புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நிர்வாகத் திறன்கள் (management skills in Tamil) குறித்து இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத பெயர். கூல் கேப்டன் என்று தனது ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். இந்திய கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டன்களுள் ( leadership management in tamil ) ஒருவர். இவர் இந்திய அணியில் மேற்கொண்ட நிர்வாகத் திறன், தலைமைப் பண்பு, உத்திகள் (Dhoni leadership skills) எல்லாம் நமக்கு பல பாடங்களை கற்றுக்கொடுக்கும்.
நீங்கள் ஒரு தொழிலை தொடங்கி நிர்வகிக்க வேறு யாரிடமும் போய் தெரிந்து கொள்ள தேவையில்லை. இந்த வீடியோவில் நம்ம தல தோனி (Dhoni management skills ) பயன்படுத்திய உத்திகளில் இருந்து நாம் கற்று கொள்ளும் நிர்வாக திறன்களை பற்றி நாங்கள் சொல்லி தருகிறோம். தயக்கமின்றி தன்நம்பிக்கையுடன் இருப்பது ஒரு கேப்டனாக ( leadership qualities in tamil ) அவர் பயன்படுத்தும் உத்திகள் மீது நம்பிக்கை வைப்பார் தோனி. அதேபோல் தொழிலில் நாம் மேற்கொள்ளும் உத்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஈகோக்களை கையாள்வது சீனியர் பலர் இருந்தபோதிலும் தோனி கேப்டன் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.
தோனி சீனியர்களை அரவணைத்து அவ்வப்போது அவர்களின் ஈகோவை சீண்டாதவாரும் நடந்துகொள்வார். இதேபோல் நாமும் சீனியர் ஜூனியரை அரவணைத்து செல்ல வேண்டும். வெற்றியை கையாளும் திறன் இந்திய அணி வெற்றி அடையும் போது அலட்டிக்கொள்ளமாட்டார் தோனி. தோல்வி அடையும் போதும் இதே நிலையை கடைப்பிடிப்பார். நெருக்கடியான சூழ்நிலையில் அமைதியாக இருப்பது வெற்றிபெற வேண்டிய நெருக்கடியான கட்டத்தில் கூட கேப்டன் கூல் தோனி மிகவும் கூலாக ஃபீல்டில் காணப்படுவார். உறுதியான நிலைப்பாடு தோனியின் இலக்கு வெற்றி மட்டுமே.
நம்மை சுற்றி பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும் நமது இலக்கை நோக்கி தொடர்ந்து பயணிக்க வேண்டும். உங்கள் உள்ளுணர்வை நம்புவது எந்த சூழலிலும் நீங்கள் எடுக்கும் முடிவு சரி என்று பட்டால் உடனே அதனை நம்பி செயல்படுத்துங்கள். தோல்வியை கையாளும் திறன் தோல்வியில் உணர்ச்சிவசப்படாமல் யோசித்து அணியின் நம்பிக்கையை சிதறாத அளவிற்கு பார்த்து கொள்வார் தோனி.
போட்டியாளருக்கு மரியாதை கொடுத்தல் எதிர் அணிகளை தரக்குறைவாக பேசாமல் மரியாதையோடு எதிர்கொள்வார் தோனி. அணியில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படுதல் தோனி, கேப்டனாக மட்டுமில்லாமல் ஒரு சக வீராக விளையாடுவார். பன்முகத்தன்மை கேப்டனாக மட்டுமில்லாமல் பேட்டிங், விக்கெட் கீப்பராகவும் தோனி திறம்பட செயல்படுவார். வாழ்வில் பல திறன்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
Leave a Reply