ஃப்ரீலான்சிங் பணிகள் பெற உதவும் இணையதளங்கள்

career guidance in tamil

இந்தியாவில் டிஜிட்டல்மயம் அதிகரித்து வருவதால், அலுவலகத்திற்கு செல்லாமல், இருக்கும் இடத்தில் இருந்தே இணையதளம் ( best freelancing websites in tamil ) மூலம் பணிகளை செய்து முடிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. மில்லினியம் எனப்படும் 2000மாவது ஆண்டில் பிறந்தவர்கள், தற்போது கல்லூரியில் கால்பதித்திருப்பார்கள். கடந்த காலங்களை போல் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு, அலுவலக வேலையை தேடிக் கொண்டு பணிக்குச் செல்வதற்கு பதிலாக, கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பகுதிநேர வேலைகளை செய்து தங்களின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்து கொள்வதும், அவர்களின் வாடிக்கையாக இருக்கிறது. ஆன்லைன் மூலம் உணவு விநியோகிக்கும் பணிகள் அவர்களுக்கு உதவிகரமானதாக இருக்கிறது என்று கூறப்பட்டாலும், இணையதளத்தின் உதவியுடன் இருக்கும் இடத்திலேயே இருந்து கொண்டு, Freelancer எனப்படும் பகுதிநேர பணிகளிலும் கவனம் செலுத்துகின்றனர். இவர்கள் தவிர்த்து, காலை 9 மணிக்கு சென்று விட்டு மாலை 5 மணி வரை அலுவலகத்திலேயே இருந்து பணியாற்றும் செயலை விரும்பாதவர்களும் Freelancer ஆக பணிபுரிவதை விரும்புகின்றனர்.

இதில், Freelancer ஆக பணியாற்றுவதில் உள்ள சாதக அம்சங்கள் என்னவென்றால், உங்களுக்கு பிடித்த நேரத்தில் பணியாற்றலாம்.பரபரப்பான காலை நேரத்தில், போக்குவரத்து நெரிசலை சமாளித்துக் கொண்டு சரியாக 9 மணிக்கு அலுவலகத்திற்குள் செல்ல வேண்டிய நெருக்கடி இல்லை. அதேபோல் மாலை 5 மணி வரை அலுவலத்திலேயே இருக்க வேண்டியதும் இல்லை. உங்களுக்கு நீங்கள் தான் Boss ஆக இருக்கலாம். அலுவலகம் செல்பவர்களுக்கு மாலை 5 மணிக்கு பணி முடிந்து விடும். ஒருவேளை சம்பந்தப்பட்ட வேலையை அவர் அன்றைக்குள் செய்து முடிக்காவிட்டால், அடுத்த நாள் காலையில் மீண்டும் அலுவலகத்திற்கு வந்து அதே வேலையை செய்ய வேண்டியிருக்கும். ஆனால், Freelancer ஆக பணியாற்றும் போது நீங்கள் விரும்பும் நேரத்தில் வேலைகளை செய்து கொள்ள முடியும். தேவைப்பட்டால், மாலையில் 5 மணிக்கு பதிலாக இரவு 8 மணி வரை கூட நீங்கள் பணிகளை தொடரலாம். ஆனால் இதே சவுகரியம் உங்களுக்கு சங்கடமாகவும் மாறி விடக் கூடும். உதாரணமாக ஒரு சில மணி நேரங்களிலேயே முடித்துக் கொடுக்க வேண்டிய வேலையை ஏற்றுக் கொண்டால், உடனடியாக அதனை செய்து முடித்துக் கொடுக்க வேண்டியிருக்கும். அதற்கு உண்டான ஊதியமும் கிடைக்கும் என்பது வேறு விஷயம்.

((( Freelance career தொடங்குவதற்கான டிப்ஸ் ?  )))

சரி, இந்தியாவில் எந்தெந்த முன்னணி இணையதளங்கள் Freelancer பணிவாய்ப்புகளை வழங்குகின்றன என்று இனி பார்க்கலாம்.

1)  ஃப்ரீலான்ஸ் இந்தியா ( Freelance India )

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் இந்த இணையதளம், Freelancer வாய்ப்புகளை அளிப்பதில் முதன்மையான தளங்களில் ( best website for freelancing in india )  ஒன்றாக கருதப்படுகிறது. இலவச பயனாளர் சேர்க்கை மற்றும் கட்டண பயனாளர் சேர்க்கை என இரு விதமான பயனாளர் சேர்க்கையை இந்த இணையதளம் வழங்குகிறது. பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்புகளை அளிக்கும் இந்த தளத்தில் உங்களின் மெம்பர்ஷிப்பிற்கு ஏற்ப Freelance பணிகள் கிடைக்கும். இதன் User Interface மற்றும் User Experience design மிகவும் சிக்கலானதாக இருப்பதால், எல்லோராலும் இந்த இணையதளத்தின் செயல்பாடுகளை முதல் முறையிலேயே புரிந்து கொள்வது கடினம்.

2. அப்ஒர்க் ( Upwork )

Freelance பணிகளுக்கென இந்தியாவின் மிக முன்னணி இணையதளம் இருக்கிறது என்றால், அது இந்த Upwork தளம் தான் என்று தைரியமாக கூறலாம். பெரும்பாலான பிரிவுகளில், அனுபவம் வாய்ந்த மற்றும் புதுமுக தொழில் வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கிறது இந்த இணையதளம். Pinterest, Panasonic, Zendesk மற்றும் Unilever போன்ற பல முன்னணி நிறுவனங்கள் Upwork  தளத்தின் நிரந்தர வாடிக்கையாளர்களாக இருந்து வருகின்றனர். முன் அனுபவம் இல்லாத Fresher ஆக இருந்தாலும், கூட உங்களுக்கு ஏற்ற துறையில், Freelance வேலையை நீங்கள் இந்த தளத்தில் பெற முடியும்.

3. ஃப்ரீலான்சர்.com ( Freelancer.com )

சிறிய நிறுவனங்கள், தங்கள் பணிகளை Freelance முறையில் வழங்க இந்த இணையதளத்தை ( freelance tamil websites ) விரும்பி நாடுகின்றனர். இந்தியாவின் மிகச் சிறந்த பலனளிக்கும் Freelance இணையதளமாக இது கருதப்படுகிறது. சம்பந்தப்பட்ட பிரிவில், கொடுக்கப்பட்டுள்ள Freelance பணிக்கு, யாரெல்லாம் விண்ணப்பித்துள்ளனர், அவர்களின் தகுதி, திறமை என்னவென்று கூட, இதில் உறுப்பினராக இணைபவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த தளத்தின் வடிவமைப்பு இருப்பது சாதகமான அம்சம். முன் அனுபவம் இல்லாத Freelance ஆக இந்த தளத்தில் இணைந்து, பணி வாய்ப்புகளை பெறுவது ஆரம்பத்தில் சற்று சவாலானதாக இருந்தாலும், ஒன்றிரண்டு பணிகளை சிறப்பாக நீங்கள் முடித்துக் கொடுத்தால், உங்கள் Profile மதிப்பு படிப்படியாக கூடும். அதன் பின்னர் Freelance பணி வாய்ப்புகள் உங்களை தேடி அதிகளவில் வரக் கூடும்.

4. ட்ரூலான்சர் ( Truelancer )

அதிக வருவாய் அளிக்க கூடிய Freelance பணிகள், இந்த இணையதளத்தில் அதிகம் இடம்பெற்றிருக்கும் என்பதால், அனுபவ வாய்ந்த Freelancer-கள் இந்த தளத்தை அதிகம் விரும்புகின்றனர். வெப் டிசைனிங், மார்க்கெட்டிங், லோகோ டிசைன், கம்ப்யூட்டர் புரோகிராமிங், காப்பி ரைட்டிங் என பல்வேறு பிரிவுகளிலும் Freelance பணி வாய்ப்புகள் இந்த தளத்தில் அதிகளவில் இருக்கிறது. பணிகளை நிறைவு செய்த பின்னர், சம்பந்தப்பட்ட நபருக்கு உரிய வருவாய் கிடைப்பதையும் இந்த இணையதளம் உறுதி செய்வது, இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

5) 99 டிசைன்ஸ் ( 99Designs )

டிசைனிங் பிரிவில் Freelance பணிகளை விரும்புபவர்களுக்கு ஏற்ற இணையதளமாக இது திகழ்கிறது. இணையதளம் டிசைனிங், டி-ஷர்ட் லோகோ பிரசுரம் உள்ளிட்ட இதர பணிகள் தான் இங்கே கொட்டிக் கிடக்கின்றன. 99Designs இணையதளத்தில் Freelancer ஆக பணியாற்றுவது என்பது, போட்டிகளில் பங்கேற்பதற்கு சமமானதாக இருக்கும். ஏனென்றால், இங்கு போட்டிகளும், திறமை வெளிப்படுத்தும் தன்மையும் சவால் நிறைந்ததாகவே இருக்கும். 

6) இவாண்டோ  ஸ்டூடியோ ( Evanto Studio )

வெப் டிசைனிங், அனிமேஷன், வீடியோ எடிட்டிங் போன்ற பிரிவுகளில் குறுகிய கால அல்லது நீண்ட கால Freelance பணிகளை தேடுபவர்களுக்காகவே உருவாக்கப்பட்டது தான் இந்த இணையதளம். இங்கு பதிவு செய்து கொண்ட Freelancer-கள் தங்களின் திறமையை பிரதிபலிக்கும் வகையில் சாம்பிள், எதிர்பார்க்கும் சம்பளம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து வைத்திருப்பார்கள். இவற்றை பார்வையிடும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான திறமையாளரை தேர்வு செய்து Freelance பணியை வழங்கும்.

7) டாப்டல் ( Toptal )

இந்தியாவில் உள்ள மற்ற Freelancer தளங்களை போல் அன்றி, இந்த இணையதளத்தில் ( best website for freelancing in tamil ) அனுபவம் மிக்க Freelancer-கள் மட்டுமே பயனாளர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். குறிப்பாக, பயனாளராக தேர்வு செய்யப்படும் முன்பாக சம்பந்தப்பட்ட துறையில் தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே பயனாளர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இவ்வளவு கெடுபிடி ஒருபக்கம் இருந்தாலும்,  Airbnb, Emirates, JP Morgan போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளர்களாக இருப்பதால், ஊதியமும் அதிகமாகவே கிடைக்கும்.

((  பார்ட் டைம் வேலை பெறலாம் வாங்க ))

8) ஒர்க் அன் ஹையர் ( WorknHire )

இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பணிகளை செய்து கொடுக்கும் இந்த இணையதளம், Freelancer-களின் பாதுகாப்பான முறையில், ஏமாற்றப்படாமல், பணி செய்ததற்கான கட்டணத்தை பெறவும் வழி வகை செய்துள்ளது. மேலும், Freelancing செய்பவர் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே இருக்கும் வாடிக்கையாளர்களைப் பற்றிய தகவல்களையும் இந்த தளம் வழங்குவதால், எதிர்காலத்தில் மேலும் பல புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளவும் இந்த தளம் கை கொடுக்கிறது. 

9) குரு ( Guru )

அனுபவம் வாய்ந்த Freelancer-களுக்கு இந்த தளத்தில் ஏராளமான பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன. தங்களின் முந்தைய பணிகளின் Sample-களை காண்பித்து, புதிய பணி வாய்ப்புகளை பெறவும் இந்த தளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. பல லட்சம், பகுதி நேர வேலை வாய்ப்புகள் இந்த தளத்தில் இடம்பெற்றிருப்பதால், முக்கியமான Freelancer பணிகளை இந்த தளம் தவற விடுவதில்லை. ஏல முறையில் பணி வாய்ப்புகளை வழங்கும் இந்த தளத்தில், Freelancer-களுக்கான கட்டணம் 100% கிடைப்பதை உறுதி செய்ய escrow payment முறையும் பயன்படுத்தப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட இணையதளங்கள்( Top Freelancing Sites In India ), இந்தியாவில் Freelancer பணிகளை கொடுக்கும் சிறந்த தளங்களாக திகழ்ந்து வருகின்றன. குறிப்பாக ஸ்டார்ட் அப் எனப்படும் புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்கள் மட்டுமின்றி, சிறு, குறு நிறுவனங்கள் தங்களின் பணிகளை முடிக்க, இதுபோன்ற இணையதளங்களிலேயே பணி வாய்ப்புகளை அளிக்கின்றன. அந்த வகையில், Freelancer பணிகள் மூலம் வருவாய் ஈட்ட நினைப்பவர்களுக்கு, இந்த தளங்கள் உதவிகரமாக இருக்கும். 

இதுதவிர Facebook போன்ற சமூக வலைதளங்களிலும் உள்ளூர் Freelancer பணிகள் பற்றிய விவரங்கள் கிடைக்கும். இதற்கென்றே தனி குழுக்களும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக இயங்குகின்றன. ஆனால், இதில் கவனிக்க வேண்டிய விஷயம், Freelancer பணி வழங்கும் நிறுவனத்தின் நம்பகத்தன்மை மற்றும் கட்டணம் நிச்சயம் கிடைக்குமா? என்பது போன்ற விவரங்களை, Freelancer பணி மேற்கொள்பவர் உறுதி செய்து கொள்ள வேண்டும். 





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *