ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் தேர்வை எதிர்கொள்ள தயாராகி வரும் மாணவ, மாணவிகளுக்கு மனதளவில் உத்வேகத்தையும், அடுத்தகட்டம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் அளிக்கும் விதமாக, ஐ.ஏ.எஸ். பயிற்சி ( how to join lbsnaa in tamil ) எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பற்றி விளக்கும் வகையில் இந்த கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, ஐ.ஏ.எஸ். கனவு நனவாக்கிய பலருக்கும், அடுத்தது என்ன என்ற கேள்வி எழும். அவர்களைப் பொறுத்தவரை வாழ்வின் முக்கிய திருப்புமுனையை தாண்டி விட்டார்கள். ஆனால், ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உருவெடுப்பவர்கள் என்ன மாதிரியான பயிற்சிகளை மேற்கொள்வார்கள் என்பதை அறிந்து கொள்வது, சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு மனதளவில் உத்வேகம் ஏற்படுத்தும். இந்த காரணத்திற்காக, ஐ.ஏ.எஸ். தேர்வில் வென்றவர்கள் அடுத்து செய்யப் போவது என்ன என்பது பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாக பேசி இருக்கிறோம்.
ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு லால் பகதூர் சாஸ்த்ரி தேசிய அகடமியில் ( lal bahadur shastri national academy of administration ), நிர்வாக தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படும்.
ஐ.ஏ.எஸ். பயிற்சியின் முதல் நிலை:
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் கால கட்டத்தில், இந்திய ஆட்சிப் பணி தொடர்பாக காகிதங்களில் படித்த விஷயங்கள் பற்றி விரிவாக புரிந்து கொள்ளும் நிலை தான் இந்த முதல்நிலை. ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தனது பணியை தொடங்கும் ஒருவர், அடுத்த 10 ஆண்டுகள் செய்யப் போகும் அரசு ரீதியிலான பணிக்கு தேவையான அனைத்து அடிப்படை விஷயங்களும் இங்கே கற்றுக் கொடுக்கப்படும். ஒரு மாவட்டத்தை நிர்வகிக்கப் போகும் ஆட்சியராகும் தகுதி அவருக்கு கிடைக்கச் செய்வதும் இந்த முதல் நிலையில்தான்.
1) குளிர்கால கல்விப் பயணம்/ பாரத தர்ஷன்
ஐ.ஏ.எஸ். பயிற்சி பெறும் நபர், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று, இந்திய பன்முகத் தன்மையை பற்றி அறிந்து கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள்.
அதேபோல் நாடாளுமன்ற நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதை அறிய நாடாளுமன்ற செயல்பாடுகள் பற்றியும், இந்திய குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், பிரதமர் ஆகியோரை சந்தித்து ஒரு வாரம் அவர்களிடம் பேசுவதற்கும் அனுமதிக்கப்படுவார்கள்.
2) அடிப்படை கல்வி/புரிதல்:
ஐ.ஏ.எஸ். செயல்பாடுகள்/ தேசிய பாதுகாப்பை வரையறுப்பதில் ஐ.ஏ.எஸ். பங்களிப்பு/ சட்டம் – ஒழுங்கு, விவசாயம்/ நில மேலாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாடு / பஞ்சாயத்துராஜ் நகர்ப்புற மேலாண்மை / தனியார் – அரசு கூட்டு முயற்சியின் மூலமான மின் ஆளுமை போன்ற விஷயங்கள் பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்படும்.
திறமைகள் (தலைமை பண்பு, ஆளுமைத் திறன், குழுவாக செயல்படுதல்), திட்ட மேலாண்மை, நிதி நிர்வாகவியல், பொருளாதார ரீதியாக பின் தங்கிய நிலையில் இருப்பவர்களை மீட்டெடுப்பதற்கான யோசனைகள் பற்றி பயிற்சி அளிக்கப்படும்.
3) மாவட்ட பயிற்சி
ஐ.ஏ.எஸ். பயிற்சி பெறுபவர்கள் சுமார் ஒரு வருட காலம் மாவட்ட பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள முரண்பாடுகள், பன்முகத் தன்மை, சவால்கள் போன்றவற்றை பார்க்கவும், படிக்கவும் உதவும் வகையில் இந்த பயிற்சி அமையும்.
இந்தியாவின் நிர்வாக அமைப்பை பற்றி படிப்பதற்கும், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்புகொள்வதற்கும் மாவட்ட பயிற்சி பலவிதமான வாய்ப்புகளை வழங்குகிறது.
(( நீட் தேர்வுக்கு தயாராவது எப்படி? : ))
ஐ.ஏ.எஸ். பயிற்சியின் 2ம் நிலை:
இந்த 2ம் கட்ட பயிற்சியில் ( lbsnaa training in Tamil ), துறை ரீதியில் பெறப்பட்ட தனிப்பட்ட கற்றல் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு தளம் அமைத்துக் கொடுக்கப்படுகிறது. மேலும் நிர்வாகம் மற்றும் அதன் பலம் மற்றும் பலவீனங்களை வெளிப்படுத்தவும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
கருத்து பரிமாற்றத்துடன் கூடிய கற்றல் முறையில் அளிக்கப்படும் இந்த 2ம் கட்ட பயிற்சியில், நிபுணர்களுடன் சிறப்பு அமர்வுகள் மற்றும் அவர்களுடனான கலந்துரையாடல்கள் மூலம் அரசுக்கு உள்ளே, வெளியே நடைபெறும் செயல்பாடுகள் பற்றி புரிதல் கிடைக்கும்.
ஐ.ஏ.எஸ். பயிற்சியாளர்கள் (OT கள்) பொது சேவையில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன், பயிற்சியின் இந்தக் கட்டம் ஒரு துடிப்பான கற்றல் களமாக அமைகிறது.
ஐ.ஏ.எஸ். பயிற்சி எப்படி இருக்கும்?
லால் பகதூர் சாஸ்த்ரி தேசிய அகடமியில் ( lbsnaa academy ) தினமும் காலை 6 மணிக்கு செயல்பாடுகள் தொடங்கும். பயிற்சி பெறுபவர்கள் காலை 6 மணி முதல் 7 மணி வரை உடற்பயிற்சிகள் மேற்கொள்வர். பின்னர் காலை உணவு உள்ளிட்டவற்றை நிறைவு செய்து விட்டு சரியாக 9 மணிக்கு வகுப்புகளுக்கு செல்வார்கள். அங்கு ஐ.ஏ.எஸ். பயிற்சி தொடர்பான பாடங்கள் அவர்களுக்கு பயிற்றுவிக்கப்படும். மாலை 5 மணிக்கு மேல் பெரும்பாலும், விளையாட்டுகளே ஆக்கிரமித்திருக்கும். பெரும்பாலான நேரம் கலந்துரையாடல் மூலம் அறிவுப் பரிமாற்றம் நிகழும். இரவு உணவு மற்றும் அடுத்த நாள் தயாரிப்புகளுக்கு மீதி நேரம் செலவிடப்படும்.
கிரிக்கெட், யோகா, பில்லியர்ட்ஸ், டேபிள் டென்னிஸ், தடகளம், வாலிபால் உள்ளிட்ட பிரபலமான உள்ளரங்க மற்றும் வெளி அரங்க விளையாட்டுகள் லால் பகதூர் சாஸ்த்ரி தேசிய அகடமியில் பிரபலமாக விளையாடப்படுகின்றன்.
வார இறுதி நாட்கள் பொதுவாக விடுமுறை என்பதால், சமூக சேவை, அட்வென்சர் விளையாட்டுகள், மலையேற்றம், பாராகிளைடிங், படகுப் போட்டி, சிறிய பயணம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். உடல் மற்றும் மன வலிமை சிறப்பாக இருந்தால் மட்டுமே, ஐ.ஏ.எஸ். என்ற நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பணியில் சிறப்பாக செயல்பட முடியும் என்பதே இதன் உள் அர்த்தமாக இருக்கிறது.
அதே நேரம் நெருக்கடியான தருணங்களை சமாளிப்பதற்கும், மோசமான சூழ்நிலைகளில் வாழப் பழகிக் கொள்வதற்கும் கூட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. உதாரணமாக, இமயமலையில் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ளும் போது, மோசமான வானிலை, குறைவான உணவுக் கையிருப்பு, பாதுகாப்பற்ற தங்குமிடம், பல தரப்பட்ட சீதோஷ்ண நிலைக்கு, பழகிக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக, மிகவும் பின்தங்கிய கிராமத்திற்கு சென்று அங்கு சில நாட்கள் தங்க வேண்டும். இந்தக் கால கட்டத்தில், கிராமத்து வாழ்வின் நிலையை அறிவதுடன், அங்குள்ள மக்களின் பொருளாதாரம் குறித்தும் தெரிந்து கொள்ள முடியும்.
அறிவுசார் கற்பனையை வளர்த்துக் கொள்வதும், ஏதாவது ஒரு துறையில் ஆர்வத்தையும் ஐ.ஏ.எஸ். பயிற்சி பெறுபவர்கள் ஏற்படுத்திக் கொள்வதும் பயிற்சியின் முக்கிய அம்சமே.
(( MBA நுழைவுத்தேர்வு சாதிக்க :))
ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றும் போதும் எதிர்கொள்ள வேண்டிய சவால்களுக்கு அவர்களை முழுமையாக தயார்படுத்துவதே இந்தப் பயிற்சியின் பிரதான நோக்கம். அந்த வகையில் பல்வேறு விதமான அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட்டாலும், அதற்கு தேர்வு நடத்தி மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. பணி நியமனமும், இந்த மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நடைபெறுகிறது. பயிற்சிக் காலத்தில், ஒவ்வொருக்கும் Stipend வழங்கப்படும். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உருவெடுப்பவர்கள், ஆட்சிப் பணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலையில் வைத்துக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும் என்ற முதன்மை நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்தப் பயிற்சிகள் ( lbsnaa ias training centre ) வகுக்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் 2 ஆண்டுகளாக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பயிற்சி காலத்தை, ஒன்றரை ஆண்டுகளாக குறைக்கலாம் என கிரண் அகர்வால் கமிட்டி பரிந்துரைத்தது. கடந்த சில ஆண்டுகளாக பயிற்சியை நிறைவு செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் ( upsc exam tips in tamil ) ஆலோசனையை ஏற்று இந்த பரிந்துரையை கிரண் அகர்வால் கமிட்டி அளித்துள்ளது. நான்கு ஆண்டுகள் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றியவர்களுக்கு, Short term refresher Course போன்றவை இங்கே வழங்கப்படுவதால், கிரண் அகர்வால் கமிட்டி பரிந்துரை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாகவே கருதப்படுகிறது.
ஜூனியர் லெவல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான தேவை அதிகரித்திருப்பதன் காரணமாக, பல்வேறு மாநில அரசுகளும் கிரண் அகர்வால் கமிட்டி பரிந்துரைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம் 2 ஆண்டுகளுக்கு பதிலாக ஒன்றரை ஆண்டுகளிலேயே ஜூனியர் லெவல் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பணியில் சேர முடியும் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாக கருதப்படுகிறது.
Leave a Reply