‘கண்முன்னே கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள்! தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்!’
எல்லோரும் பொதுவாக ஆசைப்படுவது, அதிக சம்பளத்தில் ஒரு நல்ல வேலைக்கு செல்வது தான். ஒருவர் வேலைக்கு செல்வது என்பது தன்னை மட்டுமின்றி , தன்னை சார்ந்து வாழ்கின்ற குடும்பத்தையும் காப்பாற்ற உதவுகின்றது. அதேபோல் ஒருவருக்கு வேலை கிடைக்கவில்லை எனில் அது அவரை மட்டுமின்றி அவருடைய குடும்பத்தையும் பாதிக்கிறது.
இன்றைய நவீன யுகத்தில் தற்போதைய சூழ்நிலையில் வேலை கிடைத்தால் போதும், சம்பளம், அவை நமக்கு பிடித்த வேலையா என்பதெல்லாம் யோசித்து பார்க்கின்ற சூழலில் நாம் இல்லை. பள்ளி படிப்பை படித்து முடிக்கும் மாணவனோ அல்லது அவனின் பெற்றோரோ, கல்லூரி படிப்பில் முதலில் தேர்ந்தெடுப்பது மருத்துவம் அல்லது பொறியியல் துறை சார்ந்த படிப்புகளாக தான் இருக்கும். அதன்பிறகு தான் வேறு படிப்பை தேர்ந்தெடுப்பார்கள். கல்லூரியில் படித்து முடிக்கும் மாணவர்களில் சிலர் மட்டுமே வேலைவாய்ப்பு பெறுகின்றனர். படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பதெல்லாம் கடினமான விஷயம் தான். சிலர் வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் அரசு வேலையை விரும்பி அதற்காக படிப்பார்கள். ஒரு சிலர் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் தவிப்பார்கள். ஆனால் இதில் பலர் ஏதோ ஒரு சூழ்நிலையில் best high paying jobs in india என்று இணையத்தில் தேடி இருப்பார்கள். இவர்களை போன்றவர்கள் தான் அவர்கள் கண்முன்னே கொட்டி கிடக்கும் வேலைகளை கண்டுகொள்வதில்லை. வேலை கிடைக்காமல் தவிப்பவர்களுக்கும், very high paying jobs போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி யூடியூப்பில் தேடுபவர்களுக்கும் பல பயனுள்ள தகவல்களை கொடுப்பதே Arrear Irundalum Career சேனலின் முக்கிய குறிக்கோள்.
அதில் சில துறைகளின் வேலை வாய்ப்புகளையும் அதன் சம்பளத்தையும் கீழே பார்க்கலாம் ( highest paying careers )……
1.உணவு டெலிவரி – 1:10
உணவு இன்றி எந்தவொரு உயிரினமும் வாழமுடியாது. தற்போதைய சூழலில் பல தனியார் நிறுவனங்கள் உணவு டெலிவரி ( highest paying food delivery jobs ) செய்யும் அப்களை செயல்பாட்டில் விட்டுள்ளன . அவை மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளன. உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்வதன் மூலம் குறைந்தபட்சமாக மாதத்திற்கு ₹20 முதல் 25ஆயிரம் ரூபாய் வரை சம்பாரிக்க முடியும்.
2. மேக் அப் ஆர்டிஸ்ட் – 1:22
மேக் அப் இன்றி சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை. குறிப்பாக பெண்கள் இதன் மூலம் நல்ல வேலைவாய்ப்புடன் அதிக சம்பளமும் பெறமுடியும். அதாவது ஒரு திருமணத்திற்கு மேக் அப் போட்டால் ₹15 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பாரிக்க முடியும். இதற்கு 12ம் வகுப்பு வகுப்புடன் ஒரு சர்டிஃபிகேட் கோர்ஸ் படித்தால் போதுமானது.
3. வெடிங்/ ஃப்ரிலேன்ஸ் போட்டோகிராஃபர் – 1:43
பெரும்பாலும் எல்லா நிகழ்ச்சிகளிலும் புகைப்படம் எடுப்பது என்பது இன்றியமையாததாகும். அதனால் திருமணம் மட்டுமின்றி மற்ற நிகழ்ச்சிகளையும் புகைப்படம் எடுப்பதற்கான வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. வெடிங் போட்டோகிராஃபி வேலை செய்வதன் மூலம் ஒரு மாதத்திற்கு ₹30 முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை நம்மால் சம்பாரிக்க முடியும். அதேபோல் ஃப்ரிலேன்ஸ் போட்டோகிராஃபராகவும் வேலை செய்து நல்ல வருமானம் பெறமுடியும். போட்டோகிராஃபர் ஆவதற்கு 12ம் வகுப்புடன் ஒரு சர்டிஃபிகேட் கோர்ஸ் படித்தால் போதுமானது.
4. டியூஷன் சென்டர் – 2:10
நாம் வேறு வேலைக்கு சென்றாலும் , மாலையில் ஓய்வு நேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பதன் மூலம் நல்ல வருவாய் ஈட்டலாம். அல்லது முழு நேரமாகவும் காலை மற்றும் மாலை வேளையில் டியூஷன் எடுத்து சம்பாரிக்கலாம். பள்ளி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க ஒரு இளங்கலை பட்டம் பெற்றால் போதுமானது. இதன்மூலம் ஒரு மாதத்திற்கு ₹60 முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் பெற முடியும்.
5. யூடியூப் சேனல் – 2:45
இந்தியாவில் யூடியூப்-பை 225 மில்லியின் அதாவது 22.5 கோடி பேர் பயன்படுத்துவதாக சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறைந்த செலவில் இண்டர்நெட் (டேட்டா) சேவை மற்றும் ஸ்மார்ட்போன் கிடைப்பதனால் இணையத்தில் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. யூடியூப்பில் தொடர்ந்து வீடியோக்களை பதிவேற்றம் செய்வதன் மூலம் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெறுவதோடு, ₹50 முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை வருமானமும் ஈட்டமுடியும்.
Leave a Reply