பிறகு அந்த வேலையை செய்யலாம் அவசரம் ஆனால் முக்கியமில்லை – முக்கியமானதாக இருந்தாலும் வேறு யாருக்காவது ஒதுக்கலாம் அவசரம் இல்லை முக்கியமில்லை – எல்லா வேலையும் முடித்த பின் செய்யலாம்.
3. முன்னதாகவே திட்டமிடுங்கள் வேலைக்கு செல்லுமுன் திட்டமிட்டு செல்வது நல்லது
4. கவனத்தை சிதறவிடாதீர்கள் கவனத்தை சிதறவிடாமல் இருக்க வேண்டும். இதற்கு நம் பக்கத்தில் ஒருவர் அமர்ந்து பேச வேண்டும் என்பதில்லை. மொபைல் போனை பார்த்து அதனுள் மூழ்குவதும் கூட.
5. முடியாது என்று சொல்ல கற்றுக்கொள்ளுங்கள் வேலையில் பாரம் அதிகமாகும் போது அதனை செய்ய முடியாது என்று கனிவுடன் சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும்
6. சரியாக நேரம் ஒதுக்குதல் இடைவெளி, ஓய்வெடுக்க நேரம் இதையெல்லாம் மனதில் நிறுத்தி நேரம் ஒதுக்க வேண்டும்
7. நுட்பமாக பணிபுரிதல்/ அவுட்சோர்ஸ் கொடுப்பது எல்லா வேலையும் நம்மால் செய்ய முடியாது. அதற்கு நேரமும் இருக்காது. வேறு குழுவில் சிறப்பாக செய்யும் நபர்களுக்கு அந்த வேலையை கொடுத்துவிடலாம்.
8.ஒழுங்கமைக்கப்பட வேண்டும் கோப்புகள், கம்ப்யூட்டர் தரவு, வேலையை பட்டியல் போட்டு வைத்து ஒழுங்குபடுத்துவதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்தலாம் இந்த 8 வழிகளை நீங்கள் பின்பற்றி உங்கள் நேரத்தை நிர்வகிப்பதன் மூலம் (time management in Tamil) வாழ்க்கையில் வெற்றி பெறலாம். மேலும் கெரியர் குறித்த பல பயனுள்ள தகவல்களுக்கு Arrear Irundalum Career சேனலை Subscribe செய்யுங்கள்
Leave a Reply