ஐஏஎஸ் பயிற்சிக்கு உதவிடும் இணையதளங்கள்

career guidance in tamil

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார் ஆவதற்கு, இணையதளத்தில் ( best websites for upsc exam )  கிடைக்கும் தகவல்களும் மிக முக்கிய அம்சமாக கருதப்படுகின்றன. இணையதளம் பிரபலமடைந்த பின்னர் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படிப்பவர்களுக்கு தேவையான தகவல்களை வழங்கவே பிரத்யேகமாக பல இணையதளங்கள் உருவாக்கப்பட்டு விட்டன. இணையதளம் பிரபலமடைவதற்கு முன்பு பாடப் புத்தகங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு சிவில் சர்வீஸ் தேர்வர்கள், தங்கள் இலக்கை நோக்கிப் பயணித்தனர். ஆனால், இணையதளம் பிரபலமடைந்த பின்னர், பாடப் புத்தகங்களுக்கு அளிக்கப்படும் அதே முக்கியத்துவம், இணையதளம் மூலமாக படிப்பதற்கு அளிக்கப்படுகிறது. ஆனால், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராக என்னென்ன புத்தகங்களை படிக்க வேண்டும், சேகரிக்க வேண்டும் என்பதற்கு ஒரு பட்டியல் இருப்பது போல, இணையதளத்திற்கும் வரையறுக்கப்பட்ட பட்டியல் என்று எதுவும் இல்லை. ஆகவே, அந்த கடினமான பணியை எளிதாக்கும் விதமாக, எந்தெந்த இணையதளங்களை படித்தால், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற உதவிகரமாக இருக்கும் என்ற இந்தக் கட்டுரையை வழங்குகிறோம்.

இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில் இணையதளத்தின் சக்தியை அனைவரும் அறிந்திருக்கிறார்கள். ஆனால், சிவில் சர்வீஸ் போன்ற போட்டித் தேர்வுக்கு எந்த இணையதளத்தை ( ias preparation websites in tamil )  தேர்வு செய்து படிக்க வேண்டும், பின்பற்ற வேண்டும் என்ற புரிதல் பலரிடம் இல்லை. இணையம் என்பது பெருங்கடல் போன்றது. அதில் எந்த இணையதளத்தை தேர்வு செய்ய வேண்டும் என்பதை வரையறுக்கத் தவறினால், காலம் விரையமாவதை தடுக்க இயலாது. இணையதளத்தை பொறுத்தவரை இரண்டு வகை உண்டு, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன். இதில் ஆன்லைன் பயிற்சி என்பதற்கு சில எல்லைகள் வரையறுக்கப்பட்டிருந்தாலும், இதன் மூலம் கிடைக்கும் பயன்கள் அதிகம்.

யூ-டியூப் சேனல்கள்:

சிவில் சர்வீஸ் தேர்வைப் பொறுத்தவரை என்ன படிக்கிறீர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது நீங்கள் எவ்வளவு படிக்கிறீர்கள் என்பதும் ஆகும். இணையம் பல முக்கியமான தகவல்களை அளிக்கும் காரணத்தால், புத்தகங்களை வாங்கிக் குவிப்பதை விட இணையத்தில் தகவல்களை திரட்டி, அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்வதும் நல்ல மாற்று யோசனையாக முன்னெடுக்கப்படுகிறது.

(((  ஐஏஎஸ் – அனைத்து சந்தேகங்களுக்கும் விடை அறிய ))))

தினசரி படிக்க வேண்டிய இணையதளங்கள்:

newsonair.com:

இந்த இணையதளத்தில் தினமும் இரவு 9 மணிக்கு அப்டேட் செய்யப்படும் ஆல் இந்தியா ரேடியோ செய்திகளை வாசிப்பதன் மூலம் அன்றாட நிகழ்வுகளை அறியலாம். மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் விவாதங்களும், பல்வேறு துறைகளில் அறிவை வளர்த்துக் கொள்ள உதவும்.

pib.nic.in:

அரசு அமைச்சகங்கள், துறைகளில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பான தகவல்கள், உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் முக்கிய வழக்குகளின் விவரங்கள் மற்றும் தீர்ப்புகள் பற்றியும் இதில் விரிவான தகவல்கள் அளிக்கப்படும்.

ptinews.com:

ஐ.ஏ.எஸ். முதல்நிலைத் தேர்வுக்கு தேவைப்படும் முக்கியத் தகவல்களை குறுஞ்செய்தி போல் அறிந்து கொள்ள இந்த பிரஸ் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியாவின் இணையதளம் பயன்படும். இந்தியாவின் முன்னணி செய்தி சேகரிப்பு அமைப்பான PTI மூலம், எந்த ஒரு நிகழ்வு பற்றியும், அது எங்கே, எப்படி, எப்போது நடந்தது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.

இந்த இணையதளங்களுடன் economictimes.indiatimes.com, thehindu.com போன்ற தனியார் செய்தி நிறுவனங்களின் இணையதளங்களை தினசரி பார்வையிட்டு, படிப்பதன் மூலம் வணிகம், அரசியல், விளையாட்டு போன்ற பல்வேறு பிரிவுகளிலும் தினசரி நிகழ்வுகளை அறியலாம்.

மேற்கூறிய இணையதளங்கள் ( upsc preparation websites in tamil )  மூலம் தினசரி நிகழ்வுகள் பற்றி மேலோட்டமாக அறிந்து கொள்ள முடியும். ஆனால், தினசரி செய்திகளைத் தாண்டி வேறு சில முக்கியமான விவரங்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்கள் உதவிடும்.

prsindia.org:

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தங்கள், நிறைவேற்றப்பட்டவை மற்றும் நிலுவையில் இருக்கும் சட்ட திருத்தங்கள் பற்றி இந்த இணையதளத்தில் அறிந்து கொள்ள முடியும். மாதம் ஒரு முறை அல்லது 2 மாதங்களுக்கு ஒருமுறை இதனை பார்வையிட்டு, அப்டேட்களை அறிந்து கொள்ளுங்கள்.

mea.gov.in:

பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான தகவல்கள், பிற நாடுகளுடன், இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தங்கள் பற்றிய தகவல்களை அறிய இந்த இணையதளம் உதவிடும்

yojana.gov.in:

யோஜனா மற்றும் குருக்‌ஷேத்ரா இதழ்களின் புதிய அத்தியாயங்களை இங்கே படிக்க முடியும்.

envfor.nic.in:

இந்தியாவின் சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள இந்த இணையதளம் உதவிகரமாக இருக்கும். குறிப்பாக இந்த இணையதளத்தால் வெளியிடப்படும் ஆண்டறிக்கை, ஐ.ஏ.எஸ். முதல்நிலை தேர்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

vikaspedia.in:

இந்திய அரசின் சார்பில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற திட்டங்கள் தொடர்பான விவரங்களை இந்த இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்திய அரசின் நோக்கம் மற்றும் இலக்குகளை இந்த இணையதளத்தை படிப்பதன் மூலம் முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

upsc.gov.in:

 சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் யாரும் இந்த இணையதளத்தை பார்வையிடாமல் இருக்க முடியாது. முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பு மற்றும் சிவில் சர்வீஸ் தேர்வு தொடர்பான அறிவிப்புகள் இந்த தளத்தில் அதிகாரப்பூர்வமாக கிடைக்கும்.

ncert.nic.in

NCERT-யின் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களை இங்கே PDF வடிவில் கிடைக்கும் என்பதால், இது சிவில் சர்வீஸ் தேர்வர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இவை தவிர கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு கை கொடுக்கும்.

1.   thesupermanreturns.wordpress.com

2.   unravellingcse.wordpress.com

3.   youtube.com/user/unacademy

4.   irasinghal.blogspot.in

5.   rijubafna.com

6.   iasdream.com

7.   jhinujha.wordpress.com

8.  lohitmatani.wordpress.com

9.   iasforums.comupscforums.com

www.rbi.org.in:

இந்த இணையதளம் இந்திய ரிசர்வ் வங்கியின் பொருளாதார கொள்கை மற்றும் அதுதொடர்பான ஆண்டறிக்கைகளை வெளியிடும். இவை மட்டுமின்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களின் மூலமாகவும் பல்வேறு மதிப்புமிக்க தகவல்களை அறிந்து கொள்ளலாம்.


1.www.socialjustice.nic.in

2. www.indiaculture.nic.in

3.www.planningcommission.nic.in

4.www.gov.in

5.www.pib.nic.in

6.www.nasscom.org

7.www.arc.gov.in

8.www.indiagovernance.gov.in

கவனிக்க வேண்டியது:

ஏற்கனவே கூறியது போல் இணையம் என்பது கடல் போன்றது. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் நபர்கள், சரியான இணையதளத்தை ( tamil websites for upsc preparation ) தேர்வு செய்வது என்பதே சவாலான பணி. எனவே, மேலே குறிப்பிட்ட இணையதளங்களில் சிறப்பானவற்றை தேர்வு செய்து அவற்றை தொடர்ந்து படித்து வந்தால், வெற்றி நிச்சயம்.

(((( சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுவது எப்படி?h)))))

இணையம் என்பது கட்டற்ற தகவல்களை உள்ளடக்கிய அட்சய பாத்திரம் என்றும் கூறலாம். ஆனால், அதே இணையம் உங்களின் நேரத்தை விரையமாக்கிடும் மாயக் கண்ணாடியாகவும் மாறி விடக் கூடும். எனவே, எந்தெந்த இணையதளங்களை படிக்க வேண்டும் என்பதில் உறுதியான கட்டுப்பாடு இருக்க வேண்டியது அவசியம்.

இணையத்தில் பயிலும் அதே நேரம், நாளேடுகள், இதர மாதிரி வினாத் தாள்களை படிப்பதில் ஆர்வமின்றி இருந்து விடக் கூடாது. குறிப்பாக நாளேடுகள் வாசிக்கும் பழக்கத்திற்கு எந்த ஒரு ஊடகமும் மாற்றாக இருக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *